Home
Mobile

எவ்ளோ லேட் ஆனாலும்.. ஏன் OnePlus 12-ஐ வெயிட் பண்ணி வாங்கணும்? 10 அல்டிமேட் காரணங்கள்!

அடுத்த 2 மாதங்களுக்கு, அதாவது 2024 ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்படும் வரை ஒன்பிளஸ் 12 (OnePlus 12) பற்றிய பேச்சுக்கள் அடிபட்டு கொண்டேதான் இருக்கும். ஒருவேளை ஒன்பிளஸ் 12 மீது உங்களுக்கொரு கண் இருந்தால் அது என்னென்ன மேம்பாடுகளை பெறும் என்கிற விவரங்கள் இதோ:

01. பிரகாசமான டிஸ்பிளே: ஒன்பிளஸ் 12-இல் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட ஒரு அம்சம் அதில் இடம்பெறவுள்ள புதிய டிஸ்பிளே ஆகும். பேனலின் அளவு உறுதிப்படுத்தவில்லை, இது மீண்டும் 6.8 இன்ச் ஆக இருக்கும் என்று நம்பப்படுகிறது, மேலும் இது 2,600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான OLED பேனலை பெறுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 11-இல் 1300 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸே உள்ளது.

ஏன் OnePlus 12-ஐ வெயிட் பண்ணி வாங்கணும்?

02. 2160ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங்: ஒன்பிளஸ் 12-இல் இடம்பெறவுள்ள மற்றொரு முக்கிய அம்சம் PWM டிம்மிங் ஆகும். சமீபத்தில், ஹானர் 90 ஸ்மார்ட்போனில் சேர்க்கப்பட்ட 3,840Hz PWM டிம்மிங்குடன் ஒப்பிடுகையில் இது சற்றே குறைவு தான். இருப்பினும் மற்ற ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும் போது, இது மிக சிறந்ததாக இருக்கும்.

03.சோனி LYTIA மெயின் ரியர் கேமரா: ஒன்பிளஸ் 12-இல் உறுதிப்படுத்தப்பட்ட மற்றொரு அம்சம் - அதன் மேம்படுத்தப்பட்ட மெயின் கேமராவாகும். இது ஒரு புதிய Sony LYTIA சென்சார் ஆகும்.​​இது ஒன்பிளஸ் ஓப்பனில் உள்ள அதே கேமராவாக இருக்கலாம் அல்லது இது முற்றிலும் புதிய சென்சாராக கூட இருக்கலாம். ஆனால் நிச்சயம் மிகப்பெரிய கேமரா அப்கிரேட் ஆக இருக்கும்.

ஏன் OnePlus 12-ஐ வெயிட் பண்ணி வாங்கணும்?

04. மேம்படுத்தப்பட்ட டெலிஃபோட்டோ கேமரா: ஒன்பிளஸ் 12-இல் ஒரு புத்தம் புதிய டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது பெரிஸ்கோப் லென்ஸாக இருக்கலாம். தெரியாதவர்களுக்கு, பெரிஸ்கோப் லென்ஸ்கள் 10எக்ஸ் ஆப்டிகல் ஜூம் வழங்குக்கினறன. இதுவரை எந்த ஒன்பிளஸ் போனிலும் பெரிஸ்கோப் லென்ஸ் இடம்பெறவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

05. ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3: ஒன்பிளஸ் 12இல் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சேர்ப்பதை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் குவால்காமின் இந்த லேட்டஸ்ட் சிப்செட் தான் 2024 ஆம் ஆண்டில் வெளியாகும் பல முக்கிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு சக்தி அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆக இதுவே பெரும்பாலும் ஒன்பிளஸ் 12இல் இடம்பெறும்.

ஏன் OnePlus 12-ஐ வெயிட் பண்ணி வாங்கணும்?

06. அதிக ரேம் மற்றும் ஸ்டோரேஜ்: ஒன்பிளஸ் 11 இரண்டு வகைகளில் வருகிறது - 8ஜிபி + 128ஜிபி மற்றும் 16ஜிபி + 256ஜிபி. ஆனால் ஒன்பிளஸ் 12இன் பேஸிக் வேரியண்ட் 12ஜிபி ரேமில் தொடங்கும் ஒரு பெரிய வாய்ப்பு உள்ளது. டாப்-எண்ட் வேரியண்ட் ஆனது 24ஜிபி வரை செல்லலாம். இதேபோல் இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆனது 512ஜிபி வரை செல்லலாம்.

07. பெரிய பேட்டரி: ஒன்பிளஸ் 10 ப்ரோ மற்றும் ஒன்பில்ஸ் 11 ஆகியவைகள் 5000mAh பேட்டரியை கொண்டிருந்தன. ஆனால் ஒன்பிளஸ் 12இல் சற்றே பெரிய 5400mAh பேட்டரி பேக் செய்யப்படலாம். இது லேட்டஸ்ட் சிப்செட் மற்றும் புதிய மென்பொருளுடன் இணைந்து மிகவும் சிறப்பாக செயல்படும் என்றும், இது ஒன்பிளஸ் 11-ஐ போலவே 100வாட்ஸ். வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

08. 50வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்: சார்ஜிங் பற்றி பேசுகையில், ஒஒன்பிளஸ் 12இல் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவும் இருக்கலாம். முன்னதாக இது ஒன்பிளஸ் 11 உடன் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வரவில்லை. ஆக பெரும்பாலும் இது ஒன்பிளஸ் 12இல் இடம்பெறலாம். இதில் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவு இருக்கலாம்.

09. ஓரளவு மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு: ஒன்பிளஸ் 11 உடன் ஒப்பிடும் போது ஒன்பிளஸ் 12 ஆனது மிகப்பெரிய அளவிலான மறுவடிவமைப்பை பெறும் என்று யாரும் எதிர்பார்க்க வேண்டாம்; சிறிய அளவிலான மாற்றங்களையே பெறும். இன்னும் மெலிதான பெஸல்களை பெறலாம். பக்கவாட்டில் உள்ள ஹோல்-பஞ்ச் மையத்திற்கு நகரலாம், அலெர்ட் ஸ்லைடர் இடது பக்கமாக நகரலாம், வால்யூம் பட்டன்கள் வலதுபுறத்தில் உள்ள பவர் பட்டனுக்கு மேலே செல்லலாம்.

10. ஐபி68 ரேட்டிங்: கடைசியாக, ஒன்பிளஸ் ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்க்கும் ஐபி ரேட்டிங், ஒன்பிளஸ் 12இல் இடம்பெறலாம். மேற்கண்ட மேம்பாடுகள் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் விலையை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்பதையும் நினைவில் கொள்ளவும். இந்தியாவில் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் ரூ.80,000 பட்ஜெட்டை தொடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 12 VS OnePlus 11 Upgrades Dispaly Camera Battery More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X