Home
Mobile

சோனமுத்தா போச்சா.. OnePlus 12 பல்பு வாங்க இந்த 1 காரணம் போதாதா.. வெயிட் பண்ணி வெறுத்து போயிடாதீங்க!

ஆப்பிள் ஐபோன் சீரிஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ் சீரீஸிற்கு அடுத்தபடியாக.. பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை கிளப்பும் நம்பர் சீரீஸ் (Number Series) ஸ்மார்ட்போன்கள் என்றால் அது ஒன்பிளஸ் தான். ஒன்பிளஸ் 7-க்கு கிடைத்த வரவேற்பும், வெற்றியும் ஒன்பிளஸ் 11 வரை தொடர்கிறது.

பட்ஜெட் விலையில் பல ஒன்பிளஸ் நோர்ட் (OnePlus Nord) சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமானாலும் கூட, பெரும்பாலானவர்களின் முழு கவனமும் ஒன்பிளஸின் பிளாக்ஷிப் (Flagship) மாடல்கள் மீது மட்டுமே உள்ளது. அந்த வரிசையில் ஒன்பிளஸ் 12 5ஜி (OnePlus 12 5G) மாடல் நிச்சயம் விதிவிலக்காக இருக்கப்போவதில்லை!

OnePlus 12 பல்பு வாங்க இந்த 1 காரணம் போதாதா!

ஒன்பிளஸ் 12 5ஜி எப்போது அறிமுகமாகும்? இது பெரும்பாலும் 2023 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படாது; மாறாக 2024 ஜனவரி மாதத்தின் முதல் பாதியிலேயே அறிமுகமாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் இது ஜனவரி 18 இல் அறிமுகமாகலாம்.

அறிமுகத்திற்கு 60 நாட்களுக்கும் மேல் இருக்கிறது என்றாலும் கூட, அடுத்த வாரம் அறிமுகமாக உள்ள ஸ்மார்ட்போன் போல் ஒவ்வொரு நாளும் ஒன்பிளஸ் 12 தொடர்பான லீக்ஸ் தகவல்கள் வெளியாகிக்கொண்டே தான் இருக்கிறது. அப்படியாக சமீபத்தில் ஒரு வெளியான தகவல் ஒன்பிளஸ் 12-ஐ ஆவலோடு எதிர்நோக்குபவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ் ஆக வந்துள்ளது.

OnePlus 12 பல்பு வாங்க இந்த 1 காரணம் போதாதா!

3சி (3C) எனப்படும் தரச்சான்றிதழ் இணையதளமானது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது 100வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (100W Fast Charging Support) உடன் வரும் என்று பரிந்துரைக்கிறது. அதாவது ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனில் நாம் பார்த்த அதே ஃபாஸ்ட் சார்ஜிங்கையே இதுவும் பேக் செய்யும்.

என்னது அதே ஃபாஸ்ட் சார்ஜிங்-ஆ என்று சிலர் சலிப்படைய, மறுகையில் உள்ள சிலர், ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவு இடம்பெறலாம். அதனால் தான் பழைய போனில் உள்ள அதே வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் திறன் தக்கவைக்கப்பட்டு உள்ளது என்று யூகித்த வண்ணம் உள்ளனர்.

OnePlus 12 பல்பு வாங்க இந்த 1 காரணம் போதாதா!

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ஒன்பிளஸ் 12 5ஜி ஸ்மார்ட்போனின் பேட்டரித்திறன் மேம்படுத்தப்பட்டதாக இருக்குமென்று ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. அறியாதோர்களுக்கு ஒன்பிளஸ் 12 ஆனது 5400mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்றும், இது குவால்காமின் லேட்டஸ்ட் சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 SoC-ஐ கொண்டு இயங்குவது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர்த்து ஒன்பிளஸ் 12 5ஜி ஸ்மார்ட்போனானது 2கே ரெசல்யூஷன், 2600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், மேட் ஏ+ ரேட்டிங் எக்ஸ்1 "ஓரியண்டல் ஸ்கிரீன்" டிஸ்பிளேவுடன் வரும் என்று டீஸ் செய்யப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, சோனி LYTIA LYT808 மெயின் ரியர் கேமரா, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான ஆக்ஸிஜன்ஓஎஸ் 14 இடம்பெறலாம்.

கேமராக்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் + 48 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் டெலிஃபோட்டோ சென்சார் + 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் ஹைப்ரிட் ஜூமிங்கை வழங்கும் 64-மெகாபிக்சல் OmniVision OV64B சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யும். முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறலாம்.

மேலும் ஒன்பிளஸ் 12 5ஜி ஸ்மார்ட்போனில், நிறுவனத்தின் சமீபத்திய பிளாக்ஷிப் போன்களில் காணப்படும் 'அலெர்ட் ஸ்லைடர்' அம்சம் (Alert Slider Feature) கட்டாயம் இடம்பெறும். கடைசியாக, இந்த ஸ்மார்ட்போனில் அங்கீகரிப்புக்கான இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரையும் (in-display fingerprint scanner) கொண்டிருக்கும்.

முன்னரே குறிப்பிட்டபடி, ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது உடனடி வெளியீட்டை காணாது; அடுத்த ஆண்டு ஜனவரியில் உலக சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இந்தியாவில் இது ரூ.80,990 க்கு அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.56,999 க்கு வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Oneplus 12 100W Fast Charging Similar To Oneplus 11
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X