ஆசை ஆசையா.. OnePlus 12 க்கு வெயிட் பண்ணவங்க தலையில்.. இடியை இறக்கிய இந்திய விலை நிர்ணயம்!
இதுவரை வெளியான ஒன்பிளஸ் (OnePlus) போன்களுக்கெல்லாம் "சிம்ம சொப்பனமாக" திகழ வேண்டும் என்கிற நோக்கத்தின் கீழ் ஒரு புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதென்ன மாடல்? எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:
என்ன மாடல்.. எப்போது அறிமுகம்? நாம் இங்கே பேசுவது ஒன்பிளஸ் 12 5ஜி (OnePlus 12 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 12, நவம்பர் மாத இறுதியில் அல்லது டிசம்பர் மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? கடந்த வாரம், இந்த ஸ்மார்ட்போன் அன்டுடு (AnTuTu) பெஞ்ச்மார்க் தரவுத்தளத்தில் காணப்பட்டது. இப்போது, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படும் ஒரு வித்தியாசமான ஒன்பிளஸ் போன் கீக்பென்ச் (Geekbench) தளத்தில் காணப்பட்டுள்ளது. இது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் க்ளோபல் வேரியண்ட் (Global Variant) ஆக இருக்கும் என்பது போல் தெரிகிறது.
கிடைக்கப்பெற்ற கீக்பெஞ்ச் லிஸ்டிங் ஸ்க்ரீன்ஷாட்டில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப் (Snapdragon 8 Gen 3 Chip) ஆனது வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், லிஸ்டிங்கில் உள்ள சிபியு (CPU) மற்றும் ஜிபியு (GPU) விவரங்கள் அந்த குவால்காம் (Qualcomm) நிறுவனத்தின் லேட்டஸ்ட் சிப்செட் பேக் செய்யப்படுவதை உறுதிப்படுத்துகிறது
மேலும், இந்த ஸ்மார்ட்போனில் 16 ஜிபி வரையிலான ரேம் (16GB RAM) மற்றும் ஆன் போர்டு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) இடம்பெறும் என்பதையும் கீக்பெஞ்ச் லிஸ்டிங் வெளிப்படுத்துகிறது. இந்தியாவிற்கு வரும் க்ளோபல் வேரியண்ட் ஆனது முற்றிலும் புதிய ஆக்சிஜென்ஓஎஸ் 14 (OxygenOS 14) உடன் அனுப்பப்படலாம், அதேசமயம் சைனீஸ் வேரியண்ட் ஆனது கலர்ஓஎஸ்14 (ColorOS 14) உடன் அனுப்படலாம்.

இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் 1டிபி வரையிலான யூஎப்எஸ் 4.0 ஸ்டோரேஜ் (1TB UFS 4.0 Stroage) இடம்பெறலாம். டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 6.82-இன்ச் அளவிலான ஓஎல்இடி பிஓஇ எக்ஸ்1 (OLED BOE X1) பேனலை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2கே ரெசல்யூஷன் (2K Resolution), 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (2600 Nits Peak Brightness) ஆகியவற்றை வழங்கலாம்.
கேமராக்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 12 5ஜி ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் பேக் செய்யப்படலாம். அதில் சோனி ஐஎம்எக்ஸ்966 (IMX966) சென்சார் மற்றும் ஓஐஎஸ் (OIS) ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் மெயின் கேமரா + 48 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா + 64 மெகாபிக்சல் பெரிஸ்கோப் கேமரா இடம்பெறலாம். முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா பேக் செய்யப்படலாம்.

பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் 100வாட் வயர்டு சார்ஜிங் (100W Wired Charging) மற்றும் 50வாட் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான (50W Wireless Charging) ஆதரவுடன் 5400ம்ஏஎச் பேட்டரி இடம்பெறலாம். கடைசியாக இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் கிளாசிக் பிளாக் (Classic Black) பிரிஸ்டைன் ஒயிட் (Pristine White) மற்றும் வைப்ரண்ட் கிரீன் (Vibrant Green) போன்ற கலர் ஆப்ஷன்களில் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன விலைக்கு வரும்? ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது இதுவரை வெளியான எல்லா ஒன்பிளஸ் மாடல்களை விடவும்.. ஒன்பிளஸ் ஓப்பன் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை (OnePlus Open Foldable Smartphone) தவிர்த்து.. விலை உயர்ந்ததாக இருக்கும். இந்தியாவில் ஒன்பிளஸ் 12 5ஜி போனின் விலை நிர்ணயம் ரூ.80,990 ஆக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source, Photo Courtesy: Onleaks x MySmartPrice


Click it and Unblock the Notifications








