Home
Mobile

இந்த தேதியை குறிச்சு வச்சிக்கோங்க.. OnePlus 12 போனின் India Launch அறிவிப்பு.. அதே விலையா? வேற விலையா?

ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போன், சொன்னபடியே டிசம்பர் 5 ஆம் தேதியன்று சீனாவில் அறிமுகமானது. எல்லா டிபார்ட்மெண்ட்களிலும் பக்காவான பிளாக்ஷிப் அம்சங்களை பேக் செய்யும் ஒன்பிளஸ் 12-ஐ பற்றிய அடுத்த மிகப்பெரிய கேள்வி - இது எப்போது இந்தியாவில் அறிமுகமாகும்?

இந்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் 11 5ஜி-க்கு (OnePlus 11 5G) அடுத்ததாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒன்பிளஸ் 12 எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் என்கிற கேள்விக்கு ஒன்பிளஸ் நிறுவனமே பதிலளித்துள்ளது; ஒன்பிளஸ் 12-ன் க்ளோபல் லான்ச் டைம்லைனை (Global Launch Timeline) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

OnePlus 12 போனின் India Launch அறிவிப்பு!

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் இந்தியா (India), யுகே (UK), யுஎஸ் (US) வலைத்தளங்களில் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் மைக்ரோசைட்டுகளில், ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் உலகளாவிய வெளியீட்டை (Global Launch) உறுதிப்படுத்தியுள்ளது. ஒன்பிளஸின் கூற்றுப்படி, ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்படும்.

அதாவது ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 12-ன் சரியான வெளியீட்டு தேதி (Launch Date) குறிப்பிடவில்லை. வெறுமனே 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்திலே அறிமுகமாகும் (Launch in early 2024) என்கிறது. இந்த தகவலும், ஒன்பிளஸ் 12 இந்திய அறிமுகம் ஜனவரி 24 ஆம் தேதி நடக்கும் என்கிற யூகமும் "கிட்டத்தட்ட" ஒற்றுப்போகிறது.

OnePlus 12 போனின் India Launch அறிவிப்பு!

ஒன்பிளஸ் யுகே வலைதளத்தில் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் தொடர்பான போட்டி ஒன்று நடத்தப்படுகிறது. அந்த போட்டியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, போட்டிக்கான காலக்கெடு ஜனவரி 23 ஆகும். ஆக ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் உலகளாவிய அறிமுகம் ஜனவரி 24 அன்று நடக்கலாம் என்கிற யூகங்கள் உள்ளன. இருப்பினும், இந்த போட்டியின் இறுதித் தேதி தற்போது நீக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது ஒன்பிளஸ் 12ஆர் மாடலுடன் சேர்ந்து இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்கிற யூகங்களும் வலுவடைகின்றன. ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) மாடலானது கடந்த பிப்ரவரி 2023இல் அறிமுகமான ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போனின் தொடர்ச்சியாக ரூ.40,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

OnePlus 12 போனின் India Launch அறிவிப்பு!

ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, சீனாவில் இது மொத்தம் 4 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியாகியுள்ளது. பேஸிக் 12 ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் (இந்திய ரூபாய் மதிப்பின்படி) தோராயமாக ரூ.50,600 க்கு அறிமுகமாகி உள்ளது. நிச்சயமாக இதே விலையை நாம் இந்தியாவிலும் எதிர்பார்க்க முடியாது.

ஏனென்றால் ஒன்பிளஸ் 11 5ஜி மாடலின் ஆரம்ப விலையே ரூ.₹56,999-ல் தொடங்குகிறது. ஆக ஒன்பிளஸ் 12-ன் விலையும் இதை சுற்றித்தான் இருக்கும். அதிகபட்சமாக ரூ.60,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வரும். அதேபோல சீனாவில் அறிமுகமான 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் இந்திய சந்தைக்கு வருமா என்பதிலும் குழப்பம் நிலவுகிறது.

OnePlus 12 போனின் India Launch அறிவிப்பு!

ஒன்பிளஸ் 12-ன் அம்சங்களை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடனான 6.82-இன்ச் QHD+ 2K OLED LTPO டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட், 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,400mAh பேட்டரி, தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி65 ரேட்டிங் போன்றவைகளை கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உடனான 50எம்பி சோனி LYT-808 மெயின் கேமரா + 48எம்பி சோனி IMX581 அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா + 3x டெலிஃபோட்டோ ஜூம் கொண்ட 64எம்பி OV64B பெரிஸ்கோப் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32எம்பி சோனி IMX615 செல்பீ கேமரா உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 12 India Release Date Global Launch Early 2024 Confirmed
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X