அடுத்த 2 வாரத்துக்கு எந்த போனும் வாங்கிடாதீங்க.. வெயிட் பண்ணி இந்த 2 போன்ல 1 வாங்குங்க.. ஏன்னா விலை அப்படி!
இந்த 2024 ஆம் ஆண்டில்.. ஒரு தரமான பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை (Flagship Smartphone) வாங்க வேண்டும் என்று நீங்கள் திட்டமிட்டு இருந்தாலும் சரி அல்லது ஒரு லேட்டஸ்ட் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனை (Mid-range Smartphone) வாங்க வேண்டும் என்கிற யோசனையில் இருந்தாலும் சரி.. 2 வாரங்களுக்கு அமைதியாக இருக்கவும்.
ஏனென்றால் இன்னும் 2 வாரங்களில்.. சரியாக சொல்ல வேண்டும் என்றால் 2024 ஜனவரி 23 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாக உள்ள ஒன்பிளஸ் 12 (OnePlus 12) மற்றும் ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) ஸ்மார்ட்போன்களின் விலை நிர்ணயம் குறித்து நம்பகமான தகவலொன்று வெளியாகியுள்ளது.

ஸ்மூத் பியோண்ட் பிலிஃப் (Smooth Beyond Belief) நிகழ்வில் - இந்தியா உட்பட உலகளவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள ஒன்பிளஸ் 12 மற்றும் ஒன்பிளஸ் 12ஆர்-ன் அமெரிக்க விலை விவரங்கள் (US Price Details) ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது. டெக்பிளஸ் வழியாக கிடைத்த தகவல்களின்படி, ஒன்பிளஸ் 12 விலை ஒன்பிளஸ் 11-ஐ விட சற்றே அதிகமாக இருக்கும், ஆனால் ஒன்பிளஸ் 12ஆர் விலை மிகவும் மலிவாக இருக்கும்.
ஒன்பிளஸ் 12ஆர் விலை நிர்ணயம்: அமெரிக்காவில் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்பாடி தோராயமாக ரூ.35,000 க்கும், 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் தோராயமாக ரூ.35,000 க்கும் விற்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் 12 விலை நிர்ணயம்: அமெரிக்காவில் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்பாடி தோராயமாக ரூ.66,400 க்கும், 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் தோராயமாக ரூ.74,000 க்கும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 12-ன் இந்த விலை நிர்ணயமானது இதே விலைப் பிரிவில் வாங்க கிடைக்கும் ஆப்பிள் ஐபோன் 15 (Apple iPhone 15), சாம்சங் கேலக்ஸி எஸ்23 (Samsung Galaxy S23) மற்றும் கூகுள் பிக்சல் 8 (Google Pixel 8) ஆகியவற்றுக் குகடும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 12 அம்சங்கள்: டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வரும் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ColorOS 14 உடன் வரும். இது 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.82-இன்ச் குவாட்-HD+ LTPO OLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது 4என்எம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை பேக் செய்யும்.
கேமராக்களை பொறுத்தவரை, Hasselblad பிராண்டிங் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும். அதில் 50-மெகாபிக்சல் மெயின் கேமரா (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS), சோனி LYT-808 சென்சார்) + 64-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா (ஓஐஎஸ், 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம்) + 48 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா (114 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ) இருக்கும். முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா இருக்கும்.
பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான அண்டர் டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரும் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் 100W SuperVOOC சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,400mAh பேட்டரி இடம்பெறும். கடைசியாக தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான IP65 ரேடிங்கையும் இது கொண்டிருக்கும்.
ஒன்பிளஸ் 12ஆர் அம்சங்கள்: இது 6.78-இன்ச் ஓரியண்டல் AMOLED LTPO டிஸ்பிளே, ஆக்டா-கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் சிப்செட், ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் (50எம்பி சோனி IMX890 மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா), 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா, 100W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,500mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








