இது வேற ரகம்.. 100W ஃபாஸ்ட் சார்ஜ்.. 50எம்பி கேமரா.. அக்.7-ல் வருகிறது புது ஒன்பிளஸ் போன்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி சோலார் ரெட் எடிஷனை (OnePlus 11R 5G Solar Red Edition) இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த சிவப்பு நிற ஒன்பிளஸ் போன் ஆனது இந்தியாவில் அக்டோபர் 7-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த போனில் ஒரே நேரத்தில் 50 ஆப்ஸ் வரை பயன்படுத்தினாலும் சீராக இயங்கும் என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. இதுதவிர தடையற்ற கேமிங் அனுபவத்தை வழங்கும் இந்த அசத்தலான ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி சோலார் ரெட் எடிஷன். மேலும் இந்த பிரீமியம் போன் ஆனது 18ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் விற்பனைக்கு வரும்.

அதேபோல் ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி சோலார் ரெட் எடிஷன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 (Snapdragon 8+ Gen 1) சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த புதிய போன்.
இந்த ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி சோலார் ரெட் எடிஷன் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும். பின்பு 100 வாட்ஸ் சூப்பர்வூக் (100W SUPERVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதவு கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். எனவே 25 நிமிடங்களில் இதை ஃபுல் சார்ஜ் செய்துவிட முடியும்.
குறிப்பாக ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி சோலார் ரெட் எடிஷன் ஆனது அக்டோபர் 7-ம் தேதி மதியம் 12 மணி அளவில் அமேசான் தளத்தில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அக்டோபர் 6-ம் தேதி கம்மி விலையில் ஒன்பிளஸ் பேட் கோ எனும் டேப்லெட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது ஒன்பிளஸ் நிறுவனம். இந்த டேப்லெட் மாடலின் சிறப்பு அம்சங்களைப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் பேட் கோ (OnePlus Pad Go) மாடல் ஆனது 11.35-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் இந்த டேப்லெட் மாடலை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 2.4கே ரெசல்யூஷன், 7:5 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட்.
ஒன்பிளஸ் பேட் கோ மாடலில் சக்திவாய்ந்த மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் (Helio G99 Chipset) உள்ளது. குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த டேப்லெட் மாடலை நம்பி வாங்கலாம். அதாவது இந்த ஹீலியோ ஜி99 சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு இந்த டேப்டெல் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
கலர்ஓஸ் 13.2 (ColorOS 13.2) சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான டேப்லெட். எனவே இந்த டேப்லெட் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த புதிய ஒன்பிளஸ் டேப்லெட் ஆனது 523 கிராம் எடை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் பேட் கோ மாடல் இந்தியாவில் அறிமுகமாகும். 8எம்பி செல்பி கேமரா மற்றும் 8எம்பி ரியர் கேமரா ஆதரவு இதில் உள்ளது. மேலும் 8000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டு இந்த ஒன்பிளஸ் பேட் கோ மாடல் வெளிவரும். மேலும் இந்த டேப்லெட் ஒன்று வைஃபை-ஒன்லி (WiFi Only), மற்றொன்று வைஃபை மற்றும் செல்லுலார் கனெக்டிவிட்டி (WiFi and Cellular Connectivity) உடன் வரலாம்.


Click it and Unblock the Notifications








