Home
Mobile

அதிரவிடும் விலை.. 100W சார்ஜிங், 64எம்பி கேமரா.. நாளைக்கு லான்ச் ஆகும் OnePlus போன்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனை வரும் ஜனவரி 23-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் இந்திய விலை மற்றும் சலுகைகள் குறித்த தகவல்கள் தற்போது ஆன்லைனில் வெளியாகி உள்ளது. எனவே இப்போது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் அம்சங்கள், விலை, சலுகைகள் உட்பட அனைத்து தகவல்களையும் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இந்தியாவில் நாளைக்கு லான்ச் ஆகும் OnePlus போன்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் 12 அம்சங்கள் (OnePlus 12 specifications): 6.82-இன்ச் QHD+ 2கே ஒஎல்இடி எல்டிபிஒ (2K OLED LTPO) டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். பின்பு 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (4,500 nits of peak brightness), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 chipset) வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த ஸ்மார்ட்போனில், வீடியோ எடிட்டிங் ஆப்ஸ், கேமிங் ஆப்ஸ் உட்பட அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

ஒஐஎஸ் ஆதரவு கொண்ட 50எம்பி சோனி LYT-808 பிரைமரி கேமரா + 48எம்பி சோனி IMX581 அல்ட்ரா வைடு லென்ஸ் + 64எம்பி 64MP OV64B 3X பெரிஸ்கோப் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி சோனி IMX615 கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். பின்பு இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன்.

இந்தியாவில் நாளைக்கு லான்ச் ஆகும் OnePlus போன்.. எந்த மாடல்?

குறிப்பாக 5400எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும்.

ஒன்பிளஸ் 12 விலை: 12ஜிபி ரேம் கொண்ட ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ரூ.64,999 விலையிலும், இதன் 16ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட் ரூ.69,999 விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இந்த ஒன்பிளஸ் 12 போனுக்கு அறிமுக சலுகையாக ரூ.8000 வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 12 will be launched in India tomorrow: check specifications, price, Sale date
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X