வாங்குனா இப்படி ஒரு ஸ்மார்ட்போன் வாங்கனும்.! OnePlus சொன்ன குட் நியூஸ்.!

|

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் புதிய ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் வெளீயிடு குறித்து தகவல் வெளிவந்துள்ளது. அதாவது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ம் தேதி டெல்யில் நடைபெற இருக்கும் கிளவுட் 11 நிகழ்வில் புதிய ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

இந்த நிகழ்வில் ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் உடன் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலையும் அறிமுகம் செய்ய இருக்கிறது ஒன்பிளஸ் நிறுவனம் அதாவது ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷன்-ஐ தான் அறிமுகம் செய்ய இருக்கிறது ஒன்பிளஸ் நிறுவனம். குறிப்பாக இந்த இயர்பட்ஸ் உடன் பல சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இணையத்தில் கசிந்த ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

வாங்குனா இப்படி ஒரு ஸ்மார்ட்போன் வாங்கனும்.!

புதிய ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் QHD+ AMOLED டிஸ்ப்ளேவுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3,216 X 1,440 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த ஒன்பிளஸ் போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனில் அதிகம் எதிர்பார்த்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் உதவியுடன் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் இந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் சிறந்த செயல்திறன் கொடுக்கும் என்றே கூறலாம். குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ceramic body மற்றும் 16ஜிபி ரேம் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ceramic body தனித்துவமான மற்றும் பிரீமியம் தோற்றத்தையும் உணர்வையும் தருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் அறிமுகமாகும்.

50 மெகாபிக்சல் மெயின் சென்சார் + 48 மெகாபிக்சல் அல்ட்ராவைடு சென்சார் + 32 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும் இந்த ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான படங்களை எடுக்க முடியும். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை
கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன்.

குறிப்பாக 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக 5ஜி சேவைக்கு தகுந்தபடி இந்த போன் சிறந்த பேட்டரி பேக்கப் கொடுக்கும். மேலும் 100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த புதிய ஒன்பிளஸ் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ஒரு சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.

OxygenOS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 11 5ஜி போன் அறிமுகமாகும்.பின்பு இந்த ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும்.

அதேபோல் இந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 ஆனது 11mm மற்றும் 6mm டூயல் ஆடியோ டிரைவர்கள், 45db வரை அடாப்டிவ் ANC வசதி, ப்ளூடூத் 5.2 உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. பின்பு இந்த இயர்பட்ஸ் மாடல் ஆனது 9 மணி நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள சாதனங்கள் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus 11 5G smartphone will be launched in India on February 7 next year: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X