ரூ.5000 விலை குறைப்பு, ரூ.7000 டிஸ்கவுண்ட்.. அடிமட்ட விலையில் OnePlus 12.. OnePlus 13 அறிமுகம் சூடுபிடிக்குது!
இந்தியாவில் வருகிற 2025 ஜனவரி 7 ஆம் தேதி அன்று ஒன்பிளஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் 13 (OnePlus 13) அறிமுகம் செய்யப்பட உள்ள நிலைப்பாட்டில் ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போனின் விலை திடீரென குறைக்கப்பட்டு உள்ளது.
பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன அமேசான் இந்தியா மற்றும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஆகிய இரண்டிலுமே தற்போது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. ஒன்பிளஸ் 12 கிட்டத்தட்ட ஒரு வருடம் பழைய ஸ்மார்ட்போன் என்றாலும் கூட, 2024 ஆம் ஆண்டில் வெளியான பெஸ்ட் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. ஆகையால் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

ஒன்பிளஸ் 12 பழைய விலை vs தற்போதைய விலை: ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் 12ஜிபி + 256ஜிபி ஆப்ஷனின் விலை முதலில் ரூ.64,999 ஆகவும், 16ஜிபி + 512ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.69,999 ஆகவும் இருந்தது. இருப்பினும் அமேசான் மற்றும் ஒன்பிளஸ் இணையதளத்தில் இவ்விரு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களும் தற்போது முறையே ரூ.59,999 க்கும் மற்றும் ரூ.64,999 க்கும் வாங்க கிடைக்கிறது.
கூடுதலாக, ஐசிஐசிஐ வங்கி அல்லது ஒன்பேங்க் கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கும் போது ரூ.7,000 உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். இப்படியாக ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் இறுதி ஆபர் விலையை ரூ.52,999 க்கு கொண்டுவர முடியும். ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது சில்க்கி பிளாக் மற்றும் எமரால்டு கிரீன் ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கிறது.
மிகவும் சமீபத்தில் தான் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனிற்கான புதிய அப்டேட் வெளியானது. அது ஆக்ஸிஜன்ஓஎஸ் 15.0.0.404 அப்டேட் ஆகும். இது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனிற்கு புதிய ஏஐ அம்சங்கள், கேமரா அப்டேட்கள் மற்றும் சிஸ்டம் அப்டேட்களை கொண்டுவந்தது. கூடவே செக்யூரிட்டி பேட்ச்சும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 12-க்கு புதிதாக வந்துள்ள ஏஐ அம்சங்களில் - ஏஐ ரிப்ளை (AI Reply), ஏஐ செக் (AI Check) மற்றும் ஏஐ ரீரைட் (AI Rewrite) ஆகியவைகள் அடங்கும். ஏஐ ரிப்ளை அம்சம் வழியாக ஒரு சாட் சூழலின் அடிப்படையில் பயனர்கள் வெவ்வேறு பரிந்துரைக்கப்பட்ட பதில்களில் இருந்து தங்களுக்கான தேர்வை செய்யலாம். ஏஐ ரிப்ளை - உங்கள் நேரத்தை சேமிப்பதையும், உரையாடலை முடிந்தவரை இயல்பாக வைத்திருப்பதையும் உறுதி செய்யும்.
அடுத்ததாக உள்ள ஏஐ செக் ஆனது இலக்கணம், நிறுத்தற்குறிகள் மற்றும் எழுத்துப்பிழைகளை சரிசெய்வதற்கும், எழுத்துப்பிழைகளை தவிர்ப்பதற்கும் உதவும். கடைசியாக உள்ள ஏஐ ரீரைட் அம்சமானது பயனர்கள் தங்கள் உரையை நீளமாக நீட்டி அல்லது சுருக்கி அல்லது எழுதும் தொனி/பாணியை மாற்ற அனுமதிக்கும்.
கேமரா அப்டேட்களை பொறுத்தவரை இப்போது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில், போட்டோ மற்றும் போர்ட்ரெய்ட் மோட்களில் (Photo and portrait modes) கிடைக்கும் ஃப்ரெஷ் (Fresh), கிளியர் (Clear) மற்றும் எமரால்டு (Emerald) உள்ளிட்ட புதிய பில்டர்கள் (New Filters) கிடைக்கும். இதனுடன் புதிய கஸ்டம் வாட்டர்மார்க் அம்சமும் (Custom Watermark Feature) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதோடு புதுப்பிக்கப்பட்ட கேலெண்டர் ஆப் (Updated Calender App) மூலம், இப்போது பயனர்கள் ஆண்டுவிழாக்கள், பிறந்தநாள்கள், கவுண்டவுன்கள் மற்றும் பலவற்றைக் கண்காணிப்பதற்கான புதிய விட்ஜெட்களை தேர்வு செய்ய முடியும். சிஸ்டம் அப்டேட்களை பொறுத்தவரை, இப்போது லைவ் அலெர்ட்ஸ் (Live Alerts) ஆனது பிளாஷ் லைட் மற்றும் சார்ஜிங் தகவலை (Flashlight and charging information) காண்பிக்கும். முன்னரே குறிப்பிட்டபடி, ஒன்பிளஸ் 12 க்கான இந்த அப்டேட்டில் டிசம்பர் 2024 செக்யூரிட்டி பேட்ச்சும் அடக்கம்.


Click it and Unblock the Notifications








