Home
Mobile

ஒன்பிளஸ் 11 ஹசல்பிளாட் பிராண்டிங்கிற்கு நியாயமாக நடந்து கொள்வது எப்படி?

ஒன்பிளஸ் 11 ஹசல்பிளாட் பிராண்டிங்கிற்கு நியாயமாக நடந்து கொள்வதெப்படி?

இம்மாத தொடக்கத்தில், உலகளாவிய தொழில்நுட்ப பிராண்டான ஒன்பிளஸ் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட கிளவுட் 11 நிகழ்வின் போது, பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. ஒன்பிளஸின் இந்த புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனானது ஒன்பிளஸ் பேட், ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மற்றும் (பட்ஜெட் விலை மாடலான) ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி உடன் சேர்ந்து அறிமுகமானது. இது சாம்சங்கின் புதிய கேலக்ஸி எஸ்23 சீரீஸ் மற்றும் ஐக்யூ 5ஜி போன்ற பிற முக்கிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுடன் நேரடியாக மோதுகிறது. இருப்பினும், இது குறிப்பிடத்தக்க வகையில் நீங்கள் கொடுக்கும் பணத்திற்கான மதிப்பை வழங்குகிறது, குறிப்பாக நீங்கள் நிறைய புகைப்படங்களை எடுக்கும் பட்சத்தில்! அதெப்படி என்று விளக்கமாக பார்க்கலாம்.

ஒன்பிளஸ் 11 5ஜி ஆனது நல்ல-நல்ல அம்சங்களுடனான ஒரு தரமான ஃபிளாக்ஷிப் போனாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி உடன் வருகிறது. இது வேறு எந்த ஸ்மார்ட்போனிலும் கிடைக்காத அளவிலான இணையற்ற செயல்திறனுக்கு உத்தரவாதம் அளிக்கிறது; குறிப்பாக இதனுடன் இணைக்கப்பட்டுள்ள 16ஜிபி எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 256ஜிபி யுஎஃப்எஸ் 4.0 ஸ்டோரேஜ் ஆனது ஒரு உன்னதமான ப்ராசஸருக்கு வழிவகுக்கிறது. ஆக கேம்கள் லோட் ஆகும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டாம், மேலும் இண்டர்நெட் ப்ரவுஸிங் மற்றும் போட்டோ எடிட்டிங் போன்ற அன்றாட பணிகளானது வெண்ணைய் மேல் நடப்பது போல மிகவும் ஸ்மூத் ஆக இருக்கும். மேலும் இந்த போனில் ஒரு பெரிய 5,000mAh பேட்டரியும் உள்ளது, இது நாள் முழுவதும் நீடிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். போதாக்குறைக்கு இதில் 100W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது.

ஒன்பிளஸ் 11 5ஜி ஆனது 6.7-இன்ச் க்யூஎச்டி+ எல்டிபிஓ அமோஎல்இடி பேனலுடன் வருகிறது, இது வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் தொழில்நுட்பம், ஒருகுறையும் சொல்லமுடியாத கலர் கேமட் மற்றும் கூர்மையான கான்ட்ராஸ்ட் ஆகியவற்றுடன் சேர்த்து விதிவிலக்கான பேட்டரி செயல்திறனையும் வழங்குகிறது. இந்த எல்லா அம்சங்களுக்கும் சிம்மசொப்பனமாக இதன் கேமராக்கள் உள்ளன. ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் கேமராக்களானது உண்மையிலேயே சில தீவிரமான தொழில்நுட்பங்களோடு சேர்த்து ஹாசல்ப்ளாட்டின் பொறியியல் மாயாஜாலங்களையும் சேர்த்தே பேக் செய்கிறது.

50எம்பி ப்ரைமரி லென்ஸ்: ஸ்டெபிலிட்டி என்றால் இப்படி இருக்கணும்!

ஒன்பிளஸ் 11 5ஜி-யின் கேமரா அமைப்பில் 50எம்பி மெயின் லென்ஸ் உள்ளது. நீங்கள் உடனடியாக ஷட்டர் பட்டனை அழுத்தினால் கூட, முடிவுகள் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும். நீங்கள் ஏற்கனவே சிறப்பான புகைப்படங்களை எடுப்பவர் என்றால்.. சொல்லவே வேண்டாம். இதன் வியக்க வைக்கும் செயல்திறனுக்கு பின்னால் உள்ள ரகசியம் - சோனி ஐஎம்எக்ஸ்890 இமேஜ் சென்சார் ஆகும். இதில் ஒவ்வொரு பிக்சலும் 1.0 மைக்ரானில் அளவிடப்படுகிறது. இந்த 1/1.56-இன்ச் சென்சாரில் உள்ள பெரிய பிக்சல்கள், வைட் எப்/1.8 அப்பெர்சர் உடன் இணைந்து, குறைந்த வெளிச்சத்தில் கூட நல்ல தெளிவான புகைப்படங்களை பதிவு செய்யும்; அதிக வெளிச்சத்தின் கீழ் எடுக்கும் புகைப்படங்கள் கூட தெளிவானவைகளாக இருக்கும். வைட் அப்பெர்சர் மற்றும் 24மிமீ-சமமான குவிய நீளம் ஆகிய இரண்டும் டிஎஸ்எல்ஆர் கேமராக்கள் வழியாக கிடைக்கும் முடிவுகளை போலவே கிரீமியான பொக்கே எபெக்ட் மற்றும் பேக்கிரவுண்ட் ப்ளர்-ஐ வழங்குகின்றன.

ஒன்பிளஸ் 11 ஹசல்பிளாட் பிராண்டிங்கிற்கு நியாயமாக நடந்து கொள்வதெப்படி?

இதன் மெயின் லென்ஸ் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (ஓஐஎஸ்) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (ஈஐஎஸ்) ஆகிய இரண்டையுமே வழங்குகிறது. ஓஐஎஸ் ஆனது ஆறு-பாக லென்ஸ் அசெம்பிளியை கேமரா ஹவுசிங்கில் "மிதக்க" அனுமதிக்கிறது, இது ஸ்மார்ட்போனின் அதிர்வு மற்றும் அசைவுகளுக்கு எதிராக வேலை செய்யும். எனவே, ஒன்பிளஸ் 11 5ஜி மூலம் படமாக்கப்பட்ட வீடியோக்களில் 'ஷேக்' என்பதை பார்க்கவே முடியாது.

ஒரு ஸ்மார்ட்போனில் சிறந்த கேமரா வன்பொருள் இருப்பது சமன்பாட்டின் ஒரு பகுதி மட்டுமே ஆகும். இன்னொரு பகுதியில் போஸ்ட்-ப்ராசஸிங் வேலைகள் உள்ளன. அந்த வகையில், இந்த போனில் கிடைக்கும் ஏஐ ஹைலைட் வீடியோ மோட் போன்ற பயன்முறைகள் சவாலான சூழல்களில் சமமாக ஒளிரும் எச்டிஆர் வீடியோ காட்சிகளை செயல்படுத்துகிறது. ஐஎம்எக்ஸ்890 இன் உள்ளார்ந்த டிஜிட்டல் ஓவர்லாப் எச்டிஆர், சப்ஜெக்ட் மற்றும் பேக்கிரவுண்டிற்கு இடையே சீரற்ற வேறுபாட்டை சமப்படுத்த உதவுகிறது. இந்த ஸ்மார்ட் கேமரா அம்சங்கள் அனைத்தும் ஸ்க்ரீனுக்கு பின்னால் வேலை செய்கின்றன; நீங்கள் வெறுமனே ரெக்கார்ட் பட்டனை அழுத்தினால் போதும் - ஒன்பிளஸ் 11 5ஜி மற்ற வேலைகளை பார்த்துக்கொள்ளும்.

32எம்பி டெலிஃபோட்டோ ஷூட்டர்: போர்ட்ரெய்ட்களுக்கு உகந்ததாக உள்ளது!

சிறந்த முடிவுகளுக்காக டிஎஸ்எல்ஆர் கேமராவில் 30 மிமீ முதல் 65 மிமீ வரையிலான குவிய நீளம் இருக்கும் என்பதை மூத்த போர்ட்ரெய்ட் புகைப்படக் கலைஞர்கள் அறிவார்கள். ஹசல்பிளாட் கூட்டணியில் உருவான ஒன்பிளஸ் 11 5ஜி-யின் 32எம்பி போர்ட்ரெய்ட் ஷூட்டர், எக்ஸ்சிடி 30மிமீ மற்றும் 65மிமீ லென்ஸ்களுக்கு எதிராக தரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒன்பிளஸின் போர்ட்ரெய்ட் மோட் புகைப்படங்களானது எட்ஜ் டிடெக்ஷன் உடன் தடுமாறாமல் இருப்பதை உறுதி செய்கிறது. மேலும் இந்த போனில் உள்ள போர்ட்ரெய்ட் மோட் ஆனதும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது லென்ஸ் ஃப்ளேர், டெப்த் டிராக்கிங் மற்றும் பொக்கே மோட்கள் சரியாக வேலை செய்வதை உறுதிசெய்கிறது.

ஒன்பிளஸ் 11 ஹசல்பிளாட் பிராண்டிங்கிற்கு நியாயமாக நடந்து கொள்வதெப்படி?

இந்த புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி எடுக்கப்பட்ட படங்களில் ஒன்பிளஸின் கலர் சயின்ஸுடன் சேர்த்து ஹாசல்பிளாட்டின் ஒத்துழைப்பையும் சமமாக பார்க்க முடிகிறது. சுற்றுப்புற விளக்குகள் உங்கள் படங்களின் வண்ணத் துல்லியத்தை வியத்தகு முறையில் பாதிக்கும் போது, இந்த போனில் உள்ள நேச்சுரல் கலர் கேலிப்ரேஷன் மற்றும் கேமரா சென்சாரில் படும் ஒளியை பகுப்பாய்வு செய்யும் 13-சேனல் ஸ்பெக்ட்ரல் போன்ற பிரத்யேக வன்பொருள் மூலம், ஒன்பிளஸ் 11 5ஜி சவாலான சூழ்நிலைகளில் தடுமாறாமல் பார்த்துக்கொள்கிறது. இதன் மூலம் ஒயிட் பேலன்ஸை சரிசெய்தல் மற்றும் செட்டிங்ஸ் மாற்றம் போன்றவைகளில் நீங்கள் நேரம் செலவிட வேண்டியது இருக்காது. ஒன்பிளஸின் பெஸ்போக் கேமரா சப்-சிஸ்டம், உங்கள் படங்கள் துல்லியமான ஸ்கின் டோன்களை படம்பிடிப்பதையும், படங்கள் மற்றும் வீடியோக்களை உயிரோட்டமான வண்ணங்களுடன் இருப்பதையும் உறுதி செய்கிறது.

வைட் ஆக சிந்தியுங்கள் அல்லது வீட்டிற்கு செல்லுங்கள்

பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிளாக்ஷிப்கள் கூட அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் என்று வரும் போது வெட்கி தலைகுனிகின்றன. ஏனென்றால் அவைகள் மட்டமான சென்சார்-லென்ஸ் காம்போவை பயன்படுத்துவதன் மூலம் செலவை குறைக்க விரும்புகின்றன. எனவே தான் வைட்-ஆங்கிள் லென்ஸ் இருந்தும் கூட பலரும் மெயின் கேமரா வழியாக பனோரமா காட்சிகளை பதிவு செய்கின்றனர். அதிர்ஷ்டவசமாக, ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ள 48எம்பி அல்ட்ரா-வைட் ஷூட்டர் இந்த சோகமான போக்கை மாற்றுகிறது. இது ஈர்க்கக்கூடிய ½-இன்ச் சோனி ஐஎம்எக்ஸ்581 சென்சார் உடன் வருகிறது. இது எந்த நிலப்பரப்பையும் 115° கோணத்தில் படம்பிடிக்கும். மேலும் இது மெயின் லென்ஸின் அதே தரத்தின் கீழ் புகைப்படங்களை வழங்கும்.

இந்த கேமரா உங்கள் பாக்கெட்டில் இருக்கும் பட்சத்தில்,, நீங்கள் விடுமுறைக்காக இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு செல்லும்போது விரிவான காட்சிகளை புகைப்படமாக்குவது பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமே இருக்காது. ஒன்பிளஸ் நிறுவனம் இந்த லென்ஸின் எச்டிஆர் மற்றும் ஆட்டோஃபோகஸிற்கான திறன்களும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த போனில் மேக்ரோ லென்ஸ் இல்லை என்று கவலைப்பட வேண்டாம். இதன் அல்ட்ரா-வைட் சென்சார் ஒரு மேக்ரோ ஷூட்டராகவும் வேலை செய்யும். இதன் கீழ் உங்களால் எப்/2.2 அபெர்ச்சரை பயன்படுத்தி மிகவும் நெருக்கமான புகைப்படங்களை பதிவு செய்ய முடியும்.

ஒன்பிளஸ் 11 ஹசல்பிளாட் பிராண்டிங்கிற்கு நியாயமாக நடந்து கொள்வதெப்படி?

ஒன்பிளஸ் மற்றும் ஹசல்பிளாட் எனும் பிரமிப்பூட்டும் கூட்டணி!

ஒன்பிளஸ் மற்றும் ஹசல்பிளாட் கூட்டணியை கலர் சயின்ஸிற்கு அப்பாற்பட்டது என்றே கூறலாம். ஒன்பிளஸ் 11 5ஜி-க்காக ஹாசல்பிளாட்டின் மாஸ்டர்ஸ் - அதாவது நிபுணத்துவம் மிக்க புகைப்படக் கலைஞர்களும் அவர்களின் கண்டுபிடிப்புகளும் ஓரிடத்தில் இணைக்கப்பட்டுள்ளது. பிரபல ஃபேஷன் புகைப்படக் கலைஞர் ஆன யின் சாவோ, போர்ட்ரெய்ட் ஷாட்களுக்கான செரினிட்டி ஸ்டைலை உருவாக்க உதவினார், அதே நேரத்தில் விருது பெற்ற ஆஸ்திரேலிய நுண்கலை மற்றும் கருத்தியல் புகைப்படக் கலைஞர் ஆன பென் தாமஸ் கல்ச்சுரல் போட்டோகிராஃபிக்கான ரேடியன்ஸ் ப்ரீ-செட்ட்டை உருவாக்கினார். இயற்கை காட்சிகளில் கூடுதல் திறமையை சேர்க்கும் இயற்கை காட்சிகளுக்கான எமரால்டு ப்ரீசெட்டை டேவிட் பெஸ்கன் உருவாக்கினார்.

போட்டோகிராஃபி துறை தொடர்பான வட்டங்களில் சொல்வது போல, உங்களிடம் உள்ள கேமரா தான் சிறந்த கேமராவாகும். அதை எங்கள் ஸ்மார்ட்போன் வழியாக உங்களுக்கு வழங்குகிறோம். அவசரமான குளியலறை செல்பீ முதல் ஒளி நிலைமைகள் சரியாக இல்லாத சூரிய அஸ்தமன புகைப்படங்கள் வரை அனைத்திற்குமான ஒரு ஸ்மார்ட்போனை வழங்குகிறோம். தொழில்துறையால் பாராட்டப்பட்ட அம்சங்களை கொண்ட ஒன்பிளஸ் 11 5ஜி எப்போதுமே ஒரு தவறு செய்யாது. எல்லாவற்றிற்கும் மேலாக, எங்கள் ஸ்மார்ட்போன்களின் வழியாக, எந்த சூழ்நிலையிலும் நம்பகமான முடிவுகளை வழங்குவதையே நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம்!

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 11 Does Justice to the Hasselblad Branding Here is Why
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X