Home
Mobile

இப்படி ஒரு Phone-ஐ பார்த்து இருக்கவே மாட்டீங்க.. வெளியானது OnePlus 11 கான்செப்ட் போன்.. விற்பனைக்கு வருமா?

இப்படி ஒரு போனை பார்த்து இருக்கவே மாட்டீங்க என்று கூறும்படியான அம்சங்களுடன் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 11 கான்செப்ட் போனை (OnePlus 11 Concept Phone) அறிமுகம் செய்துள்ளது. இது நீங்கள் பார்த்த கூலஸ்ட் ஸ்மார்ட்போனாகவும் (Coolest Smartphone) இருக்கும்!

ஏனென்றால் இந்த கான்செப்ட் ஸ்மார்ட்போனில் ஆக்டிவ் க்ரையோஃப்ளக்ஸ் (Active CryoFlux) என்கிற ஆக்டிவ் கூலிங் டெக்னாலஜி (Active Cooling Technology) உள்ளது. ஆக்டிவ் க்ரையோஃப்ளக்ஸ் என்பது டெஸ்க்டாப் பிசியில் நீங்கள் காணக்கூடிய க்ளோஸ்-லூப் லிக்விட் கூலிங் சிஸ்டமிற்கான இன்னொரு சொல்லாகும்.

OnePlus 11 கான்செப்ட் போன் வெளியானது.. விற்பனைக்கு வருமா?

ஒன்பிளஸ் 11 கான்செப்ட் போனை ஒரு கையடக்க கேமிங் பிசி என்றே கூறலாம்!

ஒரு கேமிங் பிசியில் நீங்கள் பார்க்கக்கூடிய ஆக்டிவ் கூலிங் சிஸ்டமானது ஒரு ஸ்மார்ட்போனிற்குள் இருக்க முடியுமா என்று கேட்டால், அதற்கு பதில் இந்த கான்செப்ட் போன் தான். ஒன்பிளஸின் கூற்றுப்படி, ஒன்பிளஸ் 11 கான்செப்ட் போனில் உள்ள லிக்விட் கூலிங் மெக்கானிசம் (Liquid cooling mechanism), ஸ்மார்ட்போனின் வெப்பநிலையை 2.1 டிகிரி செல்சியஸ் வரை குறைக்கும்.

ஒன்பிளஸின் புதிய ஆக்டிவ் க்ரையோஃப்ளக்ஸ் சிஸ்டம், ஸ்மார்ட்ப்போனின் நடுவில் அமைந்துள்ள இண்டஸ்ட்ரியல்-கிரேட் செராமிக் பைசோ எலக்ட்ரிக் மைக்ரோபம்ப்களை கொண்டுள்ளது. அதே சமயம் நீல நிற பைப்லைன்கள் பேக் பேனலுடன் இயங்குகின்றன மற்றும் அவைகளை ரியர் கிளாஸ் வழியாக தெளிவாக பார்க்கவும் முடிகிறது.

ஒன்பிளஸின் கூற்றுப்படி, ஸ்மார்ட்போனை கூலாக வைக்க பயன்படுத்தப்படும் மைக்ரோபம்ப், அளவீட்டில் வெறும் 0.2 சதுர சென்டிமீட்டர் மட்டுமே உள்ளதால், இந்த கான்செப்ட் போனின் தடிமன் சுமார் 5.04 மிமீ என்கிற அளவிலேயே உள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போனின் எடையையும் கட்டுக்குள் வைக்க முடிகிறது.

இந்த கூலிங் சிஸ்டத்தால், கேமிங்கின் போது ஒரு வினாடிக்கு 4 பிரேம்கள் (எஃப்.பி.எஸ்) வரை ஃப்ரேம்ரேட்டுகளை மேம்படுத்த முடியும் என்றும், சார்ஜ் செய்யும் போது ஏற்படும் ​​வெப்பநிலையில் சுமார் 1.6 டிகிரி செல்சியஸ் வரை குறைக்க முடியும் என்றும் ஒன்பிளஸ் கூறுகிறது.

ஒன்பிளஸ் 11 கான்சப்ட் போனின் வடிவமைப்பு - அதுவும் சும்மா டக்கரா இருக்கு!

ஒன்பிளஸ் 11 கான்செப்ட் போனானது கிளாஸ் யூனிபாடி டிசைனை (Glass unibody design) பெற்றுள்ளது. இதன் கிளாஸ் டிசைனின் வழியாக, ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் உள்ள பைப்லைன்கள் வழியாக மைக்ரோ லிக்விட் (micro-liquid) பாய்ந்து செல்வதை உங்களால் நேரடியாக பார்க்க முடியும்.

கிளாஸ் யுனிபாடி டிஸைனுடன் சேர்த்து, மேக்னட்ரான்-ஸ்பட்டரிங் கோட்டிங்கிற்காக (Magnetron-sputtering coating) எலெக்ட்ரிக் ஃபீல்டை (Electric field) பயன்படுத்தி, இந்த ஸ்மார்ட்போனின் கேஸில் சிறிய அளவிலான மெட்டல் மற்றும் அலாய் கோட்டிங் (Metal and Alloy Coating) டெபாசிட் செய்யப்பட்டதாகவும் ஒன்பிளஸ் நிறுவனம் கூறுகிறது.

ஒன்பிளஸின் புதிய ஆக்டிவ் க்ரையோஃப்ளக்ஸ் லிக்விட் கூலிங் சிஸ்டமானது இந்த கான்செப்ட் போனின் ரியர் கேமரா செட்டப்பையும் சுற்றி வருகிறது. ஒன்பிளஸின் கூற்றுப்படி ஆடம்பர கைக்கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் டீடெயில்டு பேட்டர்ன்ஸ் உடனான டெக்கரேட்டிவ் டெக்னீக் ஆன குய்லோச் எட்ச்சிங் (Guilloché Etching) இந்த ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 11 கான்செப்ட் போன் விற்பனைக்கு வருமா?

துரதிருஷ்டவசமாக, இதன் பெயர் குறிப்பிடுவது போலவே இதுவொரு கான்செப்ட் பொன்னாகும். அதாவது இது பெரும்பாலும் பெரிய எண்ணிக்கையிலான தயாரிப்புக்கு செல்லாது மற்றும் விற்பனைக்கு வராது. இது எதிர்கால ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் கேமிங் பிசி பாணியிலான லிக்விட் கூலிங் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை நிரூபிக்கும் ஒட்டு முன்மாதிரி ஸ்மார்ட்போனாகும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 11 Concept Phone Announced Check Specifications Will it be available for sale or not
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X