Home
Mobile

OnePlus-க்கு வெள்ளை மனசு.. மீண்டும் புது ஒன்பிளஸ் மொபைல் அறிமுகம்.. ஜூன் 6 தேதியை மறக்காதீங்க மக்களே.. விலை?

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் வரிசையில் புதிதாக மீண்டும் ஒரு போனை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய போனை நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 12 (OnePlus 12) சீரிஸ் வரிசையில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் (Smartphone) பிராண்டுகளில் ஒன்றான OnePlus, சமீபத்தில் அறிமுகப்படுத்திய சாதனத்தில் ஒரு புதிய நிறத்தில் கூடுதலாக ஒன்றை அறிவித்துள்ளது. தகவலின்படி, வரவிருக்கும் புதிய ஒன்பிளஸ் சாதனம் ஒன்பிளஸ் 12 க்ளேசியல் வைட் (OnePlus 12 Glacial White) நிறத்தில் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

OnePlus-க்கு வெள்ளை மனசு.. மீண்டும் புது ஒன்பிளஸ் மொபைல் அறிமுகம்..

ஒன்பிளஸ் 12 க்ளேசியல் வைட் (OnePlus 12 Glacial White):

இந்த புதிய மாறுபாடு அதிகாரப்பூர்வமாக ஜூன் 6 ஆம் தேதி (June 6) இந்தியாவில் ஒரு லிமிடெட் எடிஷன் (Limited edition) சாதனமாக அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் படி, இது ஒரு 'லிமிடெட் எடிஷன்' மாடல் என்று கூறப்படுகிறது. எனவே, இது குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஆனது ஃப்ளோவி எமரால்டு (Flowy Emerald) மற்றும் சில்க்கி பிளாக் (Silky Black) ஆகிய இரண்டு வண்ண வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிதாகக் குறிப்பிடப்பட்டுள்ள க்ளேசியல் வைட் (Glacial White), நிறுவனத்தின் மூன்றாவது மாறுபாடாக இருக்கும் என்று ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. OnePlus ஆனது OnePlus 12 போன் வெள்ளை/வெள்ளி (white/silver) வகையை சீனா சந்தையில் விற்பனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய நிறம் ஒன்பிளஸ் நிறுவனத்திற்கு முற்றிலும் புதியதாக இல்லை என்றாலும், இந்திய ரசிகர்களுக்கு இது புது வரவாகவே திகழ்கிறது. வரவிருக்கும் புதிய சாதனத்தின் ஸ்டோரேஜ் (storage) விருப்பத்தை பற்றி பேசுகையில், இது 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. OnePlus 12க்கான புதிய Glacial White மாறுபாடு எதிர்பார்த்தபடி ஒன்று அல்லது இரண்டு வகைகளில் வர வேண்டும்.

ஒன்பிளஸ் 12 க்ளேசியல் வைட் விலை (OnePlus 12 Glacial White Price):

இந்த புதிய ஒன்பிளஸ் 12 வெள்ளை நிற ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் சாதனம் இந்திய சந்தையில் என்ன விலையில் அறிமுகம் செய்யப்படும் என்பதை இப்போது பார்க்கலாம். ஒன்பிளஸ் 12 க்ளேசியல் வைட் (OnePlus 12 Glacial White) இன் அடிப்படை வேரியன்ட் மாடல் 12GB RAM/256GB ஸ்டோரேஜ் உடன் ரூ.64,999 விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், இதன் உயர்தர வேரியண்ட் மாடலான ஒன்பிளஸ் 12 க்ளேசியல் வைட் (OnePlus 12 Glacial White price) இன் 16GB RAM/512GB ஸ்டோரேஜ் வகை ரூ.69,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் ஒரு தீவிரமான ஒன்பிளஸ் ரசிகர் என்றால், ஜூன் 6, 2024 ஆம் தேதி வரை வெயிட் செய்து இந்த வைட் நிற போனை ஆர்டர் செய்து வாங்கி மகிழலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 12 Glacial White New Variant Will Officially Be Made Available On June 6
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X