Home
Mobile

ரூ.7000 விலை குறைப்பு.. இவ்ளோ சீப் ஆன விலைக்கு இனி கிடைக்காது.. இந்த OnePlus போன் மீது ஆர்டர் குவியுது!

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் புதிய நோர்ட் சீரீஸ் ஸ்மார்ட்போனை அறிமுகமாகும் முன்பே அதன் லேட்டஸ்ட் நம்பர் சீரீஸ் ஸ்மார்ட்போனின் விலை கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது. அறியதோர்களுக்கு, ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) ஸ்மார்ட்போனை நாளை (ஜூலை 16) மாலை 6.30 மணிக்கு நடக்கும் ஒன்பிளஸ் சம்மர் லான்ச் வெளியீட்டு நிகழ்வில் (OnePlus Summer Launch Event) அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 12 (OnePlus 12) மீது ரூ.7000 விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 12 மீதான இந்த சலுகை பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியா வழியாக அணுக கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்ட்டை பயன்படுத்தும் பட்சத்தில் ரூ.7,000 தள்ளுபடி கிடைக்கும். அதாவது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது அதன் அசல் விலையான ரூ.64,999 க்கு பதிலாக பேங்க் ஆபர் விளையான ரூ.57,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ரூ.7000 விலை குறைப்பு.. இந்த OnePlus போன் மீது ஆர்டர் குவியுது!

பேங்க் ஆபர் தவிர்த்து ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் மீது எக்ஸ்சேஞ்ச் ஆபரும் கிடைக்கும். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் ஒரு பகுதியாக உங்களுடைய பழைய ஸ்மார்ட்போனிற்கு ரூ.26,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும். நீங்கள் பரிமாற்றம் செய்யும் பழைய ஸ்மார்ட்போனின் "நிலையை" பொறுத்து, அமேசான் வழங்கும் எக்ஸ்சேஞ்ச் போனஸின் மதிப்பு வேறுபடும் என்பதையும் நினைவில் கொள்ளவும்.

சில மாதங்கள் பழைய மாடலான ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனை இப்போது நம்பி வாங்கலாமா? ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனை கண்களை மூடிக்கொண்டு வாங்கலாம். ஏனென்றால் இது வடிவமைப்பில் சில நுட்பமான மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. ப்ரோஎக்ஸ்டிஆர் (ProXDR) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) ஆதரவு உடனான 6.82-இன்ச் எல்டிபிஓ டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை பேக் செய்கிறது, பெர்ஃபார்மென்ஸை பொறுத்தவரை இது உண்மையிலேயே பிரமாதமாக உள்ளது. கூடவே இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஆக்ஸிஜன் 14 ஓஎஸ் உடன் வருகிறது. இது க்ளீன் ஆன இன்டர்பேஸை உறுதி செய்கிறது. இது பெரிய 5400mAh பேட்டரியை கொண்டுள்ளது. கூடவே அதிவேக 100W சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

கடைசியாக இது அட்டகாசமான கேமராக்களை பேக் செய்கிறது. இந்த போனில் 50எம்பி மெயின் கேமரா + 48எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் கேமரா + 3எக்ஸ் பெரிஸ்கோப் அல்லது ஆப்டிகல் ஜூம் கொண்ட 64எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மெயின் கேமராவானது நல்ல வெளிச்சத்தில் மட்டுமல்ல குறைந்த வெளிச்சத்திலும் கூட சிறப்பான போட்டோக்களை எடுக்கிறது.

ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? நம்பத்தகுந்த லீக் தகவலின்படி இந்த ஸ்மார்ட்போனின் ஆபர் விலை ரூ.27,999 ஆக இருக்கும். அநேகமாக இது பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாக இருக்ககலாம். இருப்பினும், மேற்க்கூறப்பட்ட விலை அனைத்து வங்கி தள்ளுபடிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். இதன் பொருள், ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை சுமார் ரூ.31,999 ஆக இருக்கலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் 4 ஆனது 4 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்களையும், 6 வருட செக்யூரிட்டி அப்டேட்களையும் பெறும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது 6 வருட செக்யூரிட்டி அப்டேட்களுடன் வரும் முதல் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் இதுவாக இருக்கும். ஒன்பிளஸ் நிறுவனம் அதன் பயனர்களுக்கு வழங்கிய மிகவும் நீளமான சப்போர்ட் பேக்கேஜ் இதுவாகவும்.

மேலும் இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2150 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடனான 6.74-இன்ச் 1.5கே ஓஎல்இடி டியன்மா யு8 பிளஸ் டிஸ்பிளேவை (1.5K OLED Tianma U8+ Display) கொண்டிருக்கலாம். ப்ராசஸரை பொறுத்தவரை, இது அட்ரினோ ஜிபியு உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 7+ Gen 3 SoC) மூலம் இயக்கப்படலாம்.

கேமராக்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போன் ஆனது 50 எம்பி ப்ரைமரி கேமரா + 8 எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கலாம். பேட்டரியை பொறுத்தவரை, இது 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,500mAh பேட்டரியை கொண்டு இருக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 12 Price Drop in Amazon India How To Buy this Phone For Rs 57999 Instead of Rs 64999
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X