OnePlus ருத்ர தாண்டவம்.. 100W சார்ஜிங்.. 5400mAh பேட்டரி.. 50MP + 64MP பெரிஸ்கோப் கேமரா.. என்ன மாடல்?
"தன்னுடன் மோதுவதற்கு தனித்தகுதி வேண்டும்!" என்பதை, தன் போட்டியார்களுக்கு நிரூபிக்கும் வன்ணம் ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனமானது "ஏலியன் லெவலில்" ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. அதென்ன மாடல்? அது என்னென்ன அம்சங்கள் பேக் செய்யும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:
அந்த மாடல் - ஒன்பிளஸின் அடுத்த பிலாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 12 (OnePlus 12) தான். இந்த 2023 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 2 ஒன்பிளஸ் போன்களில் இதுவும் ஒன்றாகும்; மற்றொன்று - ஒன்பிளஸின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்போனான (First Foldable Smartphone) ஒன்பிளஸ் ஓப்பன் (OnePlus Open) ஆகும்.

ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் ஆனது ரூ.1 லட்சத்திற்கு அருகில் இருக்கும் என்பதால் பலரும் அதைதொரு காட்சி பொருளாகவே எதிர் நோக்குகின்றனர். ஆனால் ஒன்பிளஸ் 12 அப்படி இல்லை; இதுவரை இல்லாத அளவிலான அம்சங்களை பேக் செய்வதால், ஒன்பிளஸ் 12 மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது!
குறிப்பாக சீனாவின் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station - DCS) வழியாக கிடைத்துள்ள ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் கேமராக்களை (OnePlus 12 Camera) பற்றிய தகவல்கள் மொபைல் போட்டோகிராஃபி (Mobile Photography) ஆர்வலர்கள் மிரள செய்துள்ளது என்றே கூறலாம். டிசிஎஸ்-இன் கூற்றுப்படி ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறும்.
அதில் ஐஓஎஸ் (OIS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) ஆதரவு உடனான 50-மெகாபிக்சல் மெயின் கேமரா + 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா + 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 64-மெகாபிக்சல் ஆம்னிவிஷன் ஓவி64பி பெரிஸ்கோப் ஜூம் (OmniVision OV64B Periscope Zoom) கேமரா இருக்கும்.
ஒன்பிளஸ் 11 (OnePlus 11) உட்பட முன்னதாக வெளியான சில ஒன்பிளஸ் ஃபிளாக்ஷிப் மடல்களை போலவே ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப்பும் கூட ஹசல்பிளாட் (Hasselblad) மேம்படுத்தல்களுக்கான ஆதரவுடன் வரும். முன்பக்கத்தில், செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான பொறுப்பை 32 மெகாபிக்சல் கேமரா பார்த்துக்கொள்ளும்.
இதுதவிர்த்து ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் 6.7-இன்ச் அளவிலான கர்வ்டு எட்ஜ்களை (Curved Edges) கொண்ட அமோஎல்இடி எல்டிபிஓ (AMOLED LTPO) டிஸ்பிளே இடம்பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2கே ரெசல்யூஷன் (2K Resolution) மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் போன்ற ஆதரவுகளும் இடம்பெறலாம்.
ப்ராசஸரை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 Chipset) மூலம் இயக்கப்படலாம். அறியாதோர்களுக்கு இந்த சிப்செட் இன்னும் அறிமுகமாகவில்லை. இது குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் உச்சி மாநாடு 2023 நிகழ்வில் (Qualcomm's Snapdragon Summit 2023 Event) அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாஃப்ட்வேரை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில், அதனுடன் நிறுவனத்தின் சொந்த ஆக்சிஜன்ஓஎஸ் 14 (OxygenOS 14) உடன் கஸ்டமைஸ்டு செய்யப்பட்டு இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
கடைசியாக ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது சற்றே பெரிய 5,400mAh பேட்டரியை பேக் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் இது 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் (Wired Fast Charging) மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான (Wireless Charging) ஆதரவு சேர்க்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? ஸ்மார்ட்பிரிக்ஸின் கூற்றுப்படி, ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது தோராயமாக ரூ.60,999 க்கு அறிமுகம் செய்யப்படலம். இந்த ஸ்மார்ட்போனின் சீன அறிமுகம் டிசம்பர் மாத வாக்கில் நடக்கும்; அதனை தொடர்ந்து உலகளாவிய அறிமுகம் ஜனவரி 2024 இல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Photo Courtesy: Onleaks and Smartprix


Click it and Unblock the Notifications








