Home
Mobile

அவசரப்பட்டு எந்த போனையும் வாங்கதீங்க: இல்லனா இந்த OnePlus 5G போனை பார்த்து ஃபீல் பண்ணுவீங்க.!

ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் போன்கள்
சற்று உயர்வாக இருந்தாலும், அதற்குத் தகுந்தபடி அனைத்து அம்சங்களுமே இருக்கிறது என்றே கூறலாம்.

OnePlus 11 5G போன்

OnePlus 11 5G போன்

இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் OnePlus 11 5G எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இதுவரை எந்த போனிலும் இல்லாத தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் 11 5ஜி போன் அறிமுகமாகும் என்பதால் அதிக
எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

16ஜிபி ரேம்

16ஜிபி ரேம்

மேலும் தற்போது இணையத்தில் கசிந்த ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம். அதாவது இந்த ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ceramic body மற்றும் 16ஜிபி ரேம் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ceramic body தனித்துவமான மற்றும் பிரீமியம் தோற்றத்தையும் உணர்வையும் தருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2

குறிப்பாக ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனில் அதிகம் எதிர்பார்த்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் உதவியுடன் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் இந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் சிறந்த செயல்திறன் கொடுக்கும் என்றே கூறலாம்.

AMOLED டிஸ்ப்ளே

AMOLED டிஸ்ப்ளே

இந்த புதிய ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் QHD+ AMOLED டிஸ்ப்ளேவுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3,216 X 1,440 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த ஒன்பிளஸ் போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

48 மெகாபிக்சல் அல்ட்ராவைடு சென்சார்

48 மெகாபிக்சல் அல்ட்ராவைடு சென்சார்

இணையத்தில் கசிந்த தகவலின்படி, 50 மெகாபிக்சல் மெயின் சென்சார் + 48 மெகாபிக்சல் அல்ட்ராவைடு சென்சார் + 32 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும் இந்த ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும்.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

குறிப்பாக 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக 5ஜி சேவைக்கு தகுந்தபடி இந்த போன் சிறந்த பேட்டரி பேக்கப் கொடுக்கும். மேலும் 100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த புதிய ஒன்பிளஸ் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 13

ஆண்ட்ராய்டு 13

ஏற்கனவே கூறியபடி இந்த ஒன்பிளஸ் 11 5ஜி போன் 16ஜிபி ரேம் உடன் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு வெளிவரும். அதேபோல் OxygenOS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும்.

 டிசம்பர் மாதம்

ஆன்லைனில் வெளிவந்த தகவலின்படி இந்த புதிய ஒன்பிளஸ் 11 5ஜி போன் வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஒரு நல்ல 5ஜி போனை வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த போன் அறிமுகமாகும் வரை காத்திருங்கள்.

Best Mobiles in India

English summary
OnePlus 11 5G to be launched soon with ceramic body, 16GB RAM: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X