உலகத்திலேயே இப்போ இந்த போனுக்கு தான் டாப் ஸ்கோர்.! ரேட்டிங்கை எகிறவிட்ட OnePlus 11.!

|

OnePlus நிறுவனம் அதன் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் (Flagship smartphone) மாடலான ஒன்பிளஸ் 11 (OnePlus 11) போனை வருகின்ற பிப்ரவரி 7, 2023 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் வணிக ரீதியில் கிடைக்க இன்னும் சிறிது நேரம் உள்ளது என்றாலும், இந்த சாதனத்தைப் பற்றிய லீக் தகவல்கள் மற்றும் வதந்திகள் இப்போதே இணையத்தை ஆக்கிரமிக்கத் துவங்கியுள்ளன.

அந்த வரிசையில், இப்போது OnePlus 11 போன் பற்றிய ஒரு சூப்பர் மேட்டர் சிக்கியுள்ளது. OnePlus 11 போன் சாதனம் இன்று AnTuTu தரப்படுத்தல் தளத்தில் (AnTuTu benchmarking scores) காணப்பட்டது. இதில் OnePlus 11 போனின் சில முக்கிய விபரங்களைத் தளம் வெளிப்படுத்தியுள்ளது. கூடுதலாக, OnePlus 11 இதுவரை இல்லாத உயர் மதிப்பெண்களை வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகத்திலேயே இப்போ இந்த போனுக்கு தான் டாப் ஸ்கோர் - OnePlus 11.!

ஸ்மார்ட்போன்களின் வரலாற்றில் அதிக AnTuTu மதிப்பெண்களைப் பெற்ற முதல் உலக டாப் ஸ்கோரிங் சாதனமாக OnePlus 11 போன் இப்போது மாறியுள்ளது. கடந்த வாரத்தின் முடிவில் iQOO 11 உலகின் அதிக மதிப்பெண் பெற்ற ஆண்ட்ராய்டு போனாக இடம் பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இப்போது ரேட்டிங்கில் OnePlus 11 தனது ஆதிக்கத்தைக் காட்டியுள்ளது.

இந்த புதிய OnePlus 11 சாதனம் சமீபத்தில் புளூடூத் SIG சான்றிதழ் தளத்திலும் முக்கிய விவரத்துடன் காணப்பட்டுள்ளது. சரி, இப்போது OnePlus 11 ஸ்மார்ட்போன் (Smartphone) எத்தனை மதிப்பெண்களை பெற்று முன்னிலையில் இருக்கிறது என்று பார்க்கலாம். OnePlus 11 ஆனது AnTuTu பட்டியலில் இதுவரை பதிவிடப்படாத ஸ்கோரிங்கை தொட்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் ஒட்டுமொத்த வரலாற்றில் இதற்கு முன் எந்த சாதனமும் இந்த 1341080 என்ற மதிப்பெண்ணை தொட்டதில்லை என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் iQOO 11 பெற்றிருந்த ஹை-ஸ்கோர் மதிப்பெண் 13,23,820 என்பது குறிப்பிடத்தக்கது. OnePlus 11 ஆனது 295159 என்ற CPU மதிப்பினையும், 574508 என்ற GPU மதிப்பெண், 268112 என்ற MEM மதிப்பெண் மற்றும் 203301 என்ற UX மதிப்பெண்களையும் பெற்று இன்றைய தேதியில் உலகத்தின் சக்தி வாய்ந்த ஆண்ட்ராய்டு போனாக OnePlus 11 முன்னிலையில் உள்ளது.

OnePlus 11 ஆனது சமீபத்திய முதன்மையான Snapdragon 8 Gen 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 16GB LPDDR5X ரேம் மற்றும் 512GB UFS4.0 ஸ்டோரேஜ் உடன் வருகிறது என்பதை இந்தப் பட்டியல் உறுதிப்படுத்துகிறது. கூடுதலாக, இந்த டிவைஸ் 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடைசியாக, ஒன்பிளஸ் 11 ஆனது ஆண்ட்ராய்டு 13 ஐ அவுட் ஆப் தி பாக்சில் வழங்கும் என்று பட்டியல் தெரிவிக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் OS ஐப் பற்றிப் பேசுகையில், OnePlus 11 ஆனது Bluetooth SIG சான்றிதழ் வலைத்தளத்திலும் காணப்பட்டது. இது அதன் உலகளாவிய மற்றும் இந்திய மாறுபாடு பிராண்டின் சமீபத்திய தனிப்பயன் ஸ்கின் ஆனா OxygenOS 13 உடன் அனுப்பப்படும் என்பதை அந்த பட்டியல் தெளிவாக காண்பித்துள்ளது.

OnePlus 11 போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

  • 6.7-இன்ச் கொண்ட 120Hz ரெப்ரெஷ் ரேட் வீதக் AMOLED டிஸ்பிளே
  • ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 சிப்செட்
  • 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை ஸ்டோரேஜ்
  • ஆண்ட்ராய்டு 13 உடன் OxygenOS 13 ஸ்கின்
  • 16MP செல்ஃபி கேமரா
  • பின்புறத்தில் 50MP பிரைமரி கேமரா
  • 32MP செக்கெண்டரி கேமரா
  • 16MP மூன்றாம் கேமரா
  • ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு
  • 100W பாஸ்ட் சார்ஜிங்
  • 5,000mAh பேட்டரி
  • USB Type-C சார்ஜிங் போர்ட்
  • வயர்லெஸ் சார்ஜிங்
  • 5G மற்றும் 4G ஆதரவு

பேஸ் வேரியண்ட் விலை : ரூ. 43,490 (எதிர்பார்க்கப்படும்).

Best Mobiles in India

English summary
OnePlus 11 Latest Flagship Smartphone Scored Highest Ever AnTuTu Scoring Under Android

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X