ஆஹா.. எதை வாங்குறது, எதை விடுறதுனு தெரியலயே.. 2 ONEPLUS போன்கள் மீது இதுவரை இல்லாத விலை குறைப்பு!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 11 5ஜி மாடலானது, அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் (Amazon Great Indian Festival Sale) போது முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் குறைவான விலையில் வாங்க கிடைக்கிறது.
ஒருவேளை ஒன்பிளஸ் 11 5ஜி வாங்கும் அளவிற்கு உங்களிடம் பட்ஜெட் இல்லை என்றால், கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ஒன்பிளஸின் மற்றொரு லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 11ஆர் மீதும் கூட அட்டகாசமான ஆபர் அறிவிக்கபட்டுள்ளது.

ஒன்பிளஸ் 11 4ஜி மீதான தள்ளுபடி மற்றும் சலுகைகள்: கடந்த பிப்ரவரியில் ரூ.60000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமான ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது கிட்டத்தட்ட ரூ.7,000 தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது.
நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.56,999 க்கும், டாப்-ஆஃப்-தி-லைன் 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.61,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டன.
இருப்பினும் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது, அமேசான் வலைத்தளமானது ஒன்பிளஸ் 11-ஐ வாங்குவதற்கு ரூ.4,000 கூப்பன் தள்ளுபடியை வழங்குகிறது. அதனுடன் ரூ.3,000 என்கிற உடனடி வங்கி தள்ளுபடியும் அணுக கிடைக்கிறது. இப்படியாக ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலையை ரூ.50,000 க்குள் கொண்டு வர முடியும்.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 11 5ஜி ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட், 100W Supervooc ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, 120Hz டிஸ்பிளே, 50எம்பி சோனி IMX581 சென்சார் + 48எம்பி அல்ட்ரா-வைட் + 32எம்பி டெலிஃபோட்டோ ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 16எம்பி செல்பீ கேமரா போன்றவைகளை கொண்டுள்ளது
ஒன்பிளஸ் 11ஆர் மீதான தள்ளுபடி மற்றும் சலுகைகள்: ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் மீது மொத்தமாக ரூ.5000 தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது அமேசான் வழங்கும் ரூ.3000 கூப்பன் தள்ளுபடி மற்றும் எஸ்பிஐ பேங்க் கார்ட்டை பயன்படுத்தும் போது கிடைக்கும் ரூ.2,000 உடனடி தள்ளுபடி, ஆகிய இரண்டும் சேர்த்து ரூ.5000 தள்ளுபடி கிடைக்கும்.
அமேசான் வலைத்தளத்தில், ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.39,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகமான சோலார் ரெட் கலர் ஆப்ஷனுடன் சேர்த்து கேலக்டிக் சில்வர் மற்றும் சோனிக் பிளாக் என மொத்தம் 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஆனது 6.74-இன்ச் கர்வ்டு AMOLED டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட், 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 890 மெயின் சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் + 2எம்பி மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 16எம்பி செல்பீ கேமரா, 5,000mAh பேட்டரி, 100W SUPERVOOC S ஃபிளாஷ் சார்ஜிங் போன்றவைகளை கொண்டுள்ளது.
ஒருவேளை இதே பட்ஜெட் பிரிவில் உள்ள, அதாவது ரூ.40,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் மற்ற ஸ்மார்ட்போன்களை நீங்கள் தேடினால், ஒப்போ ரெனோ 8 ப்ரோ 5ஜி (Oppo Reno 8 Pro 5G), நத்திங் போன் 2 (Nothing Phone 2) மற்றும் விவோ சி27 ப்ரோ 5ஜி (Vivo V27 Pro 5G) போன்ற மாடல்களை கருத்தில் கொள்ளலாம்.
மேற்கண்ட 3 ஸ்மார்ட்போன்களில் முதல் ஸ்மார்ட்போன் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையிலும், பிந்தைய இரண்டு போன்களும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையிலும் போது தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கின்றன. நினைவூட்டும் வண்ணம் பிளிப்கார்ட்டின் இந்த பண்டிகை கால விற்பனையானது அக்.8 - அக்.15 வரை நடக்கும்.


Click it and Unblock the Notifications








