தரமான சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும் ஒன்பிளஸ் 11: பணத்தை ரெடி பண்ணி வச்சுக்கோங்க.!

|

ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 10டி போனுக்கு பின்பு புதிய ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய போன் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஸ்னாப்டிராகன் சிப்செட்

ஸ்னாப்டிராகன் சிப்செட்

அதாவது இணையத்தில் வெளிவந்த தகவலின்படி, இந்த ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்
வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட சிபியு மற்றும் ஜிபியு வேகத்தை வழங்கும்.

கண்கள் முக்கியம் மக்களே: உங்கள் ஸ்மார்ட்போனின் Display என்ன டைப், எது பெஸ்ட்?கண்கள் முக்கியம் மக்களே: உங்கள் ஸ்மார்ட்போனின் Display என்ன டைப், எது பெஸ்ட்?

ஆண்ட்ராய்டு 12

ஆண்ட்ராய்டு 12

அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் மற்றவிவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.

மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

AMAZON வாங்குனா இப்படி ஒரு 5G போனை தான் வாங்கணும்.! எல்லாமே பெஸ்ட் கலெக்ஷன் பாஸ்.!

 ஒன்பிளஸ் 10டி

ஒன்பிளஸ் 10டி

ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் அளவிலான AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது
இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

அடேங்கப்பா.! Amazon மற்றும் Flipkart விற்பனையை ஓரங்கட்டும் Mi Diwali Sale.! தேதி இது தான்.!அடேங்கப்பா.! Amazon மற்றும் Flipkart விற்பனையை ஓரங்கட்டும் Mi Diwali Sale.! தேதி இது தான்.!

ஸ்னாப்டிராகன் சிப்செட்

ஸ்னாப்டிராகன் சிப்செட்

ஒன்பிளஸ் 10டி மாடல் Qualcomm Snapdragon 8 Gen 1 மூலம் இயக்கப்படும். நிறுவனத்தின் கூற்றுப்படி, இது தெர்மல் பெர்ஃபார்ம்மென்ஸை மேம்படுத்தும் மற்றும் OnePlus 10 Pro மாடலை விட அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும்.

குறிப்பாக இந்த போன் ஹைப்பர்பூஸ்ட் கேமிங் இன்ஜினையும் பேக் செய்கிறது, இது நீண்ட நேர கேமிங்கின் போது ஸ்மார்ட்போனின் செயல்திறனை மேம்படுத்த உதவும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 16ஜிபி ரேம் உடன் வருகிறது.

கைக்கொடுப்பது கடமை, விடாமுயற்சியில் இந்திய நிறுவனமான Lava.. இந்த டைம் மிஸ் ஆகாது!கைக்கொடுப்பது கடமை, விடாமுயற்சியில் இந்திய நிறுவனமான Lava.. இந்த டைம் மிஸ் ஆகாது!

சூப்பரான கேமரா

சூப்பரான கேமரா

50-மெகாபிக்சல் சோனி IMX769 மெயின் சென்சார் + 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் + 2-மெகாபிக்சல் மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமராஅமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக்கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

அட்டகாசமான பேட்டரி

அட்டகாசமான பேட்டரி

OnePlus 10T ஸ்மார்ட்போன் ஆனது 150W SuperVooc ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்ட 4500mAh பேட்டரி உடன் வருகிறது. குறிப்பாக இந்த
போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளதுஇந்நிறுவனம்.

உங்க போன் ஸ்லோவா இருக்கா? அடிக்கடி ஹேங் ஆகுதா? இதை செஞ்சா போன் ஸ்பீடு பிச்சுக்கும்.!உங்க போன் ஸ்லோவா இருக்கா? அடிக்கடி ஹேங் ஆகுதா? இதை செஞ்சா போன் ஸ்பீடு பிச்சுக்கும்.!

ஒன்பிளஸ் 10டி விலை

ஒன்பிளஸ் 10டி விலை

8ஜிபி ரேம் கொண்ட ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போனின் விலை ரூ.49,999-ஆக உள்ளது. பின்பு இதன் 12ஜிபி ரேம் கொண்ட வேரியண்டின் விலை ரூ.54,999-ஆக உள்ளது. மேலும் இதன் 16ஜிபி ரேம் கொண்ட வேரியண்டின் விலை ரூ.55,999-ஆக உள்ளது.

குறிப்பாக விரைவில் வெளிவரும் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனுக்கும் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
OnePlus 11 smartphone will be launched in India in December 2022: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X