Home
Mobile

அதிர போகுது மார்க்கெட்.. 100W சார்ஜிங்.. கலக்கலான நிறங்கள்.. 50MP கேமரா.. 256GB மெமரி.. எந்த போன்?

ஒன்பிளஸ் 12 மற்றும் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன்கள் வரும் 2024 ஜனவரி 23-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த இரண்டு போன்களும் அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளன.

இந்த போன்களின் விவரக்குறிப்புகள் ஏற்கனவே ஆன்லைனில் வெளியான நிலையில் தற்போது தான் நிறங்கள் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஃப்ளோவி எமரால்டு (Flowy Emerald) மற்றும் சில்க்கி பிளாக் (Silky Black) நிறங்களில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ஒன்பிளஸ் 12 போன் விற்பனைக்கு வரும்.

அதிர போகுது மார்க்கெட்.. 50MP கேமரா.. 256GB மெமரி.. எந்த போன்?

அதேபோல் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும். பின்பு இந்த போன் அயர்ன் கிரே ( Iron Gray) மற்றும் கூல் ப்ளூ ( Cool Blue) நிறங்களில் வாங்கக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போன்களின் அம்சங்களைப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் 12 அம்சங்கள் (OnePlus 12 specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 3 SoC) வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் இந்தியாவுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் 6.82-இன்ச் QHD+ 2கே ஒஎல்இடி எல்டிபிஒ டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. 5400 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது.

ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன். 50எம்பி Sony LYT-808 OIS மெயின் கேமரா + 48எம்பி Sony IMX581 அல்ட்ரா வைடு கேமரா + 64எம்பி OV64B பெரிஸ்கோப் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி Sony IMX615 கேமரா சென்சார் கொண்டுள்ளது இந்த போன்.

அதிர போகுது மார்க்கெட்.. 50MP கேமரா.. 256GB மெமரி.. எந்த போன்?

ஒன்பிளஸ் 12ஆர் அம்சங்கள் (OnePlus 12R specifications): 6.78-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் ( Snapdragon 8 Gen 2 SoC) வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகாகும். மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் அறிமுகமாகும். மேலும் 5500 எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் வெளிவரும்.

குறிப்பாக இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள் இதில் உள்ளன. பின்பு செல்பிகளுக்கும், விடியோ கால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 12ஆர் போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 12 and OnePlus 12R colors and specifications revealed: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X