Home
Mobile

விஸ்வரூப விற்பனை.. ரூ.25000 பட்ஜெட்ல 100W சார்ஜிங்.. 3D கர்வ்ட் டிஸ்பிளே.. SONY கேமரா.. எந்த மாடல்?

3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், சோனி சென்சார் கொண்ட கேமரா போன்ற பிரீமியம் அம்சங்களுடன் ரூ.39,999 பட்ஜெட்டில் அறிமுகமான ஒன்பிளஸ் 11ஆர் (OnePlus 11R) போன் அமேசான் டிஸ்கவுண்டில் (Amazon Discount) இதுவரையில் கிடைக்காத விலைக்கு வந்துள்ளது.

கிட்டத்தட்ட ரூ.14,999 பட்ஜெட் குறைக்கப்பட்டிருக்கிறது. பக்கா பிரீமியம் மாடலை பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட்டில் வாங்க திட்டமிட்டிருக்கும் ஒன்பிளஸ் பிரியர்களுக்கு இதைவிட நல்ல வாய்ப்பு கிடைக்காது. இந்த பட்ஜெட்டில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த ஒன்பிளஸ் 11ஆர் போனானது, என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது என்பதை பார்ப்போம்.

விஸ்வரூப விற்பனை.. ரூ.25000 பட்ஜெட்ல 100W சார்ஜிங்.. 3D டிஸ்பிளே போன்!

இந்த போனின் கேமரா, டிஸ்பிளே மற்றும் பேட்டரி அம்சங்கள் மிரளவிடுகின்றன. அதேபோல மிட்-பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட சிப்செட் மற்றும் கிராபிக்ஸ் வருகிறது. டிசைனிலும் அல்ட்ரா பிரீமியம் லுக் கொடுக்கிறது. அதிலும் வேகன் லெதர் பேக் பேனல் கொண்ட வேரியண்ட்டும் விற்பனைக்கு கிடைக்கிறது.

ஒன்பிளஸ் 11ஆர் அம்சங்கள் (OnePlus 11R 5G Specifications): இந்த போனில் 6.74 இன்ச் 3டி கர்வ்ட் டிசைன் (3D Curved Design) கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த பேனலில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 450 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வருகிறது.

மேலும், எஸ்ஆர்ஜிபி (sRGB), பி3 கலர் காமட் மற்றும் எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) சப்போர்ட் வருவதால், பிரீமியம் டிஸ்பிளே அவுட்புட் இந்த மாடலில் எதிர்பார்க்கலாம். இதுபோக ஐ கம்போர்ட், வீடியோ கலர் என்ஹான்சர், ஸ்கிரீன் கலர் மேட், ஸ்கிரீன் கலர் டெம்பரேச்சர், பிரைட் எச்டிஆர் வீடியோ மோட் போன்ற டிஸ்பிளே பீச்சர்கள் வருகின்றன.

விஸ்வரூப விற்பனை.. ரூ.25000 பட்ஜெட்ல 100W சார்ஜிங்.. 3D டிஸ்பிளே போன்!

இந்த ஒன்பிளஸ் 11ஆர் போனில் ஆக்ஸிஜன் ஓஎஸ் (OxygenOS) பேஸ்டு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) வருகிறது. பட்ஜெட்டுக்கு ஏற்ப பட்டையை கிளப்பும் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 மொபைல் சிப்செட் வருகிறது. கேமிங் பிரியர்களுக்கு பக்கா அவுட்புட் கொடுக்கும் அட்ரினோ 730 ஜிபியு கிராபிக்ஸ் வருகிறது.

ஹை-எண்ட் பேட்டரி சிஸ்டம் வருகிறது. 100W சூப்பர்வூக் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்890 சென்சார் மற்றும் ஆட்டோபோகஸ் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + ஃபிக்ஸ்ட்போகஸ் கொண்ட 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது.

மேலும், 2 எம்பி மேக்ரோ கேமராவுடன் பிரீமியம் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டிருக்கிறது. ஓஐஎஸ்/ஈஐஎஸ் டெக்னாலஜி, 4K வீடியோ ரெக்கார்டிங், பிடிஏஎப், எல்ஏஎப் மற்றும் சிஏஎப் ஆட்டோபோகஸ் சப்போர்ட் கொண்டிருக்கிறது. நைட்ஸ்கேப், அல்ட்ரா எச்டிஆர், போர்ட்ராய்டு, ப்ரோ போன்ற மோட்கள் வருகின்றன.

16 எம்பி செல்பீ ஷூட்டரானது, ஈஐஎஸ், பிக்ஸ்ட்போகஸ், 1080P வீடியோ ரெக்கார்டிங் மற்றும் செல்பீ எச்டிஆர் பீச்சர்களுடன் வருகிறது. ஆகவே, கேமரா பிரியர்களுக்கு பக்காவான தேர்வாக இந்த ஒன்பிளஸ் 11ஆர் மாடல் இருக்கும். நாய்ஸ் கேன்சலேஷன் சப்போர்ட் கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வருகின்றன.

இந்த ஒன்பிளஸ் 11ஆர் போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்டின் விலை அமேசானில் ரூ.27,000ஆக இருக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் கனரா பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,500 உடனடி டிஸ்கவுண்ட் மற்றும் மற்ற வங்கி கார்டுகளுக்கு ரூ.2000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.24,500 பட்ஜெட்டில் இந்த போனை வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 11R 5G With 50MP Camera Sale Under Rs 25000 in Amazon Discount Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X