Home
Mobile

பொளந்து கட்டுது விற்பனை.. ரூ.19,000 விலை குறைப்பு.. 3D டிஸ்பிளே.. 100W சார்ஜிங்.. SONY கேமரா.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) வெளியாக இருக்கிறது. இந்த வெளியீட்டை முன்னிட்டு முந்தைய மாடல்களுக்கு அதிரடியாக விலைக்கு குறைப்பு செய்யப்பட்டுள்ளது. சோனி சென்சார் கேமரா, 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 100W சார்ஜிங், 5400mAh பேட்டரி மற்றும் 12 ஜிபி ரேம் கொண்ட ஒன்பிளஸ் 12 (OnePlus 12) போனுக்கு நம்ப முடியாத விலை குறைப்பு கிடைக்கிறது. பிரீமியம் மாடலாக வெளியாகி விலை குறைப்பு காரணமாக மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுகுறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

காம்பாக்ட் டிசைனில் பிரீமியம் மாடலாக ஒன்பிளஸ் 13எஸ் இன்று வெளியாக இருக்கிறது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdrogon 8 Elite) சிப்செட், ஏஐ பிளஸ் மைண்ட் (AI Plus Mind), பிளஸ் கீ (Plus Key) போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் களமிறங்க இருக்கிறது. இதனால், ஒன்பிளஸ் பிரியர்கள் குஷியாக இருக்கின்றனர்.

பொளந்து கட்டுது விற்பனை.. ரூ.19,000 விலை குறைப்பு.. 3D டிஸ்பிளே மாடல்!

இந்த நேரத்தில் முன்னதாக வெளியான ஒன்பிளஸ் மாடல்களுக்கு விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் கிடைப்பதால், ஒன்பிளஸ் பிரியர்களுக்கு டபுள் ட்ரீட்டாக மாறி இருக்கிறது. இதில் ரூ.19,000 விலை குறைப்பில் ஒன்பிளஸ் 12 போன் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இதில் பேங்க் டிஸ்கவுண்ட் அடங்குகிறது. முதலில் பீச்சர்களை பார்த்துவிட்டு விலை விவரங்களுக்கு செல்லலாம்.

ஒன்பிளஸ் 12 அம்சங்கள் (OnePlus 12 Specifications): இந்த போனில் 6.82 இன்ச் (3168 x 1440 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த 3டி கர்வ்ட் டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் கிடைக்கிறது. பிரீமியம் மாடலாக இருப்பதால், கியூஎச்டிபிளஸ் (QHD+) ரெசொலூஷன், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. பிரீமியமான பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 ஆக்டா கோர் (Snapdragon 8 Gen 3 Octa Core) சிப்செட் கிடைக்கிறது. ஆக்ஸிஜன்ஓஎஸ் 14 (OxygenOS 14) பேஸ்டு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) இந்த போனில் கிடைக்கிறது. இது பழைய வெர்ஷன் போல தோன்றலாம்.

ஆனால், இந்த போனுக்கு 4 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கிறது. சிப்செட்டுக்கு ஏற்ப அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. டிஸ்பிளே, சிப்செட் மட்டுமல்லாமல், கேமராவிலும் பிரீமியம் காட்டி இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 48 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 64 எம்பி டெலிபோட்டோ கேமராவில் பிரீமியம் சென்சார்கள் உள்ளன.

ஆகவே, மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டி808 (Sony LYT808) சென்சாரும், அல்ட்ரா வைடில் சோனி ஐஎம்எக்ஸ்581 (Sony IMX581) சென்சாரும் டெலிபோட்டோவில் ஓம்னிவிஷன் ஓவி64பி (Omnivision OV64B) சென்சாரும் வருகிறது. அதேபோல சோனி ஐஎம்எக்ஸ்615 (Sony IMX615) சென்சாரானது, 32 எம்பி செல்பீ ஷூட்டரில் கிடைக்கிறது. 3X ஆப்டிகல் ஜூமிங், 6X இன்சென்சார் ஜூமிங் உள்ளது.

மேலும், 120X டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது. இந்த ஒன்பிளஸ் 12 போனில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5400mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 50W வயர்லெஸ் சார்ஜிங் வருகிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.64,999ஆக இருந்தது. அமேசான் தளத்தில் ரூ.51,999 விலைக்கு வருகிறது. அதோடு ரூ.6,000 உடனடி பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ஆகவே, ரூ.19,999 விலை குறைப்பு போக ரூ.45,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு மூலம் இந்த டிஸ்கவுண்ட்டை பெற்று கொள்ளலாம். ஒன்பிளஸ் 13எஸ் போனானது, ரூ.50,000 முதல் ரூ.55,000 பட்ஜெட்டில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆனால், இதைவிட அதிகமான பட்ஜெட்டில் ஒன்பிளஸ் 12 வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
OnePlus 12 With 12GB RAM Gets Price Drop Ahead Of OnePlus 13s India Launch Check Specs Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X