Home
Mobile

இந்த OnePlus 12 போன் மார்கெட்டையே தலைகீழா மாத்தப்போகுது.! வேறலெவல் கேமரா.! வெளியானது படங்கள்.!

ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஆண்டு பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்த ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் ஒரு அட்டகாசமான புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறது. தற்போது இந்த புதிய போனின் படங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளன.

அதாவது ஒன்பிளஸ் நிறுவனம் பிளாக்ஷிப் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனை தான் உருவாக்கி வருகிறது. இந்த புதிய போன் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்போது ஒன்பிளஸ் 12 போனின் ரெண்டர்கள் இணையத்தில் வெளிவந்துள்ளன. குறிப்பாக ஒன்பிளஸ் 11போனின் மேம்பட்ட வெர்ஷனாக உருவாகி வரும் ஒன்பிளஸ் 12 டிசைன் எப்படி இருக்கும் என்று தற்போதைய டீசர்களில் தெரியவந்துள்ளது.

இந்த OnePlus 12 போன் மார்கெட்டையே தலைகீழா மாத்தப்போகுது.!

@OnLeaks வெளியிட்டு இருக்கும் ரெண்டர்களில், ஒன்பிளஸ் 12 மாடல் மெல்லிய டிசைன், கிளாஸ் பிளாக் நிறம் மற்றும் ஒன்பிளஸ் பாரம்பரிய சான்ட்ஸ்டோன் ஃபினிஷன் செய்யப்பட்டு உள்ளது. பின்பு இந்த போன் தரமான வடிவமைப்புடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அதேபோல் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் கேமரா சென்சார்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் கூட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பின்பு ஒப்போ ரெனோ 10 போனில் இருக்கும் பெரிஸ்கோபிக் டெலிபோட்டோ லென்ஸ் செட்டப் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 12 மாடல். குறிப்பாக இதன் கேமரா மாட்யுல் பிளாக் நிற ஸ்ட்ரிப், ஹேசில்பிலாட் பிராண்டிங் கொண்டிருக்கிறது.

இந்த OnePlus 12 போன் மார்கெட்டையே தலைகீழா மாத்தப்போகுது.!

குறிப்பாக பெரிஸ்கோப் லென்ஸ்களை வைப்பதற்காக, எல்இடி பிளாஷ் கேமரா ஐலேன்ட்-இன் இடதுபுறத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறது. மேலும் ஒன்பிளஸ் 12 மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட மெல்லிய பெசல்களை கொண்டிருக்கிறது. பின்பு இத்துடன் பன்ச் ஹோல் டிசைன், ஸ்மார்ட்போனின் நடுவில் வைக்கப்பட்டு உள்ளது.

ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் வளைந்த 2கே டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு மெல்லிய பெசல்கள், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இந்த போன் பெரிய டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் உடன் இந்த ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக கேமிங், வீடியோ எடிட்டிங் போன்ற பயன்களுக்கு இந்த பிராசஸர் மிகவும் அருமையாக பயன்படும். பின்பு அட்ரினோ 750 ஜிபியு ஆதரவு இதில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெலும் 12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும்.

இந்த OnePlus 12 போன் மார்கெட்டையே தலைகீழா மாத்தப்போகுது.!

ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 64எம்பி ஆம்னிவிஷன் பெரிஸ்கோப் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த போன் வெளிவரும். அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே 32எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும். இதுதவிர 5000 எம்ஏஎச் பேட்டரி, 150 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும்.

photo courtesy: @OnLeaks, smartprix

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 12 phone to debut with Periscope camera: renders leaked online: check specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X