மிரண்டு போவீங்க.. 24GB ரேம்.. 1TB மெமரி.. 100W சார்ஜிங்.. 120X கேமரா.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் அதிரும்படி 120X டிஜிட்டல் ஜூமிங் கேமரா, 24ஜிபி ரேம், 1 டிபி மெமரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற அதி பிரம்மாண்டமான அம்சங்களுடன் ஒன்பிளஸ் 12 (OnePlus 12) போன் வெளியாக இருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.
ஒன்பிளஸ் பிரியர்களை மட்டுமல்லாமல், மற்ற பிராண்ட் பிரியர்களின் எதிர்பார்ப்பையும் எகிற வைத்த ஒன்பிளஸ் 12 போனின் முக்கிய அம்சங்கள் இப்போது, கசிந்துள்ளன. இந்த அம்சங்களே மார்கெட் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கின்றன. இந்த கசிந்த அம்சங்கள், விலை மற்றும் வெளியீட்டு விவரங்கள் பின்வருமாறு.

ஒன்பிளஸ் 12 அம்சங்கள் (OnePlus 12 Specifications): இந்த ஒன்பிளஸ் போன் 6.82 இன்ச் (1440 x 3168 பிக்சல்கள்) கியூஎச்டிபிளஸ் (QHD+) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு கர்வ்ட் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் லோவ்-டெம்பரேச்சர் பாலிகிரிஸ்டலின் ஆக்சைடு (Low Temperature Polycrystalline Oxide) டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதோடு 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. இந்த ஒன்பிளஸ் 12 போனில் கூகுள் பிக்சல் 8 மாடல்களுக்கு அடுத்தபடியாக ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14) கொடுக்கப்படுகிறது. அதோடு கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) வருகிறது.
அதேபோல ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 மொபைல் (Octa Core Snapdragon 8 Gen 3 Mobile) சிப்செட் மற்றும் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த போன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்களில் வெளியாகிறது.
அதேபோல 24 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் இருக்கிறது. இந்த போனில் பிரம்மாண்ட ஹசல்பிளாட் கேமரா சிஸ்டம் (Hasselblad Camera System) வருகிறது. ஆகவே, ஐஎம்எக்ஸ்66 (IMX966) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.
அதோடு ஐஎம்எக்ஸ்581 (IMX581) சென்சார் கொண்ட 48 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 64 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது. இந்த டெலிபோட்டோவில் ஓம்னிவிஷன் ஓவி64பி (OmniVision OV64B) சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஹசல்பிளாட் கேமரா சிஸ்டம் 3X ஆப்டிகல் ஜூமிங் (3X Optical Zoom) மற்றும் 120X டிஜிட்டல் ஜூமிங் (120X Digital Zoom) சப்போர்ட் கொண்டிருக்கிறது.
அதேபோல 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கொண்டிருக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனின் பேட்டரி அம்சம் பிரம்மிக்க வைக்கிறது.
இதில் 100W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5400mAh பேட்டரிவ வருகிறது. இந்த பேட்டரியில் 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டைப்-சி சார்ஜிங் போர்ட் வருகிறது. இந்த போனில் கனெக்டிவிட்டி அம்சங்களாக ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), வை-பை 6 (Wi-Fi 6), டூயல் பேண்ட் ஜிபிஎஸ் (Dual Band GPS) வருகிறது.
அதேபோல 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) மற்றும் என்ஃஎப்சி (NFC) போன்ற அம்சங்கள் இருக்கின்றன. இந்த போன் கிரே (Grey), வைட் (White) ஆகிய கலர்களில் வெளியாகிறது. இந்த ஒன்பிளஸ் மாடல் முதலில் சீனாவில் வெளியாகும். அதன்பின்பு அடுத்தடுத்த நாடுகளில் வெளியாகும். வரும் டிசம்பரில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் மாடல்களிலேயே அதிகபட்ச கேமரா செட்டப் மற்றும் பேட்டரி அம்சங்களை கொண்ட போனாக இந்த ஒன்பிளஸ் 12 போன் இருப்பதால், உலகளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டுள்ளது. இந்த போனின் ஆரம்ப விலை ரூ.65,000 முதல் ரூ.75,000 வரையிலான பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








