அடுத்த 2,3 நாள்ல செம்ம டிமாண்ட் ஆகிடும்.. 2023-ல் சக்கை போடு போட்ட OnePlus மாடல் மீது ரூ.3000 விலை குறைப்பு!
இந்தியாவில் ஒன்பிளஸ் 12 மற்றும் ஒன்பிளஸ் 12ஆர் அறிமுகமாகி 2 மாதங்கள் ஆகின்ற நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டில்.. விற்பனையில் சக்கைபோடு போட்ட ஒரு ஒன்பிளஸ் மாடல் மீது திடீர் விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன மாடல்? எவ்வளவு விலை குறைந்துள்ளது? இதோ விவரங்கள்:
ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை தொடர்ந்து கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிரீமியம் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 11ஆர் (OnePlus 11R) ஸ்மார்ட்போனின் மீது திடீர் விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சுவாரசியமான விஷாதம் என்னவென்றால்.. பிரீமியம் அம்சங்கள் மற்றும் ஹை-எண்ட் குவால்காம் சிப்செட் உடன் வரும் ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போனின் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுமே விலைக்குறைப்பை பெற்றுள்ளன.

நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போன், கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியானது. அந்த நேரத்தில் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.39,999 க்கும், ஹை-எண்ட் 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.44,999 க்கும் அறிமுகமானது.
தற்போது ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் மீது ரூ.2,000 விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.37,999 ஆக குறைந்துள்ளது. இந்த புதிய விலை நிர்ணயம் ஒன்பிளஸ் இந்தியா வலைத்தளத்திலும் பிரதிபலிக்கிறது.

மறுகையில் உள்ள ஹை-எண்ட் ஆப்ஷன் மீது ரூ.3,000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக 16ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் இப்போது ரூ.41,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதனுடன் சேர்த்து, ஒன்பிளஸ் நிறுவனமானது ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு (ICICI Bank credit card) வழியாக ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,000 உடனடி தள்ளுபடியையும் வழங்குகிறது.
ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: சோனிக் பிளாக் மற்றும் கேலடிக் சில்வர் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும் ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஆனது 120ஹெர்ட்ஸ் வரையிலான அடாப்டிவ் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.74-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 4என்எம் மொபைல் பிளாட்ஃபாரம் (Octa-Core Snapdragon 8+ Gen 1 4nm Mobile Platform) மூலம் இயக்கப்படுகிறது. இது 16ஜிபி வரையிலான ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை (Triple Rear Camera Setup) கொண்டுள்ளது.
இதன் கேமரா செட்டப்பில் 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்890 சென்சார் + 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா உள்ளன. முன்பக்க கேமராவை பொறுத்தவரை, டிஸ்பிளேவில் உள்ள ஹோல் பஞ்ச் கட்அவுட்டில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் பேட்டரியை பொறுத்தவரை இது 100W சூப்பர்வூக் எஸ் ஃபிளாஷ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது. கடைசியாக இது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 13 உடன் வருகிறது மற்றும் டூயல் நானோ சிம் கார்டுகளை ஆதரிக்கிறது.


Click it and Unblock the Notifications