Home
Mobile

மிரண்டு போவீங்க.. OnePlus-இன் பீஸ்ட்.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 100W சார்ஜிங்.. 120X ஜூமிங்.. எந்த மாடல்?

ஹசல்பிளாட் கேமரா சிஸ்டம், 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 120X டிஜிட்டல் ஜூமிங், 100W சூப்பர்வூக் சார்ஜிங், 5400mAh பேட்டரி போன்ற ஒட்டுமொத்த பிரீமியம் பீச்சர்களுடன் வெளியாகி மார்கெட்டை மிரளவிட்ட ஒன்பிளஸ் 12 (OnePlus 12) போனின் கிளாசியல் ஒயிட் (Glacial White) வெர்ஷன் டிஸ்கவுண்ட் உடன் விற்பனைக்க வந்துள்ளது. கிரயோ-வெலாசிட்டி கூலிங் சிஸ்டம், ஸ்னாப்டிராகன் 8 ஜென் போன்ப மற்ற பீச்சர்களிலும் மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது. இந்த ஒன்பிளஸ் போனின் முழு பீச்சர்கள், விலை விவரங்கள் இதோ.

ஒன்பிளஸ் 12 அம்சங்கள் (OnePlus 12 Specifications): 6.82 இன்ச் (3168 × 1440 பிக்சல்கள்) குவாட் எச்டிபிளஸ் (Quad HD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 2K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ப்ரோஎக்ஸ்டிஆர் (ProXDR) டிஸ்பிளே மாடலாகும். 3டி கர்வ்ட் அமோலெட் பேனல் வருகிறது. 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

மிரண்டு போவீங்க.. OnePlus-இன் பீஸ்ட்.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா போன்!

மேலும், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் கொண்டிருக்கிறது. ஆகவே, டிஸ்பிளேவில் அல்ட்ரா பிரீமியம் அவுட்புட் கிடைக்கும். ஆக்ஸிஜன்ஓஎஸ் 14 (OxygenOS 14) மற்றும் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் மொபைல் (Octa Core Snapdragon 8 Gen 3 Mobile) சிப்செட் வருகிறது. இந்த போனுக்கு 4 வருடங்களுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட் (Android Update) மற்றும் 5 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட் (Security Update) வருகிறது.

இந்த ஒன்பிளஸ் 12 போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. கேமரா பீச்சர்களில் இதுவரை வெளியான மாடல்களை தூக்கி சாப்பிட்டுள்ளது. சோனி எல்ஒய்டி 808 (Sony LYT-808) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமராவானது, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜியுடன் வருகிறது.

மிரண்டு போவீங்க.. OnePlus-இன் பீஸ்ட்.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா போன்!

சோனி ஐஎம்எக்ஸ்581 (Sony IMX581) சென்சார் கொண்ட 48 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமராவானது, மேக்ரோ சப்போர்ட்டுடன் வருகிறது. மேலும், ஓம்னிவிஷன் ஓவி64பி (Omnivision OV64B) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 64 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா வருகிறது.

இந்த கேமராவில் 3X ஆப்டிகல் ஜூமிங், 6X இன்-சென்சார் ஜூமிங் மற்றும் 120X டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட் உள்ளது. இந்த ஹசல்பிளாட் கேமரா சிஸ்டமானது (Hasselblad Camera System) 4ஆவது ஜெனரேஷனாகும். 8K வீடியோ ரெக்கார்டிங் கொண்டிருக்கிறது. ஆகவே, ஆப்பிள், சாம்சங் போன்களுக்கு நிகரான அவுட்புட் எதிர்பார்க்கலாம்.

சோனி ஐஎம்எக்ஸ்615 (Sony IMX615) சென்சார் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கொண்ட 32 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. கேமரா சிஸ்டம் மட்டுமல்ல பேட்டரி சிஸ்டமும் பிரீமியமாக இருக்கிறது. 100W சூப்பர்வூக் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5400mAh பேட்டரி கொண்டிருக்கிறது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த ஒன்பிளஸ் 12 போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.64,999ஆக இருக்கிறது. இருப்பினும், ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.3000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. எச்டிஎப்சி கார்டில் ஈஎம்ஐ மூலம் வாங்கினால், ரூ.4250 டிஸ்கவுண்ட் பெறலாம். ரூ.50,700 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 12 Glacial White With 12GB RAM Sale With Discount in Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X