Home
Mobile

ஆர்டர் பிச்சிக்குது.. ரூ.13,002 டிஸ்கவுண்ட்.. SONY கேமரா.. 100W சார்ஜிங்.. 5400mAh பேட்டரி.. எந்த மாடல்?

அமேசான் (Amazon) தளத்தில் ஒன்பிளஸ் 12 (OnePlus 12) போனுக்கு ரூ.13,002 தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடி மட்டுமல்லாமல், குறிப்பிட்ட பேங்க் கார்டுகளுக்கு கூடுதலாக ரூ.6,000 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. ஒட்டுமொத்தமாக அதிக தள்ளுபடி கிடைப்பதால், ஆர்டருக்கு மேல் ஆர்டர் வருகிறது. இந்த ஒன்பிளஸ் 12 மாடலுக்கு கிடைக்கும் பீச்சர்கள், விலை மற்றும் தள்ளுபடி விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இதுவொரு மிட்-ரேஞ்ச் மாடலாக இருக்கிறது. ஆகவே, அதற்கு ஏற்ப சோனி சென்சார் கேமரா, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 5400mAh பேட்டரி, 12 ஜிபி ரேம் மற்றும் 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.64,999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆர்டர் பிச்சிக்குது.. ரூ.13,002 டிஸ்கவுண்ட்.. SONY கேமரா.. எந்த மாடல்?

ஆகவே, அமேசான் தளத்தில் ரூ.13,002 விலை குறைப்பு போக ரூ.51,997 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலைக்கு எந்த கார்டுகள் மூலமும் ஆர்டர் செய்ய வேண்டியது கிடையாது. இதுபோக கூடுதலாக பேங்க் தள்ளுபடி வேண்டுமானால், குறிப்பிட்ட பேங்குகளில் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.6,000 உடனடி தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

இந்த உடனடி தள்ளுபடியையும் பெற்றால், ரூ.47,997 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது. இது கிட்டத்தட்ட ரூ.20,000 தள்ளுபடியில் கிடைக்கும் விலையாக இருக்கிறது. இதனாலேயே, அமேசான் தளத்தில் ஆர்டருக்கு மேல் ஆர்டர் செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை மட்டும் காரணமாக இல்லை. பீச்சர்களும் தரமாகவே கிடைக்கிறது.

இந்த ஒன்பிளஸ் 12 போனானது, 2024ஆம் ஆண்டு வெளியாகி இருப்பதால், உங்களுக்கு பழைய மாடல் போல தோன்றலாம். ஆனால், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) போக 4 வருடங்களுக்கு அடுத்த ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட் கொடுக்கிறது. ஆகவே, லேட்டஸ்ட் மாடல்களுக்கு துளியும் குறையில்லாத யுஐ எதிர்பார்க்க முடியும்.

ஆர்டர் பிச்சிக்குது.. ரூ.13,002 டிஸ்கவுண்ட்.. SONY கேமரா.. எந்த மாடல்?

அதே நேரத்தில் டிஸ்பிளே தொடங்கி பேட்டரி பீச்சர்கள் வரையில் பிரீமியமாக பெற்று கொள்ளலாம். டிசைனை பார்க்கையில், 3டி கர்வ்ட் டிஸ்பிளே மற்றும் ஹாசர்பிளாட் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. மெட்டாலிக் மிடில் ஃபிரேம், அலெர்ட் ஸ்லைடர் கிடைக்கிறது. கிளாசியல் ஒயிட், ப்ளோவி எம்ரால்டு மற்றும் சில்கி பிளாக் கலர்களில் கிடைக்கிறது.

ஒன்பிளஸ் 12 அம்சங்கள் (OnePlus 12 Specifications): கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) பாதுகாப்பு கொண்ட 6.82 இன்ச் (3168 x 1440 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் கியூஎச்டிபிளஸ் (QHD+) ரெசொலூஷன் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் & 2160Hz PWM டிம்மிங் உள்ளது.

50 எம்பி மெயின் கேமரா (சோனி எல்ஒய்டி808) + 48 எம்பி அல்ட்ரா வைடு கேமரா (சோனி ஐஎம்எக்ஸ்581) + 64 எம்பி டெலிபோட்டோ கேமரா (ஓம்னிவிஷன் ஓவி64பி) கொண்ட அல்ட்ரா பிரீமியம் டிரிபிள் ரியர் கேமரா கிடைக்கிறது. 120X டிஜிட்டல் ஜூமிங் செய்து கொள்ளலாம். 32 எம்பி செல்பீ கேமரா (சோனி ஐஎம்எக்ஸ்615) கிடைக்கிறது.

ஆக்ஸிஜன்ஓஎஸ் 14 (OxygenOS 14) மற்றும் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Octa Core Snapdragon 8 Gen 3) சிப்செட் கிடைக்கிறது. பேட்டரி பேக்கப் விரும்பும் பிரியர்களுக்காக 5400mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 12 With 12GB RAM Gets Discount Available Under Rs 52000 Check Amazon Offer Check New Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X