பிப்ரவரி 7-னு சொன்னாங்க.. ஆனா இப்போ ஜனவரி 4ம் தேதியே OnePlus 11 அறிமுகமா?

|

OnePlus 11 இன் இந்திய மற்றும் உலகளாவிய வெளியீட்டுத் தேதியை அறிவித்த பிறகு , OnePlus இன்று இந்த சாதனம் தாய்நாட்டிற்கு வெளியே அறிமுகப்படுத்தப்படுவதற்கு ஒரு மாதத்திற்கும் மேலாக சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனம் இந்த புதிய ஒன்பிளஸ் 11 டிவைஸுடன் OnePlus Buds Pro 2 TWS என்ற ட்ரூலி இயர்பட்ஸ் சாதனத்தையும் அறிமுகம் செய்யுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனங்கள் வரும் ஜனவரி 4, 2023 அன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று பிராண்ட் இன்று வெளிப்படுத்தியுள்ளது. மறுபுறம், இந்த சாதனங்களின் இந்திய அறிமுகம் பிப்ரவரி 7ம் தேதி நடைபெறும்.

பிப்ரவரி 7-னு சொன்னாங்க.. ஆனா இப்போ ஜனவரி 4ம் தேதியே OnePlus 11 ரெடி.!

அது மட்டுமல்லாமல், OnePlus அதன் வரவிருக்கும் ஃபிளாக்ஷிப்பின் ஸ்டோரேஜ் விபரங்களையும் உறுதிப்படுத்தியுள்ளது. வரவிருக்கும் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் பற்றி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக என்ன தகவலை வெளிப்படுத்தியுள்ளது என்று தெளிவாக பார்க்கலாம்..

OnePlus 11 வெளியீடு தேதி:

ஒன்பிளஸ் வெளியிட்டுள்ள விளம்பர போஸ்டரில் காணப்படுவது போல், OnePlus 11 ஜனவரி 4 ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் போஸ்டர், சாதனத்தின் இரண்டு வண்ண வகைகளையும் காட்டுகிறது. அவை ஏற்கனவே அறியப்பட்டவை என்பதனால் நாம் அடுத்த விபரத்திற்கு நகரலாம்.

OnePlus 11 ஆனது 16GB LPDDR5X ரேம் மற்றும் 512GB வரை UFS4.0 ஸ்டோரேஜைக் கொண்டிருக்கும் என்பதை OnePlus உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சாதனத்தின் 8 ஜிபி ரேம் வேரியண்ட் இருக்காது என்று கூறப்படுகிறது. ஒன்பிளஸ் 11 சாதனம் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஸ்டோரேஜ் வகை எல்லா போன்களிலும் LPDDR5X, UFS4.0 உடன் ஒரே மாதிரியாக இருக்கும்.

OnePlus 11 ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
OnePlus 11 ஆனது 6.7' இன்ச் QHD+ 3D கர்வுடு AMOLED டிஸ்பிளேவை 120Hz ரெப்ரெஷ் ரேட் வீதத்துடன் கொண்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் அதன் ஹூட்டின் கீழ், சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 சிப்செட் மூலம் இயக்கப்படும்.. இது 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படும். தெரியாதவர்களுக்கு, இப்போது வரை வெளியான சிப்செட்களில் இந்த Snapdragon 8 Gen 2 சிப்செட் தான் மிகவும் சக்தி வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமராக்களைப் பொறுத்தவரை, OnePlus 11 ஆனது 50MP + 48MP + 32MP மூன்று பின்புற கேமரா அமைப்பு மற்றும் 16MP முன் கேமராவைக் கொண்டிருக்கும். சாப்ட்வேர் பற்றி பேசுகையில், இந்த ​​OnePlus 11 சாதனம் ஆனது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ColorOS 13-ஐ சீனாவிலும், OxygenOS 13-ஐ இந்தியாவிலும் உலகளாவிய சந்தைகளிலும் அறிமுகம் செய்யுமென்று கூறப்படுகிறது. சீனா சந்தையில் வரும் ஜனவரி 4 ஆம் தேதி கலர் ஓஎஸ் 13 உடன் அறிமுகம் செய்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் சாதனம் USB Type-C சார்ஜிங் போர்ட் மூலம் 100W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை இந்த சாதனம் கொண்டுள்ளது. இதில் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது 5ஜி அம்சத்துடன் சீனாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்தியாவில் இது 4ஜி மாடலாக அறிமுகம் செய்யப்படுமா அல்லது 5ஜி சாதனமாக அறிமுகம் செய்யப்படுமா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

இந்திய சந்தையில் ஏற்கனவே 5ஜி களமிறக்கட்டு விரிவடைந்து வரும் நிலையில், நிறுவனம் 5ஜி அம்சத்துடன் இந்த சாதனத்தை அறிமுகம் செய்ய அதிக வாய்ப்பிருப்பதாக டெக் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், சமீபத்தில் வெளியான AnTuTu மதிப்பீட்டில் OnePlus 11 ஹை-ஸ்கோரை பெற்றுள்ளது. இதுவரை உலகத்தில் உள்ள எந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனும் இந்த மதிப்பெண்களை பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
OnePlus 11 Launch With Storage Details Confirmed On January 4th in China

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X