Home
Mobile

இணையத்தில் கசிந்த ஒன்பிளஸ் 11ஆர் புகைப்படங்கள் மற்றும் அம்சங்கள்.!

ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்த மாதம் ஜனவரி 7-ம் தேதி புதிய ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதாவது இந்த புதிய ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போன் ஆனது ஒன்பிளஸ் 11 போனுக்கு அடுத்து அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்வ்டு எட்ஜ் கொண்ட ஸ்கிரீன்

கர்வ்டு எட்ஜ் கொண்ட ஸ்கிரீன்

இணையத்தில் வெளியான புகைப்படத்தின் அடிப்படையில், ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போன் கர்வ்டு எட்ஜ் கொண்ட ஸ்கிரீன், மத்தியில் பன்ச் ஹோல் வழங்கப்படும் எனத் தெரியவந்துள்ளது. அதேபோல் ட்ரிபிள் ரியர் கேமரா உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும். பின்பு இந்த போன் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனை விட சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 curved AMOLED டிஸ்பிளே

curved AMOLED டிஸ்பிளே

மேலும் ஆன்லைனில் கசிந்த ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். இந்த ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போன் ஆனது curved AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவரும். பின்பு இந்த போன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1080×2412 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட்

ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த ஒன்பிளஸ் போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா

50எம்பி பிரைமரி கேமரா

புதிய ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையாகப் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும்,வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் அறிமுகமாகும் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

IR பிளாஸ்டர்

IR பிளாஸ்டர்

ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போன் 8ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த புதிய போனில் IR பிளாஸ்டர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

 5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

இந்த ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி ஆதரவு

5ஜி ஆதரவு

அதேபோல் 5ஜி ஆதரவு, வைஃபை, ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த போன் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Photo Courtesy: Twitter, heyitsyogesh

Best Mobiles in India

English summary
OnePlus 11R Photos and Features Leaked Online: Full Details!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X