எந்தவொரு பரபரப்பும் இன்றி அறிமுகமான புது OnePlus போன்.. 100W சார்ஜிங்.. 18GB ரேம்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனம் இன்று தனது புதிய ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி சோலார் ரெட் எடிஷனை (OnePlus 11R 5G Solar Red Edition) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது சிவப்பு நிறத்தில் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது 18ஜிபி ரேம், மேம்படுத்தப்பட்ட செயல்திறன், ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது. ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி சோலார் ரெட் எடிஷனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி சோலார் ரெட் எடிஷனின் விலை ரூ.45,999-ஆக உள்ளது. பின்பு இந்த போன் ஒன்பிளஸ்.இன், ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப், அமேசான் போன்ற சில தளங்களில் மட்டும் இந்த போனை வாங்க முடியும். அதேபோல் வரும் அக்டோபர் 7-ம் தேதி Early Access-ன் ஒரு பகுதியாக இந்த சோலார் ரெட் எடிஷன் போனை வாங்கும் பயனர்கள் ரூ.1000 தள்ளுபடியைப் பெறமுடியும். மேலும் இதனுடன் ஒன்பிளஸ் பட்ஸ் இசட்2-வை இலவசமாகப் பெறமுடியும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் இந்த போனை வரும் அக்டோபர் 8-ம் தேதி முதல் நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தில் பெற முடியும். மேலும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கும் பயனர்கள் ரூ.3000 வரை தள்ளுபடியைப் பெறலாம். இப்போது ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி சோலார் ரெட் எடிஷனின் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
அதாவது 6.74-இன்ச் அமோலெட் (AMOLED)டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி சோலார் ரெட் எடிஷன் போன். மேலும் 2772×1240 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1450 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி சோலார் ரெட் எடிஷன் போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 + ஜென் 1 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. அதேபோல் இந்த போனில் 18ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனில் அட்ரினோ 730 ஜிபியு (Adreno 730 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
அதேபோல் OxygenOS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புத்தம் புதிய ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி சோலார் ரெட் எடிஷன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் மென்பொருள் மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி சோலார் ரெட் எடிஷன் போன். எனவே இந்த போனின் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன்.
இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி சோலார் ரெட் எடிஷன் போன். பின்பு 100 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த புத்தம் புதிய ஒன்பிளஸ் போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கும் சாரஜ் பற்றிய கவலை இருக்காது. அதேசமயம் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.


Click it and Unblock the Notifications








