யப்பா.. அதிரவிடும் விலை.. 64MP கேமரா..100W சார்ஜிங்..16GB ரேம்.. 2 ஒன்பிளஸ் போன்கள் ரெடி.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உலக சந்தை மற்றும் இந்திய சந்தையில் இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் ஜனவரி 23-ம் தேதி ஒன்பிளஸ் 12 மற்றும் ஒன்பிளஸ் 12ஆர் மாடல்களை தான் அறிமுகம் செய்ய உள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.
இந்நிலையில் ஒன்பிளஸ் 12 மற்றும் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன்களின் விலை ஆன்லைனில் வெளியாகி உள்ளது. அதன்படி ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.58,000 விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.40,000 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக இந்த இரண்டு புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலைப் பற்றிய தகவல்களை டிப்ஸ்டர் யோகேஷ் ப்ரார் (Yogesh Brar) தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் விவரக்குறிப்புகளை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஒன்பிளஸ் 12 அம்சங்கள் (OnePlus 12 specifications): 6.82-இன்ச் QHD+ 2கே ஒஎல்இடி எல்டிபிஒ டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே ஒரு தனித்துவமான திரை அனுபவத்தை வழங்கும்.
அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 3 SoC) வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் இந்தியாவுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
50எம்பி Sony LYT-808 OIS மெயின் கேமரா + 48எம்பி Sony IMX581 அல்ட்ரா வைடு கேமரா + 64எம்பி OV64B பெரிஸ்கோப் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி Sony IMX615 கேமரா சென்சார் கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும்.
5400 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. பின்பு 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 12ஆர் அம்சங்கள் (OnePlus 12R specifications): 6.78-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் ( Snapdragon 8 Gen 2 SoC) வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகாகும். மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் அறிமுகமாகும். பின்பு 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.
5500 எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள் இதில் உள்ளன. பின்பு செல்பிகளுக்கும், விடியோ கால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 12ஆர் போன்.


Click it and Unblock the Notifications








