கொம்பன் எறங்கிட்டான்.. 100W சார்ஜிங்.. 256GB மெமரி.. AMOLED டிஸ்பிளே.. 64MP கேமரா.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக AMOLED டிஸ்பிளே, 64எம்பி கேமரா, 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் ஒன்பிளஸ் 12 போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஒன்பிளஸ் 12 அம்சங்கள் (OnePlus 12 specifications): 6.82-இன்ச் குவாட் எச்டி பிளஸ் கர்வ்டு அமோலெட் டிஸ்பிளே (Quad HD+ curved AMOLED display) உடன் புதிய ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (4,500 nits of peak brightness), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

இதுதவிர டிஸ்ப்ளேமேட் ஏ+ சான்றிதழ், கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு, 2160 ஹெர்ட்ஸ் பிடபிள்யூஎம் டிம்மிங் (PWM Dimming) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
தரமான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 chipset) வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான போன். குறிப்பாக இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆக்சிஜன்ஓஎஸ் 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 12 போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். பின்பு இன்-டிஸ்பி கைரேகை ஸ்கேனர் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் மாடல்.
ஒஐஎஸ் ஆதரவு கொண்ட 50எம்பி சோனி LYT-808 பிரைமரி கேமரா + 48எம்பி சோனி IMX581 அல்ட்ரா வைடு லென்ஸ் + 64எம்பி OV64B பெரிஸ்கோப் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் 8கே வீடியோவை பதிவு செய்ய முடியும்என்று கூறப்படுகிறது.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி சோனி IMX615 கேமரா இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த செல்பி கேமரா உதவியுடன் 4கே வீடியோவை பதிவு செய்ய முடியும் இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். அதேபோல் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி65 ரேட்டிங் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
5400எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது ஒன்பிளஸ் 12 போன். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W சூப்பர்வூக் வயர்டு சார்ஜிங் மற்றும் 50W ஏர்வூக் வயர்லெஸ் ஃபாஸட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக 100W சார்ஜிங் இருப்பதால் இந்த போனின் பேட்டரியை 11 நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும். அதேபோல் 26 நிமிடங்களில் இந்த போனின் பேட்டரியை முழு சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ad 2X2 MIMO, புளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன.
ஒன்பிளஸ் 12 விலை: 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ரூ.64,999 விலையிலும், இதன் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.69,999 விலையிலும் வாங்க முடியும். இன்று முதல் ஒன்பிளஸ் 12 போனை முன்பதிவு செய்ய முடியும். பின்பு அமேசான் மற்றும் ஒன்பிளஸ் தளங்களில் வரும் ஜனவரி 30-ம் தேதி இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








