இதோ விலைய குறைச்சிட்டாங்கல.. OnePlus 13 அறிமுகத்தை ஒட்டி OnePlus 12 மீது ரூ.9000 டிஸ்கவுண்ட்.. எங்கே?
OnePlus 12 Discount: இந்திய சந்தையில் இந்த 2024 ஆம் ஆண்டில் அறிமுகமான பெஸ்ட் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான ஒன்பிளஸ் 12 மீது திடீரென பெரும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் டிஸ்கவுண்ட்டிற்கு, 2 மாதங்களுக்கு முன்பாகவே அறிமுகமாகும் ஒன்பிளஸ் 13 (OnePlus 13) கூட ஒரு காரணமாக இருக்கலாம்; அல்லது இது வெறுமனே ஒரு நவராத்திரி அல்லது தீபாவளி பண்டிகை கால சிறப்பு தள்ளுபடியாக (Festive Season Offer) கூட இருக்கலாம். எதுவாக இருந்தாலும் ஒன்பிளஸ் 12-ஐ மிகவும் மலிவான விலைக்கு வாங்க இதுவொரு அற்புதமான வாய்ப்பாகும்!
ஒன்பிளஸ் 12 மீதான ரூ.9000 டிஸ்கவுண்ட்டை அறிவித்துள்ளது விஜய் சேல்ஸ் (Vijay Sale) தான். தற்போது விஜய் சேல்ஸ்-ல் ஒன்பிளஸ் 12 மாடல் ரூ.62,999 என்கிற புதிய விலையில் வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரூ.64,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆக இது ஏற்கனவே ரூ.2000 விலைக்குறைப்பின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது.

இது தவிர, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் ஒன்கார்டு ஆகிய கார்டுகளின் மீது ரூ.7,000 கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் இறுதி ஆபர் விலையை ரூ.55,999 ஆக குறைக்க முடியும். இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு வெறும் 8 மாதங்களே ஆன ஒன்பிளஸ் 13 மீது இவ்வளவு பெரிய தள்ளுபடி அறிவிக்கப்படுவது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு நல்ல பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டு உள்ளவர்களுக்கு இதுவொரு நல்ல வாய்ப்பாகும்!
ஒன்பிளஸ் 13 ஆனது இந்த அக்டோபர் மாதமே அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில்.. பழைய ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனை வாங்குவது சரியான முடிவாக இருக்குமா? கண்டிப்பாக இருக்கும்! ஏனென்றால் இது வடிவமைப்பில் சில நுட்பமான மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. ப்ரோஎக்ஸ்டிஆர் (ProXDR) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) ஆதரவு உடனான 6.82-இன்ச் எல்டிபிஓ டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை பேக் செய்கிறது, பெர்ஃபார்மென்ஸை பொறுத்தவரை இது உண்மையிலேயே பிரமாதமாக உள்ளது. கூடவே இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஆக்ஸிஜன் 14 ஓஎஸ் உடன் வருகிறது. இது க்ளீன் ஆன இன்டர்பேஸை உறுதி செய்கிறது. இது பெரிய 5400mAh பேட்டரியை கொண்டுள்ளது. கூடவே அதிவேக 100W சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.
கடைசியாக இது அட்டகாசமான கேமராக்களை பேக் செய்கிறது. இந்த போனில் 50எம்பி மெயின் கேமரா + 48எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் கேமரா + 3எக்ஸ் பெரிஸ்கோப் அல்லது ஆப்டிகல் ஜூம் கொண்ட 64எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மெயின் கேமராவானது நல்ல வெளிச்சத்தில் மட்டுமல்ல குறைந்த வெளிச்சத்திலும் கூட சிறப்பான போட்டோக்களை எடுக்கிறது.
ஒன்பிளஸ் 13எப்போது அறிமுகமாகும்? இது 2 மாதங்களுக்கு முன்பாகவே,அதாவது இந்த அக்டோபர் மாதமே சீனாவில் அறிமுகமாகிறது. இதை ஒன்பிளஸ் சீனாவின் தலைவர் ஆன லூயிஸ் லீயும் உறுதிப்படுத்தி உள்ளார். இது டிசம்பர் மாத வாக்கில் சீனாவில் அறிமுகமாகி, பின்னர் ஜனவரி அல்லது பிப்ரவரி மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இது இந்திய சந்தைக்கும் முன்கூட்டியே வரும் என்பது போல் தெரிகிறது.
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இது ஒன்பிளஸ் 12-க்கு சமமான விலையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி ஒன்பிளஸ் 12 இந்தியாவில் ரூ.64,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் ஒன்பிளஸ் 13-ல் எதிர்பார்க்கப்படும் பல முக்கியமான அப்கிரேட்களை கருத்தில் கொண்டால்.. இதன் விலை ரூ.70,000 க்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!


Click it and Unblock the Notifications








