Hasselblad கேமரா.. 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்..இதுதான் புதிய ஒன்பிளஸ் போன்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் தனது அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது. அதாவது வரும் வாரங்களில் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஒன்பிளஸ் 12 போனின் புகைப்படங்கள் இணையதளத்தில் கசிந்துள்ளது.
அதன்படி இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஒன்பிளஸ் 12 போனின் முன்புறம் மெலிதான பெசல்கள் காணப்படுகின்றன. அதேபோல் வளைந்த டிஸ்பிளே மற்றும் செல்பி கேமராவிற்கான பஞ்ச்-ஹோல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்.

அதேபோல் இந்த போனின் பின்புறம் கேமரா பகுதியில் Hasselblad லோகோ உள்ளது. 'ஹாசல்பிளாட் கேமரா' (Hasselblad) என்ற கேமரா ஒரு சின்ன மொபைலுக்குள் அடங்கிவிட்டது. நம்மில் பெரும்பாலோனோர்க்கு 'ஹாசல்பிளாட்' கேமரா (Hasselblad) பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அதாவது போட்டோகிராபி துறையில் பல சாதனைகள் புரிந்த நிறுவனம் ஹாசல்பிளாட். நிலவுக்கு ஆம்ஸ்ட்ராங் சென்ற பொழுது நிலவில் படம் பிடிக்க நாசாவால் தேர்ந்தெடுக்கப்பட்டதும், இந்த நிறுவனத்தின் கேமராக்கள்தான். இந்த நிறுவனத்தின் கேமராக்களின் விலையை கேட்டால் சற்று மலைப்பாகத்தான் இருக்கும். இதனால்தான் என்னவோ இதனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அப்பேற்பட்ட கேமராவை இனி ஒன்பிளஸ் 12 போனில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த அசத்தலான ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்த போன் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும்.
அதாவது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் குவாட் எச்டி பிளஸ் கர்வ்டு அமோலெட் (Quad HD+ curved AMOLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவரும்.
ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் வசதி இந்த ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் OxygenOS 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும்.
முன்பு கூறியபடி, ஒன்பிளஸ் 12 போன் ஆனது ஹாசல்பிளாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதுவும் 50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 64எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த போன் வெளிவரும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுளுள்து இந்த ஒன்பிளஸ் 12 போன்.

யுஎஸ்பி டைப்-சி போர்ட், டைப்-சி போர்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் உள்ளிட்ட ஆடியோ அம்சங்களுடன் ஒன்பிளஸ் 12 போன் அறிமுகமாகும். பின்பு 100 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் 12 போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும்.
மேலும் இந்த ஒன்பிளஸ் 12 போனில் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. குறிப்பாக 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் ஐபோன் 15 மாடல்களுக்கு போட்டியாக இந்த ஒன்பிளஸ் 12 போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
photo courtesy: mysmartprice


Click it and Unblock the Notifications