Home
Mobile

OnePlus 12 அறிமுகமானது! எதிர்பார்த்ததை விட கம்மி விலை.. ஆனா எதிர்பார்த்தபடியே பிளாக்ஷிப் அம்சங்கள்!

ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போன் சீனாவில் இன்று (டிசம்பர் 5) அறிமுகமானது. இது வருகிற ஜனவரி 23 அல்லது 24 ஆம் தேதியன்று இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் 12 என்ன விலைக்கு அறிமுகமாகியுள்ளது? எனின் அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

ஒன்பிளஸ் 12 அம்சங்கள்: இது 6.82-இன்ச் QHD+ 2K OLED LTPO டிஸ்பிளேவை 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடன் கொண்டுள்ளது. மேலும் இது 4,500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது, இது ஒரு ஸ்மார்ட்போனில் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகமான பிரைட்னஸ் ஆகும்.

OnePlus 12 அறிமுகமானது! எதிர்பார்த்ததை விட கம்மி விலை!

மேலும் இதன் டிஸ்பிளேவானது டிஸ்ப்ளேமேட் ஏ+ சான்றிதழ், டால்பி விஷன் (Dolby Vision), 10 பிட் கலர் டெப்த் (10 bit colour depth), ப்ரோஎக்ஸ்டிஆர், 2160 ஹெர்ட்ஸ் பிடபிள்யூஎம் டிம்மிங் (PWM Dimming) மற்றும் 'ரெயின் டச்' ஆதரவு (Rain Touch Support) போன்றவைகளையும் கொண்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 Chipset) மூலம் இயங்கும் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது 24 ஜிபி வரையிலான LPDDR5X ரேம் மற்றும் 1 டிபி வரையிலான UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

OnePlus 12 அறிமுகமானது! எதிர்பார்த்ததை விட கம்மி விலை!

கேமராக்களை பொறுத்தவரை, இது OIS ஆதரவு உடன் 50எம்பி Sony LYT-808 மெயின் கேமரா + 48எம்பி Sony IMX581 அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் + 3x டெலிஃபோட்டோ ஜூம் கொண்ட 64எம்பி OV64B பெரிஸ்கோப் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

முன்பக்கத்தில் 32எம்பி சோனி IMX615 செல்பீ கேமராவுடன் வரும் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,400mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் அதன் பிளாக்ஷிப் சீரீஸில் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவை சேர்ப்பது இதுவே முதல் முறையாகும்.

OnePlus 12 அறிமுகமானது! எதிர்பார்த்ததை விட கம்மி விலை!

ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் ஒப்போவின் SUPERVOOC S பவர் மேனேஜ்மென்ட் சிப் உடன் பொருத்தப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி65 ரேட்டிங்காய் பெற்றுள்ளது. கடைசியாக இது NFC உடன் USB Type-C போர்ட்-ஐயும் பேக் செய்கிறது.

ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் விலை: சீன சந்தையில் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் மொத்தம் 4 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியாகியுள்ளது. பேஸிக் 12 GB ரேம் மற்றும் 256 GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் (இந்திய ரூபாய் மதிப்பின்படி) தோராயமாக ரூ.50,600 க்கு அறிமுகமாகி உள்ளது.

அடுத்ததாக உள்ள 16GB ரேம் மற்றும் 512GB ஆப்ஷன் தோராயமாக ரூ.56,500 க்கும், 16GB ரேம் + 1TB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.62,400 க்கும் மற்றும் ஒன்பிளஸ் 12-ன் ஹை-எண்ட் வேரியண்ட் ஆன 24GB ரேம் + 1TB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.68,200 க்கும் அறிமுகமாகியுள்ளது

ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் மொத்தம் 3 கலர் ஆப்ஷன்களில் - க்ரீன், பிளாக் மற்றும் ஒயிட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் வருகிற டிசம்பர் 11ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுக தேதி மற்றும் விலை குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. முன்னரே குறிப்பிட்டப்படி இது ஜனவரி மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 12 Launched in China Sale From Dec 11 Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X