3 கலர் ஆப்ஷன்களில் OnePlus 12.. எல்லாமே நச்சுனு இருக்கு.. இந்திய விலையில் டிவிஸ்டு.. ஆகமொத்தம் நமக்கு லாபம்!
ஐபோன் 15 சீரீஸிற்கு பிறகு உலகம் முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் 12 (OnePlus 12) உள்ளது. இது வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி நடக்கும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் 10 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டத்தின் போது அறிமுகம் செய்யப்படவுள்ளது.
முன்னதாக இது ஐக்யூ 12 (iQoo 12) மற்றும் ஒப்போ ரெனோ 10 ப்ரோ (Oppo Reno 11 Pro) போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு கடும் போட்டியாக இருக்குமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒவ்வொரு நாளும் வெளியாகும் தகவல்களை பார்க்கும் போது ஒன்பிளஸ் 12-ஐ "அடிச்சுக்கவே முடியாது" என்றே எண்ணத்தோன்றுகிறது.

அறிமுக தேதி மிகவும் நெருக்கமாக உள்ளதால், ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 12 தொடர்பான டீஸர்களை வெளியிட்டு, ஸ்மார்ட்போனை பற்றிய சில முக்கியமான குறிப்புகளை வெளிப்படுத்திக்கொண்டே வருகிறது. அந்த வரிசையில், ஒன்பிளஸ் 12 ஆனது மொத்தம் 3 கலர் ஆப்ஷன்களில் வெளியாகும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது பேல் க்ரீன் (Pale Green) அதாவது வெளிர் பச்சை, ராக் பிளாக் (Rock Black) அதாவது அடர் கருப்பு மற்றும் ஒயிட் (வெள்ளை) என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும் என்று ஒன்பிளஸ் நிறுவனமே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு, ஒன்பிளஸ் 12 ஆனது மரக்கட்டை போன்ற பேக் பேனலுடன், அதாவது வுட் டெக்ஷர் பேக் பேனல் டிசைனுடன் வரும் என்கிற லீக்ஸ் தகவலுக்கு முற்றலும் எதிராக உள்ளது. இந்த லீக்ஸ் தகவலுக்கான அடிப்படை நிச்சயம் ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் ஒன் ஆகத்தான் இருக்கும்.
நினைவூட்டம் வண்ணம், ஒன்பிளஸ் ஒன் ஸ்மார்ட்போன் ஆனது வுட் டெக்ஷர் ரிமூவபிள் பேக்கை (Wood texture removable back) கொண்டிருந்தது. எனவே 10ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின் போது வெளியாகும் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் அதே போன்ற ஒரு வடிவமைப்பு இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை ஸ்பெஷல் எடிஷன் கூட அறிமுகம் செய்யப்படலாம்.

சரியான விவரங்களை டிசம்பர் 4 ஆம் தேதி உள்ளூர் நேரப்படி இரவு 7:00 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 4:30 மணிக்கு) தொடங்கும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் 10 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டத்தின் போது தெரிய வரும். சீன அறிமுகத்தை தொடர்ந்து இந்திய அறிமுகமானது 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் விலையை தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது. முன்னதாக இது ரூ.80,000 க்கு அருகிலான விலை நிர்ணயத்தை பெறும் என்று எதிர்பார்க்க்கப்பட்டது. தற்போது வெளியீட்டு தேதி மிகவும் அருகாமையில் இருக்கும் சமயத்தில், இது ஒன்பிளஸ் 11-ஐ போன்ற விலை நிர்ணயத்தையே பெறும் என்றும் பேசப்படுகிறது.
இரண்டில் எது உண்மையாகும் என்பதை வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி நடக்கும் அறிமுக நிகழ்வில் தான் நம்மால் அறிந்துகொள்ள முடியும். விலை தொடர்பான இந்த குழப்பத்திற்கு காரணம் - ஒவ்வொரு நாளும் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் உறுதிசெய்யப்படும் முக்கிய அம்சங்களே ஆகும்.
நினைவூட்டும் வண்ணம், ஒன்பிளஸ் 12 ஆனது குவால்காமின் லேட்டஸ்ட் ப்ராசஸர் ஆன ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் மற்றும் 2K ரெசல்யூஷன் மற்றும் 2,600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான BOE-யின் ProXDR டிஸ்பிளேவை பேக் செய்கிறது. மேலும் இது கேமிங்கிற்காக உள்ளமைக்கப்பட்ட நியூ ஜெனரேஷன் எக்ஸ்-ஆக்சிஸ் மோட்டாருடன் வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர்த்து ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான கலர்ஓஎஸ் 14 (ColorOS 14), சோனி LYTIA LYT808 மெயின் கேமரா மற்றும் 64-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் ( 64-megapixel periscope telephoto lens) போன்ற அம்சங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications