Home
Mobile

மிட்-ரேன்ஜ் விலையில் OnePlus 11R 5G விற்பனை.. வாங்குறதுக்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுகோங்க!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 11 5ஜி மாடலை தொடர்ந்து, மிட்-ரேன்ஜ் விலை ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி (OnePlus 11R 5G) மாடலின் இந்திய விற்பனையும் தொடங்கி உள்ளது. இன்று முதல், அதாவது பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி போனின் முன்பதிவுகள் (Pre-order) தொடங்குகிறது.

இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் முன்.. இது மொத்தம் எத்தனை ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கிறது? அவைகளின் விலை நிர்ணயம் என்ன? இந்த ஸ்மார்ட்போனை எங்கே முன்பதிவு செய்வது? ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் உள்ளன? போன்ற விவரங்களை நீங்கள் அறிந்துகொள்வது அவசியம்!

OnePlus 11R 5G போனின் இந்திய விற்பனை ஆரம்பம்! என்ன விலை?

ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா?

ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போனானது கடந்த 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி (OnePlus 10R 5G) ஸ்மார்ட்போனிற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து வெளியாகும் ஒரு அப்கிரேடட் வெர்ஷனாகும்.

கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதியன்று அறிமுகமான ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி மாடலானது, ஒன்பிளஸ் 11 5ஜி மாடலை போல ஒரு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அல்ல. ஆனாலும் கூட இது சில நல்ல அம்சங்களுடன் வரும் ஒரு நல்ல மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

உங்களால் ஒன்பிளஸ் 11 5ஜி போன்ற பிளாக்ஷிப் ஸ்மாட்போனை வாங்க முடியாது என்றால், அதைவிட விலை குறைவான ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி மாடலானது நிச்சயம் ஒரு நல்ல தேர்வாகவே இருக்கும்!

ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்

- இது எச்டிஆர்10 பிளஸ், 2772x1240 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் அமோஎல்இடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

- இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி (Qualcomm Snapdragon 8 Gen 1 SoC) மூலம் இயக்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா, ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி மற்றும் பல ஸ்மார்ட்போன்களில் கூட இதே சிப்செட் தான் உள்ளது.

- இது 16ஜிபி வரையிலான LPDDR5x ரேம் மற்றும் 256GB வரையிலான UFS 3.1 இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது.

- இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான ஆக்ஸிஜென்ஓஎஸ் 13 (OxygenOS 13) உடன் வருகிறது.

- இது 100W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது

- கேமராக்களை பொறுத்தவரை, ஓஐஎஸ் ஆதரவுடன் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்890 சென்சார் + 8எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சாரை கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. இது 4K 60fps வீடியோக்களை ரெக்கார்ட் செய்ய அனுமதிக்கிறது. செல்பீகளுக்காக இதில் 16எம்பி சென்சார் உள்ளது.

ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி விலை மற்றும் ப்ரீ-ஆர்டர் விவரங்கள்

ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் கேலக்டிக் சில்வர் மற்றும் சோனிக் பிளாக் என்கிற 2 கலர் ஆப்ஷன்களின் வெளியாகியுள்ளது. மேலும் இது இரண்டு ஸ்டரோஜ் ஆப்ஷன்களின் கீழ் ப்ரீ-ஆர்டர் செய்ய கிடைக்கிறது.

பேஸிக் மாடலான 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.39,999 க்கும், ஹை-எண்ட் மாடலான 16ஜிபி+256ஜிபி ஆப்ஷன் ரூ.44,999 க்கு வாங்க கிடைக்கும். இது அமேசான் இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைத்ததளம், ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப் மற்றும் ஒன்பிளஸ் வலைத்தளம் வழியாக முன்பதிவு செய்ய கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 11R 5G Pre Order Starts in India From Today February 21 Check Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X