உங்ககிட்ட இந்த 2 OnePlus மாடலில் 1 இருக்கா? இருந்துச்சுன்னா குஷிதான்.. உடனே Settings போங்க!
உங்களிடம் ஒன்பிளஸ் 11 (OnePlus 11) ஸ்மார்ட்போன் இருந்தால்.. உங்களுக்கு ஒரு குட் நியூஸ்! இந்தியாவில் உள்ள ஒன்பிளஸ் 11 பயனர்களுக்கு லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 13 (Android 13) ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஆக்ஸிஜன் ஓஎஸ் 13.1.0.501 அப்டேட் (OxygenOS 13.1.0.501 Update) வலியுமாக புதிய அம்சங்கள் அணுக கிடைக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனமானது கடந்த வாரம் முதல் ஒடிஏ (ஒவர்-தி-ஏர்) அப்பேட்டை வெளியிட தொடங்கி உள்ளது. இந்நேரம் அது உங்களுக்கு வந்து சேர்ந்தும் இருக்கலாம். எனவே நீங்கள் இப்போது செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் ஒன்பிளஸ் 11 போனில் உள்ள செட்டிங்ஸ்-க்கு (Settings) செல்ல வேண்டும்.

பின்னர் சிஸ்டம் அப்டேட்ஸ் சென்று அங்கே உங்கள் ஒன்பிளஸ் 11 போனிற்கான லேட்டஸ்ட் ஓஎஸ் அப்டேட் வந்துள்ளதா என்பதை சரிபார்க்கவும். வந்து இருந்தால் அதை டவுன்லோட் செய்து பின்னர் அதை இன்ஸ்டால் செய்து கொள்ளவும். ஒருவேளை இன்னும் வரவில்லை என்றால், சிறிது நாட்கள் காத்திருக்கவும்.
ஏனென்றால் ஒன்பிளஸின் இந்த லேட்டஸ்ட் ஓஎஸ் அப்டேட் ஆனது படிப்படியான முறையில் வெளியிடப்படுகிறது. இந்த அப்டேட்டின் கீழ் கிடைக்கும் புதிய அம்சங்களை பொறுத்தவரை, சிறந்த கேமிங் அனுபவத்திற்காக ஒன்பிளஸ் 11-ல் கேம் அசிஸ்டண்ட்டில்ன் கீழ் சாம்பியன்ஷிப் மோட்-ஐ அணுக முடியும்.
மேலும் ஆக்ஸிஜன் ஓஎஸ் 13.1.0.501 அப்டேட் ஆனது புதிய டால்க்பேக் (TalkBack) அம்சத்தையும் சேர்க்கிறது, இது ஆப்கள் மற்றும் போட்டோக்களில் உள்ள படங்களை அடையாளம் கண்டு அறிவிக்கும் திறனை கொண்டது. இது தவிர, இரண்டு புதிய ஜென் மோட்களும் (New Zen Modes) ஒன்பிளஸ் 11-ல் சேர்க்கப்பட்டுள்ளன.
ஒன்று - டீப் ஜென் (Deep Zen), மற்றொன்று லைட் ஜென் (Lite Zen). இரண்டுமே பயனர்கள் உற்பத்தித்திறனை (Productivity) அதிகரிக்க உதவும். இதுதவித்து கேம் அசிஸ்டென்ட்டில் ஒரு மியூசிக் பிளேபேக் கண்ட்ரோலும் (Music playback control) சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கேமிங் செய்துகொண்டே இசையை கேட்கலாம் மற்றும் கேமிங்கின் போதே அதை எளிதாக கட்டுப்படுத்தலாம்.
இந்த லேட்டஸ்ட் ஓஎஸ் அப்டேட்டை இன்ஸ்டால் செய்யும்போது ஒன்பிளஸ் 11 பயனர்கள் ஏதேனும் சிக்கலை சந்தித்தால், கூகுள் டயலரை திறந்து "*#800#" என்கிற நம்பரை டைப் செய்வதன் மூலம் பக்ஸ் பற்றிய புகார்களை சமர்ப்பிக்கலாம். ஆண்ட்ராய்டு 13 எஸ் அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ் 13.1.0.501 அப்டேட்டில் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு பேட்ச் சேர்க்கப்படவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை நீங்கள் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-ஐ பயன்படுத்த விரும்பினால், ஒன்பிளஸ் 11-ஐ கொண்ட ஆண்ட்ராய்டு டெவலப்பர்கள், ஒன்பிளஸ் சமூக வலைத்தளத்திலிருந்து, ஆண்ட்ராய்டு 14-ஐ பதிவிறக்குவதன் மூலம், அதை சோதிக்கலாம். பீட்டா அப்டேட்டில் ப்ரிக்கிங் சிக்கல்கள் இருக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ப்ரிக்கிங் சிக்கல்கள் ஆனது உங்கள் ஸ்மார்ட்போனை "நடைமுறையில்" பயனற்றதாகிவிடும். எனவே டெவலப்பர்கள், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அம்சங்களை சோதித்து, அதுதொடர்பான சிக்கல்களை சரிசெய்து, இந்த ஆண்டின் பிற்பகுதியில் அனைவருக்கும் ஸ்டேபிள் அப்டேட்டை வெளியீட்டிற்கு முன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-க்கு அப்கிரேட் ஆகாமல் இருப்பதே நல்லது.
இதற்கிடையில், இந்தியாவில் உள்ள ஒன்பிளஸ் 9ஆர்டி (OnePlus 9RT) பயனர்களுக்கு லேட்டஸ்ட் ஆக்சிஜன் 13.1.0.500 அப்டேட் வழியாக சில புதிய அம்சங்கள் கிடைக்கிறது. ஒன்பிளஸ் 11 5ஜி-க்கான அப்பேட்டை போலவே, இதுவும் படிப்படியான முறையிலேயே வெளியிடப்படுகிறது.


Click it and Unblock the Notifications








