Home
Mobile

OnePlus 11R விலை விவரம் வெளியானது: இனி அறிமுக தேதி சொன்னால் மட்டும் போதும்.!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 11ஆர் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது. குறிப்பாக இந்த ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போன் ஆனது பெரிய டிஸ்பிளே, தரமான சிப்செட் மற்றும் பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஒன்பிளஸ் 11ஆர் விலை

இந்நிலையில் ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.35,000-விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இதன் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் ரூ.40,000-விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

OnePlus 11R விலை விவரம் வெளியானது.!

ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் curved AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவரும். பின்பு இந்த போன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2772×1240 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும். பெரிய டிஸ்பிளே என்பதால் கேமிங், வீடியோ போன்ற அனைத்திற்கும் மிக அருமையாகப் பயன்படும். குறிப்பாக இந்த போன் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரும்.

ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். பின்பு இந்த ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஒன்பிளஸ் போன் OxygenOS 13.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

50எம்பி பிரைமரி கேமரா

விரைவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையாகப் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் அறிமுகமாகும். குறிப்பாக இதன் கேமரா வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

OnePlus 11R விலை விவரம் வெளியானது.!

ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போன் 8ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த புதிய போனில் ஐசு பிளாஸ்டர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் எனத் தெரிகிறது. அதேபோல் இந்த போன் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு கொண்டுவரும். அதேபோல் இந்த புதிய போன் கருப்பு மற்றும் நீல நிறத்தில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஸ்ட் சார்ஜிங் வசதி

ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே இந்த போனில் நீண்ட நேரம் வீடியோ பார்க்க முடியும் அல்லது நீண்ட கேம் விளையாட முடியும். அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.

OnePlus 11R விலை விவரம் வெளியானது.!

ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், 5ஜி ஆதரவு, வைஃபை, ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. பின்பு இந்த ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போன் ஆனது இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் இந்த ஆண்டு பல 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் வலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனத்தின் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 11R smartphone price leaked online: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X