Home
Mobile

விஸ்வரூப மாடல்.. QHD டிஸ்பிளே.. SONY கேமரா.. 100W சார்ஜிங்.. 1டிபி மெமரி.. எந்த போன்?

ஒன்பிளஸ் பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களும் மூக்கில் விரல் வைக்கும்படி ஒன்பிளஸ் 12 (OnePlus 12) போனின் அதிகாரப்பூர்வ டிசைன் மற்றும் கலர் வேரியண்ட்கள் இருக்கின்றன. ஹாசல்பிளாட் கேமரா, சோனி லென்ஸ், 100W சார்ஜிங், கியூஎச்டி டிஸ்பிளே என்று மிரட்டுகிறது.

ஒன்பிளஸ் 12 அம்சங்கள் (OnePlus 12 Specifications): இந்த ஒன்பிளஸ் போன் 6.82 இன்ச் கியூஎச்டி (QHD) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு பிஓஈ எக்ஸ்1 (BOE X1) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 2K ரெசொலூஷன், 120Hz ரெப்ஃரெஷ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

QHD டிஸ்பிளே.. SONY கேமரா.. 100W சார்ஜிங்.. 1டிபி மெமரி.. எந்த போன்?

இந்த போன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) கொண்டிருக்கிறது. அதேபோல குளோபல் வேரியண்ட்டில் ஆக்ஸிஜன்ஓஎஸ் 14 (OxygenOS 14) கொடுக்கப்பட இருக்கிறது. அதோடு குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 மொபைல் (Qualcomm Snapdragon 8 Gen 1 Mobile) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஒன்பிளஸ் 12 போனில் 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. அதேபோல ஹாசல்பிளாட் டியூனிங் (Hasselblad Tuning) கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கொண்டிருக்கிறது. அந்த வகையில், சோனி எல்ஓய்டி 808 (Sony LYT 808) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு சோனி ஐஎம்எக்ஸ்518 (Sony IMX581) சென்சார் கொண்ட 48 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் (Ultra Wide Lens) கேமரா மற்றும் 64 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ (Periscope Telephoto) கேமரா வருகிறது. இந்த டெலிபோட்டோவில் 3x ஆப்டிகல் ஜூமிங் சப்போர்ட் வருகிறது.

QHD டிஸ்பிளே.. SONY கேமரா.. 100W சார்ஜிங்.. 1டிபி மெமரி.. எந்த போன்?

அதோடு எல்இடி பிளாஷ் சப்போர்ட் கொண்டுள்ளது. ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் இடம் பெற்றுள்ளது. அதேபோல ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொண்டுள்ளது. இந்த ஒன்பிளஸ் போனில் கேமராவை போலவே பிரம்மாண்ட் பேட்டரி செட்டப் (Battery Setup) கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5,400mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் (Wireless Charging Support) கொண்டிருக்கிறது. இந்த பேட்டரிக்கு யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் வருகிறது. இந்த ஒன்பிளஸ் 12 போனில் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட் வர இருக்கிறது.

இந்த போனானது, மெட்டாலிக் பிரேம் கொண்ட கிளாசிக் பிளாக் (Classic Black), ப்ரிஸ்டின் ஒயிட் ( Pristine White) மற்றும் வைப்ரண்ட் கிரீன் (Vibrant Green) ஆகிய 3 கலர்களில் வெளியாக இருக்கிறது. இந்த கலர்களில் அதிகாரப்பூர்வ போட்டோக்களை ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

QHD டிஸ்பிளே.. SONY கேமரா.. 100W சார்ஜிங்.. 1டிபி மெமரி.. எந்த போன்?

இந்த போட்டோக்களில் அந்த போன் கொண்டிருக்கும் அல்ட்ரா பிரீமியம் டிசைன், ஹாசல்பிளாட் கேமராவானது, ஸ்மார்ட்போன் மார்கெட்டையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இந்த போன் வரும் டிசம்பர் 5ஆம் தேதி சீனாவில் வெளியாகிறது. அதன்பின்பு இந்தியா உள்பட அடுத்தடுத்த நாடுகளில் வெளியாக இருக்கிறது.

ஐக்யூ 12 சீரிஸ், ரெட்மி கே70 சீரிஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இந்த போன் களமிறங்குவதால், அந்த போன்களுக்கு நிகரான அம்சங்களை கொண்டிருக்கிறது. இருப்பினும், டிசைன் மற்றும் கேமராவில் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. இந்த போனின் ஆரம்ப விலை ரூ.65,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 12 Color Variants Revealed Launch on December 5 Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X