Home
Mobile

இந்த சான்ஸை விட்றாதீங்க.. OnePlus 13 அறிமுகத்தையொட்டி OnePlus 12 மீது ரூ.11,900 விலை குறைப்பு!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 13 மற்றும் லேட்டஸ்ட் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 13ஆர் ஆகிய இரண்டும் ஜனவரி 7 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், பிளிப்கார்ட் வலைத்தளமானது ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போனின் மீது அபார விலைகுறைப்பை அறிவித்துள்ளது.

தற்போது பிளிப்கார்ட் வலைத்தளத்தில், ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் , க்ளேஷியல் ஒயிட் (Glacial White) ஆப்ஷன் ஆனது, அசல் அறிமுக விளையான ரூ.64,999க்கு பதிலாக 18% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.53,057 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது இந்த வேரியண்ட் மீது ரூ.11,942 நேரடி தள்ளுபடி கிடைக்கிறது.

OnePlus 13 அறிமுகத்தையொட்டி OnePlus 12 மீது ரூ.11,900 விலை குறைப்பு!

மேலும் பிளிப்கார்ட் ஆக்சிஸ் (Flipkart Axis) வங்கி கிரெடிட் கார்ட்டை பயன்படுத்தி ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 5% கேஷ்பேக் சலுகை கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதோடு மாதம் ரூ.1,866 முதல் தொடங்கும் இஎம்ஐ விருப்பங்களையும் கூட வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

மிகவும் சமீபத்தில் தான் (2024 டிசம்பர் மாதத்தில் தான்) ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனிற்கான புதிய ஓஎஸ் அப்டேட் வெளியானது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அது ஆக்ஸிஜன்ஓஎஸ் 15.0.0.404 அப்டேட் ஆகும். இது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனிற்கு புதிய ஏஐ அம்சங்கள், கேமரா அப்டேட்கள் மற்றும் சிஸ்டம் அப்டேட்களை கொண்டு வந்துள்ளது.

இந்த அப்டேட்டின் வழியாக ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் ஏஐ ரிப்ளை, ஏஐ செக் மற்றும் ஏஐ ரீரைட் ஆகிய புதிய ஏஐ அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஏஐ ரிப்ளை அம்சம் வழியாக, நீங்கள் நிகழ்த்தி கொண்டு இருக்கும் ஒரு சாட் சூழலின் அடிப்படையில், உங்களுக்கான வெவ்வேறு மாதிரியான ரிப்ளைகள் பரிந்துரைக்கப்படும். அதில் இருந்து உங்களுக்கு தேவையான ஒன்றை தேர்வை செய்யலாம்.

ஏஐ செக் அம்சமானது இலக்கணம், நிறுத்தற்குறிகள் மற்றும் எழுத்துப்பிழைகளை சரிசெய்ய மற்றும் அவைகளை தவிர்க்க உதவும். ஏஐ ரீரைட் அம்சமானது பயனர்கள் தங்கள் உரையை நீளமாக நீட்டி அல்லது சுருக்கி அல்லது எழுதும் பாணியை மாற்ற உதவும். இந்த லேட்டஸ்ட் ஓஎஸ் அப்டேட்டின் வழியாக ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் செக்யூரிட்டி பேட்ச்சும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 13, ஒன்பிளஸ் 13ஆர் அறிமுக நிகழ்வின் லைவ் ஸ்ட்ரீம் விவரங்கள்: ஒன்பிளஸ் நிறுவனத்தின் சம்மர் லான்ச் இவென்ட் ஆனது ஜனவரி 7, 2025 அன்று உலகளவில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வையும், ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டையும் நேரலையில் பார்க்க விரும்புபவர்கள், இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு ஒன்பிளஸ்-ன் அதிகாரப்பூர்வ இணையதளம், யூட்யூப் சேனல் மற்றும் சமூக ஊடக தளங்களை அணுகலாம்.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.67,000 முதல் ரூ.70,000 க்குள் என்கிற விலையில் அறிமுகம் செய்யப்படலாம். மறுகையில் உள்ள ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் விலை ரூ .45,000 - ரூ.50,000 க்குள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சரியான விலை விவரங்கள் ஜனவரி 7 ஆம் தேதி இரவு 9 மணிக்கு தொடங்கும் வெயீட்டு நிகழ்வில் அறிவிக்கப்படும்.

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வரையிலான ஆதரவு கொண்ட 6.82-இன்ச் 2கே+ எல்டிபிஓ அமோஎல்இடி டிஸ்பிளே, ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் ப்ராசஸர், 50எம்பி + 50ம்பி + 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 32எம்பி செல்பீ கேமரா, 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் உடனான 6000எம்ஏஎச் பேட்டரி, ஐபி68 + ஐபி69 ரேட்டிங் ஆகியவைகளை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 12 Selling At Massive Discount Price in Flipkart Ahead OnePlus 13 India Launch on January 7
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X