Home
Mobile

மீண்டும் சர்ரென குறைந்தது OnePlus 5ஜி போன் விலை.. 100W சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுவதற்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் ஒன்பிளஸ் 12 (OnePlus 12) போனின் விலை குறைந்துள்ளது. அதாவது அமேசான் தளத்தில் தற்போது இந்த ஒன்பிளஸ் 12 போனை குறைந்த விலையில் வாங்க முடியும். இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

தற்போது அமேசான் தளத்தில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 12 போனுக்கு 8 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.59,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ICICI வங்கி கிரெடிட் கார்டை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.7000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.52999 விலையில் வாங்கிவிட முடியும்.

மீண்டும் சர்ரென குறைந்தது OnePlus 5ஜி போன் விலை.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் 12 அம்சங்கள் (OnePlus 12 Specifications): 6.82 இன்ச் குவாட் எச்டிபிளஸ் ( (Quad HD+) 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது ஒன்பிளஸ் 12 போன். 3168 × 1440 பிக்சல்ஸ், 2K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் இதன் டிஸ்பிளேவில் உள்ளன.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் மொபைல் (Octa Core Snapdragon 8 Gen 3 Mobile) சிப்செட் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆக்ஸிஜன்ஓஎஸ் 14 (OxygenOS 14) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு 4 வருடங்களுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட் (Android Update) மற்றும் 5 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட் (Security Update) கிடைக்கும்.

தரமான அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போன் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும். மேலும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம். பின்பு 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த போன்.

இந்த ஒன்பிளஸ் 12 போன் 50 எம்பி சோனி எல்ஒய்டி 808 (Sony LYT-808) சென்சார் கொண்ட மெயின் கேமரா + 48 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்581 (Sony IMX581) சென்சார் கொண்ட அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 64எம்பி ஓம்னிவிஷன் ஓவி64பி (Omnivision OV64B) சென்சார் கொண்ட பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த போனின் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.

மீண்டும் சர்ரென குறைந்தது OnePlus 5ஜி போன் விலை.. எந்த மாடல்?

இதுதவிர 3X ஆப்டிகல் ஜூமிங், 6X இன்-சென்சார் ஜூமிங், 120X டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட் உள்ளது. மேலும் இந்த ஹசல்பிளாட் கேமரா சிஸ்டமானது (Hasselblad Camera System) 4ஆவது ஜெனரேஷன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 8K வீடியோ ரெக்கார்டிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் போன்.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி சோனி ஐஎம்எக்ஸ்615 (Sony IMX615) கேமரா கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 12 போன். இந்த செல்பி கேமரா உதவியுடன் 4K வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும். 5400mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W சூப்பர்வூக் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 12 price drop ahead of OnePlus 13 India launch event: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X