எதிர்பார்த்த விலை இல்ல., அதைவிட ரொம்ப கம்மி: எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் OnePlus 11 5G!

|

OnePlus 11 5G ஆனது பிப்ரவரி 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் ஒன்பிளஸ் 11 இன் விலை அறிமுகத்திற்கு முன்னதாகவே கசிந்துள்ளது. ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக எதிர்பார்த்ததை விட இந்த ஸ்மார்ட்போனின் விலை குறைவாக இருக்கும் என சமீபத்திய தகவல் வெளியாகி உள்ளது.

OnePlus 11 5G ஆனது பிப்ரவரி 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அறிமுகத்திற்கு முன்னதாக OnePlus 11 குறித்த பல முக்கியத் தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன. ஸ்மார்ட்போன் குறித்து வெளியான அனைத்து தகவலையும் சற்று விரிவாக பார்க்கலாம். டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் வெளியிட்ட கசிவுத் தகவலில், இந்தியாவில் OnePlus 11 5G ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதைவிட ரொம்ப கம்மி: எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் OnePlus 11 5G!

OnePlus 11 விலை

OnePlus 11 விலை குறித்து பார்க்கையில், OnePlus 11 5G இன் விலை ரூ.55,000 முதல் ரூ.65,000 வரையில் இருக்கலாம். அதாவது ஒன்பிளஸ் 11 5ஜி விலை ரூ.61,999 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது ஒன்பிளஸ் 10 ப்ரோவை விட மலிவானது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. OnePlus 10 Pro மாடல் இன் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.66,999 ஆக இருக்கலாம். ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் 10 ப்ரோவின் விலையை குறைத்து அறிவித்தது. இந்தநிலையில் OnePlus 11 ஆனது 10 Pro ஐ விட குறைந்த விலையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

OnePlus 11R

OnePlus 11R ஆனது 5ஜி ஆதரவுடன் பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் 11ஆர் இந்திய வெளியீடு தொடர்பான எந்த விவரங்களையும் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. இருப்பினும் ஒன்பிளஸ் 10 ஆர் மாடலை விட ரூ.3000 - ரூ.5000 வரை குறைவாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

OnePlus 11 சிறப்பம்சங்கள்

OnePlus 11 ஸ்மார்ட்போன் குறித்த பல்வேறு அம்சங்கள் கசிந்துள்ளன. பெரும்பாலான அம்சங்கள் டீனா இணையதளத்தில் காணப்பட்டுள்ளது.

வெளியான தகவலின்படி, OnePlus 11 5G ஆனது 1440 x 3216 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. கேமரா அம்சங்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 50 எம்பி முதன்மை கேமரா, 48 எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் 32 எம்பி மூன்றாவது நிலை கேமரா என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது.

செல்பி ஆதரவுக்கு என ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. கிராவிட்டி சென்சார், டிஸ்டன்ஸ் சென்சார், லைட் சென்சார், ஃபேஸ் அன்லாக் அம்சம் போன்ற ஆதரவுகள் இதில் இருக்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

OnePlus 11 ஆனது பெயரிடப்படாத octa-core செயலி மூலம் இயக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபாஸ்ட் சார்ஜிங் வாட்ஸ் குறித்த விவரங்கள் தெரியவில்லை ஆனால் இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் OnePlus 11 5ஜி குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
OnePlus 11 5G price in India will be cheaper than expected: Might be lesser than OnePlus 10R

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X