Home
Mobile

ஜொலிக்கும் வெள்ளை பளிங்கு.. OnePlus 12-ன் புதிய Mobile.. லிமிடெட் எடிஷன் விலை என்ன? சிறப்பம்சம் என்ன?

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் வரும் ஜூன் 6, 2024 ஆம் தேதி இந்தியாவில் வெள்ளை பளிங்கு போன்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய ஒன்பிளஸ் 12 க்ளேசியர் வைட் (OnePlus 12 Glacier White) சாதனமாகும்.

ஒன்பிளஸ் நிறுவனம் இன்னும் மூன்றே நாட்களில் புதிய ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. இது வெள்ளை பளிங்கு போன்ற நிறத்தில் ஒன்பிளஸ் 12 போனை அறிமுகம் செய்யவுள்ளது. இதை ஒன்பிளஸ் நிறுவனம் "க்ளேசியர் வைட்" (Glacier White) என்று விளம்பரம் செய்துள்ளது. இந்த புதிய ஒன்பிளஸ் 12 கிளேசியர் வைட் கலரில் வரும் என்று கூறியுள்ளது.

ஜொலிக்கும் வெள்ளை பளிங்கு.. OnePlus 12-ன் புதிய Mobile.. விலை என்ன?

ஒன்பிளஸ் 12 க்ளேசியர் வைட் (OnePlus 12 Glacier White):

ஓன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் சீரிஸ் சாதனத்தை ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்தது. இதில் ஒன்பிளஸ் 12 ப்ளோயி எமரால்டு (Flowy Emerald) மற்றும் சில்கி பிளாக் (Silky Black) நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது மூன்றாவது நிறமாக இந்த கிளேசியர் வைட் நிறத்தில் ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த புதிய ஒன்பிளஸ் 12 க்ளேசியர் வைட் (OnePlus 12 Glacier White) சாதனம் ரூ. 64,999 என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்படும். இது 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கானது என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய ஒன்பிளஸ் 12 க்ளேசியர் வைட் ஸ்மார்ட்போன் வரும் ஜூன் 6ம் தேதி முதல் அமேசான் இந்தியா மற்றும் ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் கடைகள் வழியாக விற்பனைக்கு வரும்.

ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 12 க்ளேசியர் வைட் (OnePlus 12 Glacier White) மீது தேர்ந்தெடுக்கப்பட்ட பார்ட்னர் வங்கிகளுடன் ரூ. 3,000 மதிப்பிலான உடனடி தள்ளுபடியையும் வழங்குகிறது. ஜூன் 20, 2024 ஆம் தேதிக்கு முன் சாதனத்தை வாங்குபவர்களுக்கு மேலும் ரூ. 2,000 மதிப்பிலான கூப்பன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.12,000 மதிப்புள்ள எக்ஸ்சேஞ்ச் ஆஃபருடன் இந்தச் சாதனத்தைப் பெறலாம்.

ஜொலிக்கும் வெள்ளை பளிங்கு.. OnePlus 12-ன் புதிய Mobile.. விலை என்ன?

ஒன்பிளஸ் 12 க்ளேசியர் வைட் விலை மற்றும் சலுகை (OnePlus 12 Glacier White Price and Offers):

OnePlus ஆனது OnePlus போனஸ் டிராப்பையும் அறிவித்துள்ளது. இதை ஜூன் 3 முதல் ஜூன் 5 தேதி வரை வெறும் ரூ. 99 விலைக்கு வாங்கலாம். இந்த போனஸ் டிராப்பை வாங்குபவர்களுக்கு OnePlus 12 Glacial White உடன் இலவசப் பொருளாக ஒன்பிளஸ் டஃபிள் பேக் சில்வர் க்ரேய் (OnePlus Duffel Bag Silver Gray) பையை வழங்கும்.

புதிய ஒன்பிளஸ் 12 க்ளேசியர் வைட் சாதனம் ஒரு லிமிடெட் எடிஷன் போனாக விற்பனை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது இந்தியாவில் குறைந்த அளவிலேயே வாங்க கிடைக்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். இந்த க்ளேசியர் வைட் நிறம் தவிர, புதிய மாறுபாடு வழக்கமான OnePlus 12 போன்ற அம்சங்களையும் விவரக்குறிப்புகளையும் பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 12 Glacier White Smartphone Launching On June 6 2024 In India Check Price and Storage Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X