Home
Mobile

OnePlus 11 vs OnePlus 11R: இரண்டு போனுக்கும் இவ்வளவு தான் வித்தியாசமா? அப்போ எதை வாங்கலாம்?

ஒன்பிளஸ் நிறுவனம் நேற்று நடத்திய ஒன்பிளஸ் கிளவுட் 11 ஈவென்ட் (OnePlus Cloud 11 Event) நிகழ்வில், இரண்டு புதிய ஸ்மார்ட்போன் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஒன்பிளஸ் 11 (OnePlus 11) மற்றும் ஒன்பிளஸ் 11R (OnePlus 11R) ஆகிய 2 மாடல்களை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஒனேபிள்ஸ் நிறுவனத்தின் பிளாக்ஷிப் (Flagship smartphone) சாதனமாக ஒன்பிளஸ் 11 மொபைல் என்ற அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை நிறுவனம் ஷேப் ஆஃப் பவர் (Shape Of Power), பவர் என்றால் ஒன்பிளஸ் 11 தான் என்று கூறி, இந்த மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக நிறுவனம், பட்ஜெட் பிரியர்களுக்கான (Budget smartphone) ஒன்பிளஸ் 11R மாடலை அறிமுகம் செய்துள்ளது.

OnePlus 11 vs OnePlus 11R: இரண்டு போனுக்கும் இவ்வளவு தான் வித்தியாசமா?

ஒன்பிளஸ் 11 மற்றும் ஒன்பிளஸ் 11R இரண்டிற்கும் மத்தியில் என்ன வித்தியாசம்?

ஒன்பிளஸ் 10R (OnePlus 10R) போனை தொடர்ந்து, இந்த ஒன்பிளஸ் 11R பட்ஜெட் செக்மென்ட்டில் (30K Budget segment phone) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பட்ஜெட் செக்மென்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தாலும், இதன் ஸ்பெக்ஸ்கள் (Specs), பிரீமியம் ஒன்பிளஸ் 11 மாடலுக்கு நெருக்கமாக அமைந்துள்ளது என்பதே நம்மை வியப்படைய வைக்கிறது. OnePlus 11 மற்றும் OnePlus 11R இடையிலான வேறுபாடுகள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கப்போகிறோம்.

OnePlus 11 vs OnePlus 11R: இரண்டு போனுக்கும் இவ்வளவு தான் வித்தியாசமா?

ஒன்பிளஸ் 11 (OnePlus 11 5G)

ஒன்பிளஸ் 11R (OnePLus 11R 5G)

- 6.7' இன்ச் 120 Hz Super Fluid AMOLED + LTPO டிஸ்பிளே - 6.74' இன்ச் 120 Hz Super Fluid AMOLEDடிஸ்பிளே
- 1440 x 3216 பிக்சல் - 1240 x 2772 பிக்சல்
- 526 ppi உடன் 1000 Hz டச் ரெஸ்பாஸ்ன் ரேட் - 451 ppi உடன் 360 Hz டச் ரெஸ்பான்ஸ் ரேட்
- Snapdragon 8 Gen 2 சிப்செட் - Snapdragon 8+ Gen 1 சிப்செட்
- 8GB/16GB LPDDR5X ரேம் + 128GB UFS 3.1/256GB UFS 4.0ஸ்டோரேஜ்

- 8GB/16GB LPDDR5X ரேம் + 128GB/256GB UFS 3.1 2@LANE ஸ்டோரேஜ்

- Adreno 740 - Adreno 730
- 50 MP Sony IMX890 + 48 MP + 32 MP ட்ரிபிள் ரியர் கேமரா - 50 MP Sony IMX890 + 8 MP + 2 MP ட்ரிபிள் ரியர் கேமரா
- 16 MP செல்ஃபி கேமரா

- 16 MP செல்ஃபி கேமரா

- OxygenOS 13.0 அடிப்படையிலான Android 13 - OxygenOS அடிப்படையிலான Android 13
- 100W SUPERVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் - 100W SUPERVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்
- 5,000 mAh பேட்டரி - 5,000 mAh பேட்டரி
- Eternal Green மற்றும் Titan Black நிறம் - Galactic Silver மற்றும் Sonic Black நிறம்
- 8 GB RAM + 128 GB விலை ரூ. 56,999 - 8 GB RAM + 128 GB விலை ரூ. 39,999
- 16 GB RAM + 256 GB விலை ரூ. 61,999 - 16 GB RAM + 256 GBவிலை ரூ. 44,999
- பிப்ரவரி 7, 2023 முதல் Pre-Order - பிப்ரவரி 21, 2023 முதல் Pre-Order
- பிப்ரவரி 14, 2023 முதல் Open Sales - பிப்ரவரி 28, 2023 முதல் Open Sales

OnePlus 11 vs OnePlus 11R: இரண்டு போனுக்கும் இவ்வளவு தான் வித்தியாசமா?

OnePlus 11 vs OnePlus 11R எந்த போனை வாங்கலாம்? எது பெஸ்ட்?

இந்த இரண்டு OnePlus 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் OnePlus.com மற்றும் Amazon.in வழியாகவும், OnePlus Store மற்றும் இதர சில்லறை விற்பனையாளர்கள் மூலமாகவும் இந்தியாவில் வாங்க கிடைக்கும். நீங்கள் பட்ஜெட் பிரியர் என்றால், தாராளமாக OnePlus 11R வாங்க செல்லலாம். பட்ஜெட்டில் இருந்து சற்று விலகி பிளாக்ஷிப் அனுபவத்தை ருசிக்க நினைத்தால், நீங்கள் தாராளமாக OnePlus 11 வாங்க செல்லலாம்.

இறுதியில், மிகவும் பவர்புல் போன் என்றால், எல்லாம் ஸ்கோரிங்கிலும் OnePlus 11 தான் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளது என்பதே உண்மை. முடிவு உங்கள் பட்ஜெட்டை பொறுத்தது. உங்களுக்கு, இதில் எந்த மாடல் பிடித்துள்ளது என்பதை கருத்தில் கமெண்ட் செய்யுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 11 vs OnePlus 11R Specification Difference and Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X