அதே Camera தான்.. OnePlus 12 லேட்டஸ்ட் அப்டேட்.. விலையில் மாற்றம் இருக்குமா?
ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி (Launch Date) மிகவும் நெருக்கமாக உள்ள நிலைப்பாட்டில், ஒன்பிளஸின் இந்த புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் (Flagship Smartphone) என்னென்ன அம்சங்களை பேக் செய்யும் என்கிற அதிகாரப்பூர்வ தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிப்டுத்தப்பட்ட வண்ணம் உள்ளன.
முன்னதாக ஒன்பிளஸ் 12 ஆனது டிசம்பர் 4 ஆம் தேதியன்று அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டுருந்தது. பின்னர் இதன் வெளியீட்டு தேதி டிசம்பர் 5 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. தற்போது, அறிமுகத்திற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலைப்பாட்டில் ஒன்பிளஸ் 12-ன் முழு கேமரா அம்சங்களும் (Camera Specifications) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இருந்தே ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் மெயின் கேமராவானது சோனி எல்ஒய்டி-808 சென்சார் (Sony LYT-808 Sensor) உடன் வரும் என்று டீஸ் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ஒன்பிளஸ் 12-ன் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பில் மீதமுள்ள கேமராக்களை பற்றிய விவரங்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கே சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ஒன்பிளஸ் 12 ஆனது ஒன்பிளஸ் ஒப்பன் (OnePlus Open) மற்றும் ஒப்போ ஃபைண்ட் என்3 (Oppo Find N3) ஸ்மார்ட்போன்களில் உள்ள அதே அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா (Ultra-wide-angle camera) மற்றும் டெலிஃபோட்டோ கேமராவை (Telephoto camera) பேக் செய்கிறது.

ஒன்பிளஸ் சீனாவின் தலைவர் ஆன லி ஜீ (Li Jie), ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் உள்ள ஹசல்பிளாட்-பிராண்டட் ரியர் கேமரா செட்டப்பில் (Haselblad-branded rear camera setup) என்னென்ன கேமரா சென்சார்கள் இடம்பெறும் என்பதை வெளிப்படுத்தும் போஸ்டர் (Poster) ஒன்றை, சீன ஊடகத்தளமான வெய்போ வழியாக பகிர்ந்துள்ளார்.
அந்த போஸ்டரின் படி, ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் சோனி எல்ஒய்டி-808 சென்சார் கொண்ட 50 மெகாபிக்சல் மெயின் கேமரா + 48 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா + 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் ஆதரவு உடனான 64 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமராவை காண முடிகிறது.

முன்னரே குறிப்பிட்டபடி மேற்கண்ட அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் டெலிஃபோட்டோ கேமராவானது, ஒன்பிளஸ் ஓப்பன் மற்றும் ஒப்போ ஃபைண்ட் என்3 ஸ்மார்ட்போன்களில் உள்ள கேமராக்களுடன் ஒற்றுப்போகிறது. இருப்பினும் ஒன்பிளஸ் 12 ஆனது 13-சேனல் சென்சாரை (13-channel sensor) கொண்டிருக்கும், இது மூன்று கேமராக்களின் செயல்திறனையும் மேம்படுத்தும்.
கேமரா அம்சங்களை மட்டுமின்றி - டிசம்பர் 5 வெளியீட்டு தேதிக்கு முன்னதாக - ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் வேறு சில முக்கிய அம்சங்களும் கூட அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் குவால்காமின் லேட்டஸ்ட் சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 ப்ராசசர் மூலம் இயக்கப்படும்.
மேலும் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 13 OS) அடிப்படையிலான அவுட்-ஆஃப்-பாக்ஸ் ஆக்ஸிஜன்ஓஎஸ் 14 (OxygenOS 14) கொண்டு இயங்கும் மற்றும் பிஓஇ-இல் (BOE) இருந்து 2கே ரெசல்யூஷன் உடனான ஒரு ப்ரோஏக்டிஆர் (ProXDR) டிஸ்பிளேவை கொண்டிருக்கும்.
ஒன்பிளஸ் 12 ஆனது பார்ப்பதற்கு எப்படி இருக்கும் என்பதையும் நாங்கள் அறிவோம். ஏனென்றால் ஒன்பிளஸ் நிறுவனமானது தனது வலைத்தளம் மற்றும் சமூக ஊடகத்தளங்கள் வழியாக ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ச்சியாக பகிர்ந்து வருகிறது. கூடவே இந்திய அறிமுக தேதியும் "சூசகமாக" அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 12-ஐ இலவசமாக வெல்வதற்கான லாட்டரி தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ், இந்த போட்டியானது நவம்பர் 27 முதல் ஜனவரி 23 வரை நடக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் ஒன்பிளஸ் 12 ஆனது ஜனவரி 24 ஆம் தேதி அறிமுகமாகும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வமான தகவலுக்காக காத்திருப்பது நல்லது!
முக்கிய அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்ட பின்னர் ஒன்பிளஸ் 12 ஆனது ரூ.80,000 பட்ஜெட்டில் வரும் என்கிற லீக்ஸ் தகவல்கள் எல்லாமே காணாமல் போய்விட்டன. பெரும்பாலும் இது ஒன்பிளஸ் 11-ன் விலை வரம்புடன் ஒற்றுப்போகலாம். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 11 ரூ.56,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆக ஒன்பிளஸ் 12-ன் விலை நிர்ணயம் ரூ.65,000 க்குள் இருக்கும் என்று எதிர்பார்ப்பது நல்லது!


Click it and Unblock the Notifications