கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ.. போய்த்தான் பார்ப்போம்.. OnePlus 11 5G விலை & விற்பனை!

|

ஒன்பிளஸ் நிறுவனம் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதியன்று பல புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளது. அதில் ஒன்பிளஸ் 11 5ஜி (OnePlus 11 5G) ஸ்மார்ட்போனும் அடங்கும். இதற்கிடையில் குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரம், ப்ரீ-ஆர்டர் தேதி மற்றும் விற்பனை தேதி வெளியாகி உள்ளது!

கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ.. OnePlus 11 5G விலை & விற்பனை!

பிப்ரவரி 7-ல் என்னென்ன OnePlus தயாரிப்புகள் அறிமுகமாகும்?

வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதியன்று ஒன்பிளஸ் 11 5ஜி, ஒன்பிளஸ் 11ஆர் (OnePlus 11R), ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 (OnePlus Buds Pro 2), ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) மற்றும் ஒன்பிளஸ் க்யூ2 ப்ரோ க்யூஎல்இடி டிவி (OnePlus Q2 Pro QLED TV) மற்றும் ஒன்பிளஸ் கீபோர்ட் (OnePlus Keyboard) என பல புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யவுள்ளது.

இருப்பினும் பெரும்பாலான ஒன்பிளஸ் ரசிகர்களின் கவனம் ஒன்பிளஸின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் மீது தான் உள்ளது; அதாவது ஒன்பிளஸ் 11 5ஜி மீதுதான் உள்ளது.

கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ.. OnePlus 11 5G விலை & விற்பனை!

OnePlus 11 5G போனின் ப்ரீ-ஆர்டர் எப்போது தொடங்கும்?

மைஸ்மார்ட்ப்ரைஸ் வலைத்தளம் வழியாக வெளியான ஒரு தகவலின்படி, ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் ப்ரீ-ஆர்டர் ஆனது அறிமுக தேதியின் போதே, அதாவது பிப்ரவரி 7 ஆம் தேதியன்றே தொடங்கும்.

இது ஒன்பிளஸ் நிறுவனத்திடம் இருந்தோ அல்லது ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனை விற்பனை செய்யப்போகும் அமேசான் வலைதளத்திடம் இருந்தோ கிடைத்த அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல என்பதால், இதை மேலோட்டமாக எடுத்துக்கொள்ளும்படி பரிந்துரைக்கிறோம்.

கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ.. OnePlus 11 5G விலை & விற்பனை!

OnePlus 11 5G போனின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்?

பிரபல டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் பகிர்ந்துள்ள தகவலின்படி, ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்படும். அவைகள் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆகும்.

இதில் ஹை-எண்ட் வேரியண்ட்டின் விலை நிர்ணயம், அதாவது 16ஜிபி ரேம் ஆப்ஷனின் விலை நிர்ணயம் ரூ.61,999 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மையிலேயே "கொஞ்சம் ஓவர்" ஆன விலை நிர்ணயம் தான் என்பதில் சந்தேகம் வேண்டாம்!

iPhone: முழுக்க முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்ட இந்திய திரைப்படம்; யூட்யூப்பில் வெளியானது!iPhone: முழுக்க முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்ட இந்திய திரைப்படம்; யூட்யூப்பில் வெளியானது!

OnePlus 11 5G போனின் இந்திய விற்பனை எப்போது தொடங்கும்?

பிப்ரவரி 7 ஆம் தேதி அறிமுகமாகி, அதே தேதியில் ப்ரீ-ஆர்டர்களை பெறும் இந்த ஸ்மார்ட்போன் வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதுவும் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை.

இருப்பினும் இந்த 2023 பிப்ரவரி மாதத்தில் பல நிறுவனங்களின் பல வகையான ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகிறது என்பதால், ஒன்பிளஸ் முடிந்த வேகத்தில் அதன் ஒன்பிளஸ் 11 5ஜி போனின் விற்பனையை தொடங்கும்.

Samsung: திடீர்னு ரூ.15,000 விலைக்குறைப்பு.. செம்ம டிமாண்ட் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்!Samsung: திடீர்னு ரூ.15,000 விலைக்குறைப்பு.. செம்ம டிமாண்ட் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்!

OnePlus 11 5G ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:

- 6.7-இன்ச் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே (குவாட் எச்டி+ ரெசல்யூஷன்; எல்டிபிஓ 3.0 ஆதரவுடனான சாம்சங் இ4 அமோஎல்இடி பேனல்; 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 10-பிட் கலர் கேமட், டால்பி விஷன்; கார்னிங் கொரில்லா கிளாஸ்; 1300 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்; 525 பிபிஐ பிக்சல் டென்சிட்டி)

- இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உள்ளது.
- ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான கலர்ஓஎஸ் 13

- ஓஐஎஸ் ஆதரவுடன் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்890 மெயின் கேமரா + 32எம்பி ஐஎம்எக்ஸ்709 டெலிஃபோட்டோ லென்ஸ் (2 எக்ஸ் ஆப்டிகல் ஜூம்) + 48எம்பி ஐஎம்எக்ஸ்581 அல்ட்ரா-வைட் லென்ஸ் ஆகியவைகளை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் மற்றும் 16எம்பி செல்பீ கேமரா

- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி
- 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000எம்ஏஎச் பேட்டரி.

Best Mobiles in India

English summary
OnePlus 11 5G Smartphone India Launch date Pre order date Price Details First Sale Date Specifications

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X