Home
Mobile

ரூ.12000 தள்ளுபடி செஞ்ச பாரு.. OnePlus தாராள மனசுயா உனக்கு.. OnePlus 11R மீது குவியுது ஆர்டர்.. புது விலை?

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் சமீபத்திய பட்ஜெட் செக்மென்ட் ஸ்மார்ட்போன் (Budget segment smartphone) சாதனமான ஒன்பிளஸ் 11ஆர் (OnePlus 11R) ஸ்மார்ட்போனின் விலையை அதிரடியாக ரூ. 12,000 வரை முழுமையாக குறைத்துள்ளது. இந்த புதிய சலுகை விலையில் ஒன்பிளஸ் 11R ஸ்மார்ட்போன் மாடலை எப்படி வாங்குவது? எங்கிருந்து வாங்குவது? இந்த நேரத்தில் இந்த போனை இந்த விலையில் வாங்குவது சிறந்த முடிவு தானா? என்பது போன்ற பல முக்கியமான தகவல்களை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் அதன் ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி (OnePlus Nord 3 5G) ஸ்மார்ட்போனின் விலையை இந்தியாவில் குறைத்தது. இப்போது ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 11R (OnePlus 11R) மாடலின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. இப்போது இந்த ஒன்பிளஸ் 11R போனின் விலை ரூ. 30,000-திற்கும் குறைவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.12000 தள்ளுபடி செஞ்ச பாரு.. OnePlus தாராள மனசுயா உனக்கு..

ஒன்பிளஸ் 11R மீது ரூ. 12000 வரை அதிரடி விலை குறைப்பு (OnePlus 11R Gets Price Drop Of Rs 12000):

கடந்த பிப்ரவரி 2023 இல் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 11R (OnePlus 11R) ஸ்மார்ட்போனின் அசல் விலை (MRP Price) ரூ. 39,999 ஆகும். ஆனால், தற்போது அமேசான் வழியாக ரூ. 27,999 என்ற சலுகை விலையில் (Offer Price) வாங்க கிடைக்கிறது. இந்த புதிய அறிவிப்பு மூலம் உங்களுக்கு முழுமையாக ரூ.12,000 வரை இந்த ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இது உண்மையில் நமக்கு கிடைக்கும் மிகப்பெரிய லாபமாக பார்க்கப்படுகிறது.

இந்த புதிய குறைக்கப்பட விலை 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் விலையுடன் வெளிவரும் மாடலுக்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விலையில் இன்றைய காலத்தில் ஒன்பிளஸ் 11R வாங்குவது சிறந்ததா? என்ற சந்தேகம் உங்களில் சிலருக்கு இருக்கும். உண்மையை சொல்ல போனால், இந்த விலைக்கு இந்த சாதனம் பெஸ்ட் தேர்வாக அமைகிறது. இருப்பினும், இதை விட ரூ.2000 கூடுதலாக செலுத்தினால், இன்னும் சில பெஸ்ட் போன்களை உங்களால் வாங்க முடியும்.

ரூ. 27,999 விலையில் ஒன்பிளஸ் 11R சாதனம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் உடன் வருகிறது என்றாலும், ரூ. 29,999 விலையில் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 சிப்செட் மற்றும் UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் போகோ எஃப்6 (POCO F6) ஸ்மார்ட்போன் வாங்க கிடைக்கிறது. இது ஒன்பிளஸ் 11R போனின் UFS 3.1 ஸ்டோரேஜ் விட சற்று அதிகமானது.

குவியுது ஆர்டர்.. இந்த நேரத்தில் ஒன்பிளஸ் 11R வாங்க சிறந்த போன் தானா? உண்மை என்ன?

அதேபோல், ரியல்மி ஜிடி 6T (Realme GT 6T) சாதனம் ஸ்னாப்டிராகன் 7+ ஜென் 3 சிப்செட் உடன் அல்ட்ரா பாஸ்ட் ஸ்டோரேஜ் ஆதரவை வழங்கும் மற்றொரு தேர்வாக அமைகிறது. இந்த காரணங்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில், ஒன்பிளஸ் 11R வாங்கிய பிறகு இருக்கும் கஸ்டமர் சப்போர்ட் போன்ற விஷயங்களில் இன்னும் சிறந்த தேர்வாகவே பார்க்கப்படுகிறது. இறுதியில் விருப்பம் உங்களுடையது.

இதை தவிர இந்த போனை சிறந்ததாக மதிப்பிட இதன் ஹை-கிராபிக்ஸ் கேமிங் (high graphics gaming) அம்சத்தையும் நாம் குறிப்பிடலாம். BGMI போன்ற கேம்களை சிறந்த பிரேம் ரேட் உடன் நீங்கள் விளையாட முடியும். அதேபோல், ஒன்பிளஸ் 11R சாதனம் மூன்று மிகப்பெரிய அப்டேட்களை உறுதி செய்துள்ளது. இது ஆண்ட்ராய்டு 16 (Android 16) வரை அப்டேட் பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர இந்த போனில் 6.7" இன்ச் 120Hz AMOLED டிஸ்பிளே, டால்பி அட்மாஸ் ஆடியோ, 50MP + 8MP + 2MP ட்ரிபிள் கேமரா, 16MP செல்பி கேமரா, 5000mAh பேட்டரி மற்றும் 100W சூப்பர் பாஸ்ட் சார்ஜிங், 5ஜி ஆதரவு, வைஃபை 6E, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் போன்ற பல அட்டகாச அம்சங்களை கொண்டுள்ளது. சுற்றி வளைத்து எப்படி பார்த்தாலும் ஒன்பிளஸ் 11R பெஸ்ட் தேர்வாகவே திகழ்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 11R 5G Mobile Gets Sudden Price Drop Of Rs 12000 From MRP Rs 39999 To New Price Rs 27999 In Amazon India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X