ஒன்பிளஸ் 11 மார்பிள் ஒடிஸி எடிஷன்: வடிவமைப்பு மற்றும் புதுமையின் சிம்பொனி!
ஒரு ஸ்மார்ட்போன் என்பது தேவை மற்றும் அடையாளம் ஆகிய இரண்டிற்குமான ஆதாரமாகும். அது பலவகையான அம்சங்களை கொண்டுள்ளது மற்றும் அதே நேரத்தில், அது நமக்கான அழகியலையும் வரையறுக்கிறது. செயல்திறன் மற்றும் கேமராவின் தரத்திற்காக மட்டுமல்லாமல், தோற்றத்தின் அடிப்படையிலும் கூட நமக்கான ஸ்மார்ட்போன்களை நாம் தேர்வு செய்கிறோம். ஒரு ஸ்மார்ட்போனின் வடிவமைப்பானது அதன் கொள்முதல் முடிவில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.
ஒரே மாதிரி தோற்றமளிக்கும் ஸ்மார்ட்போன்களின் குவியலுக்கு மத்தியில், தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட ஒரு ஸ்மார்ட்போன் ஆனது, அதை வைத்திருப்பவருக்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை வழங்குமென்றால் அது மிகையாகாது.

உலகளாவிய தொழில்நுட்ப பிராண்டான ஒன்பிளஸ், அதன் ஸ்மார்ட்போன்களின் ஸ்பெஷல் எடிஷன்களை உருவாக்குவது ஒன்றும் புதிதல்ல. பல ஆண்டுகளாக, இந்த பிராண்டு பல்வேறு வண்ணங்கள், பொருட்கள் மற்றும் பூச்சுகள் ஆகியவற்றை பரிசோதித்து, உடனடியாக கண்களை கவரும் வகையில் தனித்துவமான வடிவமைப்புகளை கொண்ட ஸ்பெஷல் எடிஷன்களை நமக்கு வழங்கியுள்ளது.
அப்படியாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சமீபத்திய ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனானது, விமர்சன ரீதியாக, தற்போது சந்தையில் வாங்க கிடைக்கும் மிகச் சிறந்த ஸ்மார்ட்போன் என்கிற பாராட்டை பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் அமோகமாக விற்பனையாகியும் வருகிறது. இதற்கிடையில் தான், குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் அழகியல் அளவை அதிகரிக்க, ஒன்பிளஸ் அதன் லேட்டஸ்ட் ஃபிளாக்ஷிப்பின் மார்பிள் ஒடிஸி வண்ணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது நாங்கள் கண்டதிலேயே மிக அழகான வடிவமைப்புகளில் ஒன்றாகும்.
இந்தியாவிற்கான பிரத்யேக வடிவமைப்பு!
ஒன்பிளஸ் 11 மார்பிள் ஒடிஸி என்பது இரண்டு டிவைஸ்களும் ஒரே மாதிரியாக இல்லாத ஒரு பிராந்திய பிரத்தியேக கலர்வே ஆகும். எனவே, நீங்கள் பார்க்கும் மார்பிள் ஒடிஸியின் ஒவ்வொரு பதிப்பும் அதன் சொந்த வழியில் தனித்துவமானதாக இருக்கும்; ஒரு தனித்துவமான மாறுபாடாக இருக்கும். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் இரண்டு டிவைஸ்களும், பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கவே இருக்காது.
ஏனென்றால், இதன் உருவாக்கத்தின் ஒவ்வொரு பகுதியும், அதாவது இதில் பயன்படுத்தப்படும் பொருளிலிருந்து, நேர்த்தியான வடிவமைப்பை அடைவதற்கு வழங்கப்படும் இரசாயன சிகிச்சை வரையிலாக, எல்லாமே தொழில்துறைக்கு முதன்மையானது.

இந்த வடிவமைப்பின் தனித்துவமானது என்னவென்று நீங்கள் கேட்கலாம்? இந்த போனின் பின்புறம் பளிங்கு போன்ற அரிய மைக்ரோ கிரிஸ்டலின் ராக் மெட்டீரியலால் ஆனது. வெறும் கண்ணால் பார்க்க முடியாத அளவுக்கு சிறிய படிகங்களால் ஆன மைக்ரோ கிரிஸ்டலின் ராக் மெட்டீரியலானது ரா விஷூவல் டெக்ஸ்ஷரை மேம்படுத்துவதன் மூலம் உருவாக்கப்பட்டது.
மேலும் இந்த போனில் தோற்றம் மட்டுமே முக்கியமான விஷயம் அல்ல, உணர்வும் கூட. இது ஒரு சிறப்பான தொட்டுணரக்கூடிய அனுபவத்தை வழங்குகிறது. இந்த போன் மிகவும் மென்மையாக உள்ளது மற்றும் தொடுவதற்கு மிகவும் குளிர்ச்சியாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் இது பளிங்கு போன்ற பாறை அல்லது கூழாங்கல் போன்ற மெருகூட்டப்பட்ட துண்டுகளை தொடும் உணர்வை வெளிப்படுத்துகிறது.
மார்பிள் ஒடிஸி எடிஷனின் பின்னால் உள்ள கதை!
தொழில்துறையில் முதல் முறையாக ஒரு தனித்துவமான வடிவமைப்பை உருவாக்குவது எளிதான காரியம் அல்ல, மேலும் இந்த தனித்துவமான தொட்டுணரக்கூடிய அனுபவத்தை வழங்க ஒன்பிளஸ் பிராண்ட் ஆனது எதையுமே குறைக்கவில்லை.
இந்த தனித்துவமான, பளிங்கு போன்ற பூச்சுகள் உருவாக்கப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலான பிறகே, இது பயன்பாடு மற்றும் வெகுஜன உற்பத்திக்கு தயாரானதாக ஒன்பிளஸ் கூறுகிறது.
ஒன்பிளஸ் 11 மார்பிள் ஒடிஸி எடிஷன் ஆனது, பளிங்கு போன்ற பொருளின் ஒரு பகுதியை உருவாக்க கடுமையான 9-படி செயல்முறைக்யை கடந்துள்ளது. வெகுஜன உற்பத்தி என்று வரும்போது, ஒன்பிளஸ் நிறுவனமானது இறுதி பயன்பாட்டிற்கான சிறந்த ஈல்ட்களை தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது.

மேலும், குறிப்பிட்ட வடிவமைப்பை அடைவதற்காக, தனித்துவமான கோரிக்கைகள் மற்றும் தீவிர அணுகுமுறை காரணமாக, ஒன்பிளஸ் நிறுவனத்தின் உற்பத்தி செயல்முறையை அடித்தளத்திலிருந்து தொடங்கப்பட வேண்டியிருந்தது. உதாரணமாக, இந்த தனித்துவமான வடிவமைப்பின் ஈல்ட் ரேட் ஆனது ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் ஒரிஜினல் கிளாஸ் பேக்கின் 25% மட்டுமே ஆகும். இறுதிப் பயன்பாட்டில், வழக்கமான மாறுபாடுகளுடன் ஒப்பிடும்போது இந்த டிவைஸின் ஈல்ட் ரெட் ஆனது 50% இருந்தது. அந்த அளவுக்கு இந்த டிசைன் தனித்துவமானது.
இப்போது, ஒன்பிளஸ் 11 ஆனது எடர்னல் கிரீன் மற்றும் டைட்டன் பிளாக் என்கிற கலர் ஆப்ஷன்லனில், ஏற்கனவே மிகவும் தனித்துவமாக தெரிகிறது, நினைவூட்டும் வண்ணம் இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் மார்பிள் ஒடிஸி எடிஷன் இன்னும் ஒரு படி மேலே செல்கிறது, இது ஒரு தனித்துவமான தோற்றத்தை உருவாக்குவதோடு மட்டுமின்றி, தனித்துவமான விஷுவல் டெக்க்ஷரையும் கொண்டுள்ளது.
இந்த டிவைஸை வைத்திருப்பது உண்மையான ஒரு மகிழ்ச்சியாக இருக்கும். அதற்கு நாங்கள் சாட்சியாக நிற்கிறோம். ஸ்பெஷல் எடிஷன் ஒன்பிளஸ் 11 ஆனது கையில் மிகவும் திடமானதாக உணர வைக்கிறது மற்றும் இதன் பின்புற மேற்பரப்பானது மிகவும் மென்மையானதாகவும் இருக்கிறது.
தனித்துவமான மற்றும் ஒரு ஆல்ரவுண்ட் அனுபவம்!
தனித்துவமான அனுபவம் இந்த ஸ்மார்ட்போனில் மட்டும் அல்ல, ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த சிறப்பு பதிப்பின் தனித்துவமான ஓப்பன் பாக்ஸிலும் உள்ளது.
இந்த மார்பிள் ஒடிஸி எடிஷன் உடன், கஸ்டம் பேக்கேஜிங், ஸ்பெஷல் எடிஷன் சிம் ட்ரே எஜெக்டர், ஸ்டிக்கர்கள், தனித்துவமான வால்பேப்பர்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட எடிஷன் கலர்வே-யை பற்றி பேசும் ஒன்பிளஸ் நிறுவனர் பீட் லாவின் வரவேற்புக் குறிப்பு ஆகியவைகளும் உங்களுக்கு கிடைக்கும்.
ஒன்பிளஸ் நிறுவனமானது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 11 மார்பிள் ஒடிஸிக்கான திறந்த விற்பனையை ஜூன் 6, 2023 அன்று மதியம் 12 மணி முதல் தொடங்கி உள்ளது. இதன் விலை ரூ.64,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மிகவும் அசாதாரண இந்த லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது ஒன்பிளஸ்.இன், ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப், ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்கள் மற்றும் அமேசான்.இன் ஆகியவற்றின் வழியாக வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








