அதிரி புதிரி ஆர்டர்.. 64எம்பி கேமரா.. முதல்முறையாக இந்த ஒன்பிளஸ் போனுக்கு விலைகுறைப்பு.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனுக்கு முதல்முறையாக விலைகுறைப்பு பெற்றுள்ளது. குறிப்பாக இந்த போன் 5400எம்ஏஎச் பேட்டரி, ஆண்டராய்டு 14 இயங்குதளம், பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பிளிப்கார்ட் தளத்தில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் முன்பு ரூ.64,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட விலைகுறைப்பின் மூலம் இந்த போனை ரூ.63,143 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது.

ஒன்பிளஸ் 12 அம்சங்கள் (OnePlus 12 specifications): 6.82-இன்ச் குவாட் எச்டி பிளஸ் கர்வ்டு அமோலெட் டிஸ்பிளே (Quad HD+ curved AMOLED display) உடன் இந்த போன் வெளிவந்தது. பின்பு 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), டிஸ்ப்ளேமேட் ஏ+ சான்றிதழ், கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு, 2160 ஹெர்ட்ஸ் பிடபிள்யூஎம் டிம்மிங் (PWM Dimming) உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன.
ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 chipset) வசதியைக் கொண்டு வெளிவந்தது. மேலும் ஆக்சிஜன்ஓஎஸ் 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 12 போன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். அதேபோல் இன்-டிஸ்பி கைரேகை ஸ்கேனர் வசதியைக் கொண்டுள்ளது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.
ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது ஒஐஎஸ் ஆதரவு கொண்ட 50எம்பி சோனி LYT-808 பிரைமரி கேமரா + 48எம்பி சோனி IMX581 அல்ட்ரா வைடு லென்ஸ் + 64எம்பி OV64B பெரிஸ்கோப் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த கேமராக்களின் உதவியுடன் 8கே வீடியோவை பதிவு செய்ய முடியும்.
அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி சோனி IMX615 கேமரா கொண்டுள்ளது இந்த போன். மேலும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி65 ரேட்டிங் பெற்றுள்ளது இந்த போன்.

ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் 5400எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W சூப்பர்வூக் வயர்டு சார்ஜிங் மற்றும் 50W ஏர்வூக் வயர்லெஸ் ஃபாஸட் சார்ஜிங் வசதி உள்ளன. அதேபோல் இந்த போனை 11 நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ் ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் போன். மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ad 2X2 MIMO, புளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.


Click it and Unblock the Notifications








