அதிரும் மார்க்கெட்.. 100W சார்ஜிங்.. 64MP கேமரா.. டிச. 4-ம் தேதி வருகிறது புதிய OnePlus போன்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனை வரும் டிசம்பர் 4-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த ஒன்பிளஸ் 12 போன் முதலில் சீனாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு உலக சந்தை மற்றும் இந்திய சந்தைகளில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஸ்னாப்டிராகன் சிப்செட், ட்ரிபிள் ரியர் கேமரா, ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3) உடன் இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் 12 அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேசமயம் வீடியோ எடிட்டிங், கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் + 48 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் டெலிஃபோட்டோ கேமரா + 64 மெகாபிக்சல் ஓம்னிவிஷன் ஓவி64பி கேமரா (OmniVision OV64B camera)என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா உடன் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் இந்த ஒன்பிளஸ் 12 போன் அறிமுகமாகும்.
எனவே இந்த ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஒன்பிளஸ் 12 போன் விற்பனைக்கு வரும். மேலும் இந்த போனில் OxygenOS 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் உள்ளது.
ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்பு இந்த போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.
6.82-இன்ச் க்யூஎச்டி பிளஸ் (1440 x 3168 பிக்சல்ஸ்) கர்வ்டு லோ டெம்ப்ரேச்சர் பாலிகிரிஸ்டலின் ஆக்சைடு (LTPO - Low-temperature polycrystalline oxide) டிஸ்பிளேவைக் கொண்டு இந்த ஒன்பிளஸ் 12 போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2160ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் (2,160Hz PWM dimming), 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

குறிப்பாக இந்த போனில் இன்ஃப்ராரெட் சென்சாரும் (Infrared Sensor) இடம்பெறும். இது டிவிக்கு ரிமோட் கண்ட்ரோலாக (TV Remote Control) பயன்படுத்த அனுமதிக்கும் ஒரு அம்சமாகும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது.
இந்த ஒன்பிளஸ் 12 போன் 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 5400 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகமாகும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். பின்பு சில நிமிடங்களில் இந்த பேட்டரியை சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








